Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பன்னெறியியல் > கயமை
365.
தலையே தவமுயன்று வாழ்தல், ஒருவர்க்கு
 இடையே இனியார்கண் தங்கல் - கடையே
 புணராதென்று எண்ணிப் பொருள்நசையால் தம்மை
 உணரார்பின் சென்று நிலை.

(ஒருவருக்கு) தவத்துக்கு¡¢ய செயல்களில் முயன்று வாழ்வது தலையாய (சிறந்த) நிலையாகும்; இனிய குணம் பொருந்திய மனைவியுடன் இல்வாழ்க்கையில் ஈடுபடுதல் இடைப்பட்ட நிலையாகும்; கிடைக்காது எனத் தொ¢ந்தும் பொருள் ஆசையால், தமது பெருமையை அறியாதவர்களின் பின்னே போய் நிற்பது கடையாய கீழான நிலையாகும்

366.
கல்லாக் கழிப்பர் தலையாயார்; நல்லவை
 துவ்வாக் கழிப்பர் இடைகள்; கடைகள்
 இனி துண்ணேம் ஆரப் பெறேமியாம் என்னும்
 முனிவினாற் கண்பா டிலர்.

தலையாய அறிவினர் நல்ல நூல்களைக் கற்று வாழ்நாளைப் பயனுடையதாகக் கழிப்பர்; இடைப்பட்டவர்கள் நல்ல பொருள்களை அனுபவித்துக் காலத்தைக் கழிப்பர். கீழ் மக்களோ உண்பதற்கு இனிய உணவு கிடைக்கவில்லையே, செல்வத்தை மிகுதியாகப் பெற முடியவில்லையே என்னும் வெறுப்பினால் தூக்கம் இல்லாது காலமெல்லாம் வருந்திக்கொண்டிருப்பர்.

கயமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next