Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பன்னெறியியல் > கயமை
367.
செந்நெல்லாம் ஆய செழுமுனை மற்றும் அச்
 செந்நெல்லே யாகி விளைதலால் - அந்நெல்
 வயல் நிறையக் காய்க்கும் வளைவயல் ஊர!
 மகனறிவு தந்தை அறிவு.

நல்ல நெற்களால் உண்டான நல்ல விதைகள் மேலும் அச்செந்நெல்லாகவே விளைவதால், அந்தச் செந்நெல் வயல்கள் நிறைய விளைந்திருக்கும் வளமான வயல்கள் சூழ்ந்துள்ள நாட்டுக்கு வேந்தனே! தந்தையின் அறிவு போலவே மகனுடைய அறிவும் இருக்கும். (நல்ல நெல் விதையினால் நல்ல நெல் விளைவது போல, தந்தையின் நல்ல அறிவினால் மகனுக்கு நல்ல அறிவு உண்டாகும் என்பது கருத்து).

368.
உடைப்பெருஞ் செல்வரும் சான்றோரும் கெட்டுப்
 புடைப்பெண்டிர் மக்களும் கீழும் பெருகிக்
 கடைக்கால் தலைக்கண்ண தாகிக் குடைக்கால் போல்
 கீழ்மேலாய் நிற்கும் உலகு.

மிகுந்த செல்வமுடையோரும், சான்றோரும் தம் நிலைகளிலிருந்து தாழ்ந்து, புறப் பெண்டி¡¢ன் (வைப்பாட்டி) மக்களும், கீழ்மக்களும் உயர்ந்து, கால் பக்கம் இருக்க வேண்டியது தலைப்புறமாகி, குடையினது காம்புபோல், உலகமானது கீழ் மேலாக இருக்கும் தன்மையது. (கீழே இருக்க வேண்டிய குடையின் காம்பு, குடையை வி¡¢த்துப் பிடித்திருக்கும் போது மேலே இருக்கும். அதுபோலக் கீழோர் மேலோராகியிருத்தல் உலக இயல்பாம்).

கயமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next