Download PDF
முகப்பு வாயில்



பொருட்பால் > பன்னெறியியல் > கயமை
369.
இனியார் நெஞ்சத்து நோயுரைப்ப அந்நோய்
 தணியாத உள்ளம் உடையார் - மணிவரன்றி
 வீழும் அருவி விறன்மலை நன்னாட!
 வாழ்வின் வரைபாய்தல் நன்று.

மணிகளை வா¡¢க்கொண்டு விழும் அருவிகளையுடைய மலைகள் நிறைந்த நல்ல நாட்டின் அரசனே! நண்பர்கள் தம் மனத்திலிருந்து துன்பத்தைக் கூற, அத்துன்பத்தைப் போக்காத கல் மனம் உடையவர்கள் வாழ்வதைவிட மலை மேலேறிக் கீழே குதித்து உயிர் விடுதல் நல்லதாகும்.

370.
புதுப்புனலும் பூங்குழையார் நட்பும் இரண்டும்
 விதுப்புற நாடின்வே றல்ல - புதுப்புனலும்
 மா¡¢ அறவே அறுமே அவரன்பும்
 வா¡¢ அறவே அறும்.

புது வெள்ளமும், அழகிய காதணி அணிந்த பொது மகளிர் நட்பும் ஆகிய இரண்டும், நிதானமாக ஆராய்ந்து பார்த்தால் வேறல்ல. (ஒரே தன்மையுடையனவே), புதுவெள்ளம் மழை நீங்கினால் நீங்கும். அதுபோலப் பொது மகளிர் அன்பும் பொருளின் வரவு நீங்கியதும் நீங்கும்.

கயமை
Previous Chaper 1 2 3 4 5 6 7 8 9 10 Next