Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்

ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும்

 

<h5>நீலகேசி உரையாசிกขயர்</h5>

<p>
நூலாசிரியரைப் பற்றி நாம் அறியக்கூடும் செய்திகளைவிட உரையாசிரியரைப் பற்றி அறியப்படுபவை எவ்வளவோ மிகுதி. சிறப்புப்பாயிரச் செய்யுளிலேயே சமய திவாகர வாமனமுனி என்ற அவர் பெயர் தரப்படுகிறது. மேருமந்தர புராணத்தின் முன்னுரையில் அதன் ஆசிரியர் நீலகேசி உரை இயற்றிய வாமனாசாரியர் என்று கூறப்படுகிறது. இது தமிழ்ப் புலவர் வேறுபாடின்றி ஏற்கும் செய்தியாதலால், அதனை இத்துடன் விடுத்து அவர் வாழ்க்கைப்பற்றி அறியப்படும் சில செய்திகளை மட்டும் இங்கே குறிப்போம்.
</p>

<p>
இவர் வாமனாசாரியர் என்றும் மல்லி சேனாசாกขயார் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இவர் மாணவர் புஷ்ப சேனாசாரியார் அல்லது புஷ்ய சேனமுனி என்பவர். இவர் விஜயநகரப் பேரரசை நிறுவிய இரட்டையருள் பின்னவராய புக்கராயரிடம் படைத் தலைவராயிருந்த இருகப்பரின் ஆசிரியர் ஆவர். இருகப்பரும் அவர் தந்தை சைசப்பரும் விஜயநகரத்தை நிறுவியவருள் முன்னவரான ஹரிஹர ராயரின் அமைச்சர்களாயிருந்தனர் என்று அறிஞர் (டாக்டர்) ஹல்ட்ஷ் கூறுகிறார். ஹரிஹர புக்கராயர்கள் காலம் கி.பி. 14-ம் நூற்றாண்டாதலின், சமயதிவாகர வாமனரின் காலமும் கிட்டத்தட்ட அதுவேயாகும்.
</p>

<p>
இவர் அடிக்கடி உபயபாஷா கவிச் சக்கரவர்த்தி என்றழைக்கப்படுகின்றனர். நீலகேசி உரையின் பொருட்செறிவும், செவ்விய சொல்லினிமையும் வாய்ந்த மணிப்பிரவாள நடையையும் நோக்க, இப்பெயர் பொருத்தமானதென்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.
</p>


Top