Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்

ஆராய்ச்சியும் கதைச் சுருக்கமும்

நீலகேசி என்ற பெயரும் கதை மரபும்

நீலகேசி என்ற பெயர், இக்காவியத்தின் கதைத் தலைவியும் நடுநாயக உறுப்புமாகிய நீலகேசியின் பெயரை ஒட்டி எழுந்தது. அவள் பழையனூர் மயானத்திலிருந்து உயிர்ப்பலி கொள்ளும் காளியாகத் தோற்றமளிக்கிறாள். அவள் புகழ் தமிழ்நாடு மட்டுமன்றி வடநாட்டிலும் பரவியிருந்தது. பலியுண்ணும் சிறு தெய்வங்களிடையே அவள் தலைமையிடம் தாங்கியவள். வட நாட்டில் பலாலயம் என்ற நகர்ப்புற மயானத்திலுள்ள காளிக்கு உயிர்ப்பலி செய்யப்படுவதை, முனிசந்திரன் என்ற சமண அறிவன் தடுத்து அதனிடமாக உயிர்கள் போன்ற மண்ணுருக்கள் செய்து அளிக்கும்படி மக்களைத் தூண்டினான். பலாலயத்துக் காளி இது கண்டு மனம் நொந்து, தவ ஆற்றல் மிக்க முனிவனை அணுக அஞ்சி, தன்னினும் பேராற்றல் உடைய பழயனூர் நீலகேசியின் உதவி கோ、னாள். பழயனூர் நீலி அதன்படி முனியை அடைந்து, பலவகைகளில் அவனை அச்சுறுத்தியும் அவன் அசையாதது கண்டு மாயத்தால் வெல்ல எண்ணி, அழகிய நங்கை உருக்கொண்டு, அவனை மயக்கமுயன்றாள். முனியோ, தன் நுண்ணுணர்வால் அவள் மெய்மை கண்டு கூற, அவள் அவர் பெருமையைக் கண்டு அஞ்சிப் பணிந்து நீர் இத்தனை ஆற்றல் அடைந்த வகை யாது என வினவினாள். முனிவர் சமண அறத்தின் வலியை உணர்ந்த அவள், தன் தீ நெறி விடுத்து முனிவர் மாணவியாய், சமண அறம் பயின்று அறிவு தெளிந்தாள். தான் தெளிந்ததுடன் அமையாது, உலகமுற்றும் தெருட்ட விழைந்து அவள் பல இடங்களிலும் வெற்றிபடத் திரிந்து, புத்தர், ஆசீவகர், சாங்கியர், வேதவாதிகள் ஆகிய பல்சமய அறிஞரையும் அடைந்து, வாதில் வென்று, தன் கோட்பாட்டை நிறுவினாள். இக்கதை வாயிலாக ஆசி、யர் பல சமயங்களின் கொள்கைகளையும் வி、த்துரைத்து, அவற்றின் குறைகளையும் சமணநெறியின் நிறைவையும் எடுத்து விளக்குகிறார்.

நீலகேசி காவியத்தில் கூறப்பட்ட நீலகேசி கதை பலவகையிலும் தேவார ஆசி、யர்களால் குறிக்கப்படும் பழையனூர்க் காளி நீலியை நினைப்பூட்டுகின்றது. இப்பழையனூர் எதன் பழையனூர் என்று கூறுப்படுவது. வட ஆர்க்காட்டு வட்டத்தில் தேவார மூவர்களாலும் பாடப்பட்ட திருவாலங்காட்டுப் பதிகங்களில் பழையனூரைப்பற்றிக் குறிப்பிடுகின்றனர்.

திருவாலங்காட்டை அடுத்த இப்பழையனூ、ல் ஒரு காளி கோயில் இருந்தது என்று திருவாலங்காட்டுத் தல புராணத்தில் கூறப்படுகிறது. அப்புராணங் கூறுகிறபடி, பழையனூர்க் காளி, தன் உழையர் (பரிவாரங்)களான சிறு தெய்வங்களுடன் மக்களுக்கும் உயிர்களுக்கும் மிகுதியான அச்சம் விளைத்துவந்ததாகத் தெரிகிறது தேவர்கள்கூட அவள் செயல்கள் கண்டு நடுங்கி வெருவி, தம்மை அவள் கொடுமையினின்று காக்கும்படி திருமாலிடம் சென்று முறையிட்டனர். இக்காளி பார்வதியின் அருள்துணை பெற்றவளாதலால், சிவபிரானிடமே சென்று உதவி நாடுக எனத் திருமால் தூண்டினர். சிவபிரானும் அவளை நேரடியாக எதிர்த்துப் போராடத் துணியாது சூழ்ச்சியால் வெல்லக் கருதி, அவளைக் கூத்துப்போட்டிக் கழைத்தார். அவள் இணங்கவே, தேவர்கள் நடுவண்மையின்கீழ் போட்டி தொடங்கிற்று. காளி கிவபிரானுக்கு எவ்வகையிலும் கூத்தில் இளைக்காததன்றிச் சில சமயம் அவரை மிஞ்சியவளாகவும் காணப்படவே, நடுவர்கள் சிவபிரான் பக்கம் தீர்ப்புக்கூற முடியாது தத்தளித்தனர். இறுதியில் சிவபிரான் சண்டக்கூத்தாடத் தொடங்கினார். சண்டக்கூத்தில் கூத்தர் ஒரு காலைத் தலைக்கு நேரே தூக்கிச் சுழன்றாட வேண்டும். காளியாயினும் பெண் தெய்வமாதலால், நீலி இதைச் செய்யக்கூடாமல் தோல்வியை ஒத்துக்கொண்டாள். இவ்வெற்றியின் காரணமாகச் சிவபிரான் கூத்தரசர் (நடராஜர்) ஆயினார். தலபுராணத்தின் ஆசி、யர் பழையனூர்க் காளியை நீலி எனக் குறித்துள்ளார். சிவஞானசம்பந்தர் தேவாரத்திலும் பழையனூர் நீலி பற்றிய குறிப்புத் தரப்படுகிறது.

சேக்கிழார் தமது (திருத்தொண்டர்) புராணத்தில் தமது பழையனூர் நீலிக் கதை இன்னொருவகைப்பட்டது. பார்ப்பனன் ஒருவன், தன் மனைவியைப் புறக்கணித்துவிட்டுப் பொது மகளிருடன் ஊடாடித் தன் பொருள்களை எல்லாம் தொலைத்தான். ஆதரவற்ற அவன் மனைவி தன் பெற்றோருடன் சென்று வாழ்ந்தாள். கணவன் தன் பொருள் முற்றும் செழித்தபின், மனைவியின் அணிகலன்களைச் சூழ்ச்சியால் கொள்ள எண்ணி, அவள்பால் நேசமுடையவன்போல நடித்து, அவளைத் தன் ஊருக்கு அழைத்துக்கொண்டு வந்தான். ஆனால் வழியில் அவள் அணிகலன்களைப் பறித்துக்கொண்டு அவளையும் தன் பிள்ளையையும் பாழ்ங்கிணறொன்றில் தள்ளிவிட்டுச் சென்றான். மறு பிறப்பில் பார்ப்பனன், வணிகர் குடியொன்றில் பிறந்து பெரும் பொருளீட்டினான். அவன் வருங்கால ஊழை நுனித்துணர்ந்த முனிவர் ஒருவர், வடதிசையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழிப் பயணம் செய்யக்கூடாதென்று எச்சாத்திருந்தார். அதோடு எத்தீமையினும் காப்பளிக்கும் வாள் ஒன்றையும் அவனுக்கு அம்முனிவர் அளித்தார். முனிவர் எச்சாத்த இடம் உண்மையில் முற்பிறப்பில் அவன் தன் மனைவியைக் கொன்ற இடமேயாகும்.

பாழ்ங்கிணற்றில் விழுந்த அப்பெண், அது முதல் அங்கே பேயாய்த் தி、ந்து வந்தாள். இப்பேயே நீலி ஆவள். ஊழ்வினைப் பயனாக வணிகன் பொருள்தேடும் பேரவாவால் உந்தப்பட்டு, முனிவர் எச்சரிக்கையைப் புறக்கணித்து, அவ்விடத்தின் வழியே வந்தான். பேய், மனித உருவில் கைக்குழந்தையுடன் அவனைப் பின் தொடரலாயிற்று. ஆயினும் முனிவர் தந்த வாளின் திறத்தால் அது அவனை முற்றிலும் நெருங்கவில்லை. அது உண்மையில் பெண்ணல்ல; பேயே என்பதை அறிந்து வணிகன் விரைந்து பக்கத்திலுள்ள பழையனூருக்குட் செல்ல, பேய்ப்பெண் கண்ணீரும் கம்பலையுமாக அவ்வூர்ப் பெருமக்களான வேளாளர் எழுபதின்மரிடம் அவனை இட்டுச் சென்று, அவன் மனைவியாகிய தன்னையும் தன் பிள்ளையையும் பொதுமகளிர் பற்றால் துறந்து செல்கிறான் என்றும், தன்னை ஏற்கும்படி அவனை ஊரார் தூண்டவேண்டுமென்றும் முறையிட்டாள்.

வணிகன், தனக்கு மணமோ மனைவியோ எதுவும் இல்லையென்றும், அவர்கள் முன் வாதாடுவது, பெண் அல்ல் பெண் உருவெடுத்துள்ள மாயப் பேயே என்றும் எவ்வளவோ எடுத்துரைத்தும், வேளாளர் அவனைச் சற்றும் நம்பாது அவளை ஏற்க வற்புறுத்தியதுடன், அவள் அச்சந்தவிர்க்கும்படி அவனுக்குத் தீங்குவாராமல் உயிர் தந்தும் காப்பதாகக் கூறினர். நீலி பிள்ளையுடன் வணிகனோடு தங்கினாள். அப்போதும் அவனுடைய வாள், அவள் பழிக்குத் தடங்கல் செய்தது. அவனிடம் இருக்கும் வள் கண்டு தான் அஞ்சுவதாக நடித்து, வேளாளர் மூலம் அதையும் அவள் அகற்றினாள். அதன்பின் அவள், இரவில் வணிகனுடைய உடலைப் பிளந்து குருதி உண்டு, பழிதீர்த்துப் பழையபடி பேயாகச் சென்றுவிட்டாள். இச்செய்திகேட்ட வேளாளர், தம் தவற்றை உணர்ந்து வருந்தித் தம் உறுதிமொழி தவறாது தீக்குளித்திறந்தனர்.

சேக்கிழார் புராணத்திலும், தலபுராணத்திலும், நீலகேசி காவியத்திலுள்ளது போலவே, பழையனூர், நீலிப்பேய் என்ற பெயர் ஒற்றுமைகள் காணப்படினும், சேக்கிழார் புராணத்து நீலி காளியல்லள்; மனித ஆவிவடிவான பேயே. எனவே, சேக்கிழார் புராணக் கதையைவிடத் தலபுராணக் கதையே நீலகேசி காவியத்துடன் மிகுதியும் ஒற்றுமை உடையது.

சமணர் இல்லற வாழ்க்கை முறைப்பற்றிக் கூறும் சமந்தபத்திர அடிகளின் (சுவாமி சமந்தபத்திரான்) இரத்தினகண்டகம் என்ற நூலின் உரையில் இவற்றினும் வேறுபட்ட இன்னொரு பழையனூர் நீலிக்கதை தரப்படுகிறது. இந்நூலில் இல்லறத்துக்குரிய கற்பு (பிரமசரிய) நெறி காத்துப் புகழ் பெற்ற நங்கையர்க்கு எடுத்துக்காட்டாகப் பழையனூர் நீலியின் பெயர் குறிப்பிடப்படுகிறது. உரையாசிரியர் கதையை வி、வாகக் கூறுகிறார். அதன்படி நீலி, வசுபால மன்னன் ஆட்சிக்கு、ய வடநாட்டின் தலைநகரான பிருகு கச்சத்தில் வாழ்ந்த ஜினதத்தன் என்ற வணிகன் மகள். அவள் ஒப்புயர்வற்ற அழகு வாய்ந்தவள். அதே நகால் சமுத்திரதத்தன் என்ற வணிகனுக்கும் அவன் மனைவி சகரதத்தைக்கும் பிள்ளையான சாகர தத்தன் என்பவன் அவள்மீது காதல் கொண்டான். ஆனால் சாகரதத்தன் புத்தர் குடியினனாதலால் நீலியின் பெற்றோர் அவனுக்கு அவளைத்தர மறுத்தனர். சாகரதத்தனோ நீலியையன்றி, வேறெவரையும் மணப்பதில்லை என்று பிடிவாதம் செய்தான். இந்நிலையில் சாகரதத்தனும் அவன் பெற்றோரும் சமணர்போல நடித்து நீலியைப் பெற்றனர்.

நீலி, மணவினையின் பின்தான் இச்சதியை உணர்ந்தாள். ஆனால் மணத்தொடர்பை எவ்வாற்றானும் நீங்க இயலாதன்றோ? கணவனுக்குற்ற கடமையில் தவறாத மனைவியாக நடந்துகொண்டே, அவள் கணவனின் சமயத்திற்குப் புறம்பாய் நின்று சமணநெறியின் தோய்ந்திருந்தாள். அவள் வேட்டகத்தார் இதனை விரும்பாது அவளைப் புத்தநெறியுள் சேர வற்புறுத்தி வந்தனர். இவ்விரண்டகநிலை அவள் உறுதிக்குப் பெருஞ் சோதனையாய் அமைந்தது. ஒரு நாள் புத்ததத்துறவி (பிக்ஷ) ஒருவருக்கு உணவு சமைக்கும்படி மாமன் கட்டளையிட்டான். புத்தரோ ஊனுண்பவர். அவளோ, ஊனைக் கனவிலும் கருதத்துணியாத சமணநெறியினள். என் செய்வாள் பாவம். இருதலையும் செல்லமுடியாது அவள் ஒருவகை நடுநிலைச் சூழ்ச்சிகண்டாள். அவள், புத்தித்துறவி அணிந்திருந்த தோல் மிதியடியுள் ஒன்றையே எடுத்துத் திறம்படச் சமைத்துக் கறியாக்கி உண்பித்தாள். ஆனால் துறவி விடைபெற்றுப்போக முயலும்போது மிதியடி ஒன்று காணாது தேட, நீலி அவன் உண்டது மிதியடியையே என்று கூறினாள். கணவனும், மாமன் மாமியரும் அடக்கொணாச் சினம் கொண்டும் தேள் கொட்டிய திருடன்போல அதை விள்ளவும் மாட்டாமல் கொள்ளவும் மாட்டாமல் திகைத்தனர்.

பழிக்குப்பழி வாங்கும் முறையில், அவர்கள் நீலியின் கற்பின்மீது பழிசுமத்தி ஒதுக்கலாயினர். நீலி, அதுகேட்டுப் பதைபதைத்தாள். ஆனால் தெய்வம் ஒன்று அவள் கற்பின் திறத்தை மெய்ப்பிக்க ஒருவழி கோலிற்று. அதன் செயலால் நகான் கோட்டைவாயில் அடைப்பட்டு யாராலும் திறக்க முடியாது போயிற்று. அக்கால மக்கள் கற்பின் திறத்தில் நம்பிக்கை கொண்டார்கள். எனவே, அரசன் ஆணையால் நகரப் பெண்கள் சகலரும் வந்து கதவைத் திறக்க அழைக்கப்பட்டனர். யாராலும் அது அசையவில்லை. ஆனால் நீலி சென்று தொட்ட அளவில் அது திறந்தது. அவள்மீது வேட்டகத்தார் சுமத்திய பழிமொழி அவளுக்கு மேலும் புகழ் தந்ததேயன்றி வேறன்று.

இரத்தினகரண்டகத்தின் நூலாசி、யர் சமந்தபத்திர அடிகள் காலம், கி.பி. இரண்டாம் நூற்றாண்டாதலால், நீலி பற்றிய இக்கதை இதனினும் பழைமையானதாதல் வேண்டும். அதோடு அவர் தமிழ் நாட்டவர் என்பதும், அவர் வாழ்ந்த ஜினகாஞ்சி, கிறிஸ்தவ ஊழித் தொடக்கத்தில் சமணநெறியின் தலைமையிடமாயிருந்தது என்பதும் கவனிக்கத்தக்க செய்திகள்.

இங்ஙனம் பல நூல்களிலும் கூறப்படும் இந்நீலிக் கதை மிகப் பழமைவாய்ந்ததொன்றாகும். காலப்போக்கில் அது பலபடியாக மாறுதலுற்று மேற்சொன்ன மூன்று நூல்களிலும் மூன்று வகையாகக் கூறப்படுகிறது. நீலகேசியின் கதை தலபுராணக் கதையையும் சேக்கிழார் கதையையும்விட இரத்தின கரண்டக உரைக் கதையையே மிகுதியும் ஒத்திருக்கிறது என்னலாம். ஆயினும், நீலகேசி காவியம் கதையை அடிப்படையாகக் கருத்தாகக் கொண்டதன்று. சமயக் கொள்கைகளை அலசி விளக்கவந்த நூலே. அவ்விளக்கங்களை நோக்க ஒரு நூலாகமட்டுமே கதை உதவுகிறது. ஆகவே கதைப் பகுதியை ஆராயவேண்டிய நிலைமைக்கே இடமில்லை. அது மக்கள் மரபுரைகளில் கண்ட பெயர்களையும், செய்திகளையும், தம் சமய விளக்கத்தின் சட்டமாய் அமையும்படி ஆசிரியர் புனைந்த புனைவேயன்றி வேறன்று. ஆசிரியரே இக்கதை தம் மனத்திரையில் கண்ட புனைவுக் காட்சி என்று கூறுகின்றார்.

Top