Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
150.
கொல்லை முல்லைபைங் கோங்குருந்தங் கோடறண் குரவ
நல்ல மல்லிகை நறவம்ஞாழல் தாழைபுன் னாகம்
பல்லி தழ்ப்பனிக் குவளை பானல் பாதி¡¢ பிறவு
மெல்லை யின்மல ரேந்தி றைவன திடவகைக் கெழுந்தாள்.
151.
நீட்சி யோக்கமோ டகலநினையநின் றெங்கணு நோக்கி
மாட்சி யால்வலங் கொண்டுமாதவத் திறைவனிற் பிழையாக்
காட்சி யேனெனி லெல்லாக்கதவமுந் திறக்கெனத் திறப்ப
வாட்சி மூவுல குடையவடிகட மடியிணை தொழுதாள்.
152.
அத்தி யாளியோ டாமானட்ட மங்கல மா¢ய
பத்தி பாவைபல் பறவைபயில்கொடி திமிசொடு பிறவும்
வித்த கம்பொ¢ துடையவசித்திர வுருவநன் மலராற்
சித்த நன்னெறி பயந்தான்திருவடிக்கு அருச்சனை செய்தாள்.
153.
தூமஞ் சாந்தொடு சுண்ணந்துதியொடு பரவுபு தொழுதே
தாமந் தாழ்தர நாற்றித்தத்துவ தா¢சிய துருவே
யாமென றையென வியந்தாங்கன்ன வாயிரத் தோரெண்
ணாம நல்லிசை தொடுத்துநாதகீ தங்களை நவிற்றும்.
154.
கன்று காலனைக் கடந்தாய்காதற் காமனைக் கடிந்தாய்
தொன்று மூத்தலைத் துறந்தாய்தோற்ற மாக்கட லிறந்தா
யொன்ற நோய்பகை யொருங்கே யுடைந்து வெங்களத் துதிர
வென்றி ருந்தனை நீயே வீரர்தம் வீரர்க்கும் வீரா.
155.
சாத னோய்சரை பிறவிதாஞ்செய் திவினைக் கடலுண்
மாது யருழந் துறுநோய்மறுகு மன்னுயிர்க் கெல்லாந்
தீதி னன்னெறி பயந்துதிரைசெய் நீள்கரை யொருவிப்
போத ரும்புணை படைத்தாய்புலவர்தம் புலவர்க்கும் புலவா.

உரை Previous Next Top குண்டலகேசி வாதம் :
வது பக்கம்