Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
795.
மண்டிலம் பலரையு நிறுவி மத்திமங்
கொண்டுநின் றான்றிசை கூறு மின்னென
வெண்டிசை யவன்வயிற் பிறக்கு மென்பவேற்
கண்டில நின்பொருள் காட்ட வல்லையோ.
796.
அத்திசை யவனுமா யல்ல னும்மென
வெத்திசை யவர்களு மிசைப்பி னேகநீ
பத்திசெய் தினியென்னைப் பரமன் பாதமே
சித்தியு முடிவெனச் சேர்ந்து வாழ்தியே.
797.
மன்னுமம் மனமெனப் படுவ தாவதே
யின்னுயி ருருவினோ டியைந்த வொற்றுமை
யின்னுமக் காலமு மிருமைத் தாகலி
னின்னுடைப் பொழுதவ ணிற்ற லில்லையே.
798.
குணங்களுந் தொழில்களுங் கூறி வேறெனிற்
பிணந்தனைச் சீவனாய்ப் பெற்ற தென்னையோ
வுணர்ந்தில னுரையுமொன் றிலனெனி னுறுதிநாம்
புணர்ந்தில மவன்வயிற் போந்த தில்லையே.
799.
எப்பொரு ளெக்குணத் தானு மில்லையே
லப்பொரு ளக்குணத் தயல தாதலாற்
செப்பிலக் குளி¡¢னாற் றீய துண்மைபோற்
றுப்பெனப் பொருள்களுந் தோற்ற மில்லையே.
800.
குணத்தொடு குணிகளைக் கூறி வேறெனப்
புணர்ப்பதோர் பொருளினை வேண்டிற் பொய்யெனிற்
குணத்தொடு குணிகளுங் கூட்ட மின்மையா
லுணர்த்துதற் கா¢தவை யுளவு மல்லவே.

உரை Previous Next Top வைசேடிக வாதம் :
வது பக்கம்