Download PDF Version
முகப்பு வாயில்

உள்ளடக்கம்
256.
நிலையா வெனெச்சொல்லி நேர்ப்ப பொருடூயே
மலையோ ரனையந்ன் மாட மெடுப்ப
விலையே யுயிரென் றிறந்த நினைப
புலைசே யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே
257.
மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை
யசிப்பன வேபோ லமர்ந்ததிருந்த துண்ணுஞ்
சயித்தியங் காணித் தலையினை முட்டும்
பயித்தியங் கொண்டவர் பண்புமா· தொக்கும்
258.
புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை
மத்தகத் தேத்தி வணங்கி வழிபடுஞ்
செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு
மத்த  னுடைய வருள்வகை வண்ணம்.
259.
பேனறாக் கூறை பெருமுடுகுநாறுமேற் றுக்கந் துக்கம்
மானறா நோக்கி மணற்சுமையுந்தான்பொ¢தாற் றுக்கந் துக்கந்
கூனிறாக் கண்டாலுங் கொள்ளமுடியாதேற் றுக்கந் துக்கந்
தானறாப் ப·றொழிலுந் தான்றுக்கமாதலாற் சருவ்வந் துக்கம்.
260.
பொய்பொத்திச் சொல்லினவும்போங்கூலி கொண்டனவும்
வையத்தஞ் சுட்டனவும்வாழ்மருது கொன்றனவும்
கையத்தி னூனுக்கேகன்றிக் கலாய்த்தனவு
மையத்தை யின்றியடுப வாலோவழல்நரகத் துள்ளேயடுப வாலோ.
261.
பற்றே மிகப்பெருக்கிப் ப·றொடர்ப்பா டேயாக்கி
யற்றீர் போற் காட்டி யடைக்கலமே வவ்வுநீர்
பெற்றீரே பேயுடம் பன்றேற் பெரும்பாலு
மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ
விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ.

உரை Previous Next Top அர்க்க சந்திர வாதம் :
வது பக்கம்