Download PDF Version
Ӹ š¢

Ǽ

Ţ

 
வேத வாதம் அல்லது மீமாம்சை

வேதவாதியின் அடிப்படைத் தத்துவம் வேதத்தை ஏற்றுக்கொள்வதே. வேதம் காலம் கடந்தது; ஆக்கிய முதல்வனற்றது; அழியாதது. அதனை அடிப்படையாகக் கொண்டு அதனை ஏற்கும் எல்லா வகைப்பட்ட நெறிகளும் சமய முறைகளும் அதன் கிளைகள். 25 மெய்ந்நிலைகளை (தத்துவங்களை) ஏற்கும் சாங்கியம், 6 முதல் நிலைப் பொருள்களை (பதார்த்தங்களை) ஏற்கும் வை சேடிகம், படைப்புக் கொள்கையை ஏற்கும் படைப்பு வாதம் (சிருஷ்டிவாதம் கடவுட் கொள்கை உடைய கடவுள் நெறி (பிரம்மவாதம்) ஆகிய கொள்கைகளும், வைணவம் மாகேசுரம், பாசுபதம், பாஞ்சராத்திரம், பாரிவிராஜிகம் ஆகிய சமய முறைகள் யாவும் வேதவாதிக்கு அவன் தலைமை ஏற்கும் கிளைச் சமயங்களாகும்.

கொலை வேள்வி முறை வேதவினைகளின் அடிப்படை (உபா சரவசுவின் கதை, இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு எதிர்ப்பை விளக்குகிறது). வகுப்பு வேற்றுமை ஜாதி வித்தியாசம்) அவன் உலகியல் ஒழுக்க முறையின் அடிப்படைச் சட்டமாகும். நீலகேசி வேதவாதத்தை இறை மறுப்பு நெறி (நாஸ்திகம்) என்கிறாள்.


Top