Download PDF Version
Ӹ š¢

Ǽ

Ţ

 
பூத வாதம்

பூதவாதம் சார்வாகம் என்றும், வோகாயதம் என்றும் வழங்கும்.

நீலகேசியில் பூதவாதம் விளக்கும் ஆசியர் பிசாசகர்.

பொருள்களையன்றிப் பண்புகளைத் தனிப்பட்டவையாகப் பூதவாதி ஏற்பதில்லை. அவன் ஏற்கும் மெய்ப் பொருள்கள் ஐம்பூதங்கள் மட்டுமே. அவை தீ, மண், நீர், காற்று, வெளி என்பவை. தீயின் ஆற்றல் கண்ணிலும், செயல் நிறத்திலும் தோற்றும் மண்ணின் ஆற்றல் மூக்கிலும், செயல் மணத்திலும் காணப்படும். இங்ஙனமே நீருக்கு நாவும் சுவையும்; காற்றுக்கு உடலும் ஊறும்; வெளிக்குச் செவியும் ஓசையும் ஆற்றல், சான்ற உறுப்புக்களாகவும் செயல்களாகவும் அமையும்.

பொருண்மை விளக்க வகையில் பூதவாதி ஒண் கூடு (பிரத்தியக்ஷம்) ஒன்றையே விளக்க (பிரமாண) மாகக் கொள்வான்.

ஐம்பூதங்களும் என்றுமுள்ள மெய்ப்பொருள்கள். அவற்றின் கலப்பே உலகம். அதற்குப் படைப்பு, அழிவு கிடையாது.

மா, வெல்லம் முதலிய ஐம் பொருளும் சேர்ந்து மது சாரம் உண்டாவதுபோல், ஐம்பூதத்தினின்று உண்டாகும் தன்மையே உயிரின் செயல்போலத் தோன்றியது. உண்மையில் உடலன்றி உயிருமில்லை. முற்பிறப்பு, மறு பிறப்பு என்பதும், மேலுலகு, கீழுலகு, துறக்கம், நரகம், நல் வினை, தீவினை, தவம், ஒழுக்கம் யாவும், பொதுமக்களை மயக்கச் சூழ்ச்சியாளர் ஏற்படுத்திய பொய் மூட்டைகள்.

குறிப்பு : நீலகேசியில் கண்ட பூதவாதத்துக்கும், மாத வாசாரியரின் சர்வ தரிசன சங்கிரகம், சங்கராசாயான் சர்வ சித்தாந்த சங்கிரகம் ஆகியவற்றில் கண்ட பூதவாதத்துக்கும் சில அடிப்படை வேறுபாடுகள் உண்டு. நீலகேசிப் பூதவாதம் ஐம்பூதங்களை ஐந்தெனக் கொள்கிறது. ஆனால் பின்னாளில் பூதவாதிகள் நான்கே ஏற்றனர். கண்கூட்டு விளக்கமே ஏற்ற அந்நெறியினர், கண்கூடாக விளங்காத வெளியே நீக்கினர். நீலகேசி காலத்தால் முந்தியதென இச்செய்தியும் காட்டும். மகாபாரதத்திலும் பூதவாதத்தின் முதல்வரான பிருகஸ்பதி ஐம்பூதங்களைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது.

பூதவாதிகளும், சமணர்களைப் போலக் கொலை வேள்விகளை எதிர்த்துக் கொல்லாமையை மேற்கொண்டனரெனினும், பிற்காலத்தில் இன்பமே அறம் எனக் கொண்டு வேறுபாடுற்றனர். (பிருகஸ்பதிக்குப் பின் இந்நெறியைச் சார்வாகன் புதுக்கி வேறுபடுத்தியிருக்கலாம்).


Top