முகப்பு வாயில்

 

'தாங்கள் இயற்றிய "அருகப்பெருமானைப் போற்றும் இன்னிசைப்பாடல்கள்" தனித்தன்மைவாய்ந்தவை. இன்னிசையில் தோய்ந்து வருமானால் செவிக்குத் தேன் என இனித்து சிந்தையை ஆனந்தக்கடலில் தினைக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை.'
புலவர். மு. இராமசாமி.
தமிழ் ஆசிரியர், இராசிபுரம், சேலம் மாவட்டம்.

'தங்கள் தோத்திரப் பாடல்கள் எளிமையும் இனிமையும் வாய்ந்து மனத்தை உருக்குகின்றன. இப்பாடல்களை வானொலியில் அடிக்கடி பாடச் செய்யுங்கள்.
புலவர். S.K. இராமராசன்.
தமிழ் ஆசிரியர், வேலூர், சேலம் மாவட்டம்.

'தங்கள் இன்னிசைப் பாடல்கள் நம்சமயத்திற்கேயன்றி ஏனையமக்களுக்கும் உரித்தான அறநெறிகளும் வரலாற்றுச் சிறப்பும் கொண்டு இலங்கும் இயல்புடன் விளங்குகின்றன. தங்கள் நுண்மாண்நுழைபுலத்தையும். புலமையின் சிறப்பையும் விளக்கி நிற்கின்றன எனில் மிகைப்படக் கூறுவதன்று'
வித்துவான் S. தன்யகுமார் ஜெயின்
தமிழ் ஆசிரியர், பொன்னூர்

சுதேசிமித்திரன். 28-8-67.

"பண்டைத் தமிழகத்தின் இசைச் சிறப்பை உணர்த்தும் நூல்களும் தலைமையாய சிலப்பதிகாரம், ஜீவகசிந்தாமணி ஆகிய நூல்களின் ஆசிரியர்கள் ஜைனத் துறவிகளாவர். ஜைனர்கள் தொழும் அருகப்பெருமான் மீது ஸ்ரீ டி.எஸ். ஸ்ரீபால் இயற்றியுள்ள தமிழ்ப் பாடல்கள் சொற்சுவை, பொருட் சுவை மலிந்து மிளிர்கின்றன. ஹம்சத்வனி, சுருட்டி, தன்யாசி போன்ற ராகங்களில் அமைந்துள்ள இப்பாடல்களையும் இசை வல்லுனர்கள் பாடி வழக்கில் கொண்டுவருதல் சாலவும் பொருத்தமாகும். குறிப்பாக ஜைன பக்தர்கள் தமது வழிபாட்டின்கண் மனமுருகிப் பாடி இன்புறுதல் ஏற்பாகும்."

அன்பன்
கே. எஸ். வேங்கடராமன்,


நூல் அரங்கு

அருகப் பெருமானைப் போற்றும் இன்னிசைப் பாடல்கள்

வெளியிட்டோர்:
திரு. V.A. சின்னதம்பி நயினார்,
திருமதி. எஸஸ்வதி அம்மையார்,
ஆலக்கிராமம், தென்னாற்காடு மாவட்டம்.

ஜீவபந்து திரு. டி. எஸ். ஸ்ரீபால் அவர்கள் அருகப் பெருமான்பால் பக்திப்பெருக்கோடுபாடிய இன்னிசைப் பாடல்கள் பலவற்றை இந்நூல் கொண்டு திகழ்கிறது. இடையிடையே திருக்கலம்பகம், ஜினேந்திரஞானத் திருப்புகழ், தோத்திரத்திரட்டு, அவிரோதி நாதர் திருவெம்பாவை, சீவகசிந்தாமணி, ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் ஆகியவற்றின் பக்திப் பாடல்களும் இடம் பெற்றுள்ளன. இந்நூலில் உள்ள பாடலகள் 4-3-66 அன்று கரந்தை ஸ்ரீ குந்துநாத தீர்த்தங்கரர் ஜினாலயத்தில் இசைக் செல்விகளால் பாடப்பெற்றன. அவர்கள்தம் இனிமையான குரலில் கேட்போர் அனைவருடைய நெஞ்சம் நெகிழும்வண்ணம் பாடி மகிழ்வித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திரு. ஸ்ரீபால் அவர்கள் பாடியுள்ள இன்னிசைப் பாடல்கள் அன்பு அறம், ஒழுக்கம், அருகப் பெருமானின் தன்மைகள் இன்னோரன்னவைகளை சீரிய செந்தமிழில் உணர்த்துகின்றன.

"சீலம் ஒன்றே சீரிய தென்றே
செப்பிய ஜினனே சிந்தைகொண் டனனே"

இவ்வடிகளில் அவர் ஒழுக்கத்தை வற்புறுத்துவதைக் காண்க.

நாட்டிலே மிக மேன்மையாவது அன்புதான் என்பதை அவர் மிக அழகாக வற்புறுத்திக் கூறியுள்ளார்.

"நாட்டிலே மிகமேன்மை
யாதென்றுதேடி-ஓடி

நானலைந்தே னெங்குமொரு
பித்தன்போலாடி

ஒன்றுந் தோன்றாது
கடலோரந் தனிலே-வாடி

உண்மையைச் சிந்தித்
திருக்கும் வேளையினிலே

என்றுமி லானந்தத்துடன்
உள்ளத்தினின்றே-ஓசை

எழுந்தது அன்பு
அன்பு அன்புதானென்றே"

"அருகர் சிறப்பு" என்ற தலைப்புடைய பாடல் 'இரகுபதி இராகவ' மெட்டில் அருகப் பெருமானுடைய தன்மைகளைத் தொகுத்துக் கூறுகிறது. இதுபோன்று அருகப் பெருமானுடைய பெருமையை நம் நெஞ்சம் கவரும் வண்ணம் எடுத்துரைக்கும் பாடல்கள் பல உள்ளன. இந் நூலின் வாயிலாக ஜீவபந்து திரு.டி.எஸ். ஸ்ரீபால் அவர்கள் தமிழுலகுக்குச் இசைத் தமிழை வழங்கியுள்ளார். - கலைக்கதிர், ஜுன் 1967.

நித்திலக்குவியல்

ஆகஸ்ட் 1967

இந்நூல் கரந்தை முனிகிரி ஜினாலயத்தின் நடைபெற்ற ஸ்ரீ குந்துநாத தீர்த்தங்கரர் பிரம்மோற்சவத்தில் 4-3-66 அன்று இசைக் குழுவினர் நிகழ்த்திய இன்னிசை விழாவில் பாடிய பாடல்களில் தொகுப்பு.

வரலாற்றுக் காலம் முன்னர்த் தொடங்கிச் சமணர்கள் தமிழுக்குத் தொண்டாற்றினர். அவ்வழியிலே இயல் இசை நாடகத் தமிழ் வளரச் சமண நெறிநின்று தொண்டுபுரிகின்ற ஸ்ரீ ஜீவபந்து ஸ்ரீபால் அவர்கள் இயற்றிய இசைத் தமிழ்ப்பாடல்களும், சீவகசிந்தாமணி முதலான சமண சமய நூல்களில் அமைந்த இன்னிசைப் பாடல்கள் ஒரு சிலவும் கொண்டு விளங்குகிறது இந்நூல்.

இன்றைய இசையமைப்பை ஒட்டி ஸ்ரீபால் இயற்றியுள்ள பாடல்கள் சொற்சுவையும் பொருட்சுவையும் சமண சமயக் கருத்துக் சுவையும் பொருத்திச் செவிக்கும் சிந்தைக்கும் பெருவிருந்தாக உள்ளன. கெளா மனோஹா இராகத்தில் அமைந்த "காலம் வீணே கழித்தனன் யானே" என்று தொடங்கும் பாடல் இதற்கு எடுத்துக் காட்டு. "ரகுபதி ராகவ" என்ற மெட்டில் இயற்றிய 'அருகன் நாமமே ஆனந்தம்" என்று தொடங்கும் பாடல் அருகநெறியில் பக்திச் சுவைக்குப் புதுவழி அமைத்து நல்ல திருப்பு மையமாக உள்ளது. சமண சமயத் தத்துவக்கருத்துக்களுக்கு இசை வடிவத்தை அளித்து அனைவரும் எளிதில் உணர்ந்து கொள்ளும் வண்ணம் பாடல்கள் திகழ்கின்றன. ஓசை தரும் இன்பம் அன்றோ" என்று பாரதி கூறிய வாக்கு இப்பாடல்களைப் படிக்கும் பொழுது உண்மையாவதை உணரலாம்.

தமிழன்னை புதியதாகப் புனைந்து கொண்ட அணிகளில் இந்நூலும் ஒன்று. இது எல்லா நூல் நிலையங்களையும் அணிபெறச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
- என். கிருஷ்ணமூர்த்தி

ஸ்ரீ அருகப்பெருமான் சரணம்

'மூவா முதலா'

இராகம்; ஹம்ஸத்வனி விருத்தம்

மூவாமுதலா வுலகம் ஒரு மூன்றுமேத்தத்
தாவாத வின்பந் தலையாயது தன்னினெய்தி
ஓவாது நின்ற குணத்தொண்ணிதிச் செல்வனென்ப
தேவாதி தே னவன்சேவடி சேர்துமன்றே.
-ஜீவக சிந்தாமணி

1. 'கருணைக் கடலே'

இராகம்: ஹம்ஸத்வனி தாளம்: ஆதி

பல்லவி

கருணைக் கடலே கைலைநாதனே
கடையிலா மெய்ஞானக் கடவுளே கண்பாராய்
(கருணை)

அனுபல்லவி
சரணமாகி மக்கள் சாமிநின் முன்னின்று
சற்குணம் பயின்று சார்ந்தனர் வீடன்று (கருணை)

சரணம
விரதமேது வேறே விண்ணோரேத்தும் தேவே
வேண்டினேனே கொல்லா விரதமோதும் நாவே
பரதம்போற்றும் தர்மம் பல்லுயிர்க்கும் இன்பம்
பண்பினைப் பயக்கும் பழவினைகள் போக்கும். (கருணை)


 

1   2   3   4   5   6   7


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com