முகப்பு வாயில்

 

2. 'ஆதி மூர்த்தியே'

இராகம்: காம்போஜி தாளம்: ஆதி

பல்லவி
ஆதிமூர்த்தியே அறம்சாற்றினை
அருள்காத்தனை அறிவூட்டினை (ஆதி)

அனுபல்லவி
வேதமுதல்வா வினைவென்றவா
விசும்பரசர் போற்ற வீடு பெற்றவா (ஆதி)

சரணம்
போ˘ருள் பிறவிப் பெருந்துயரை மேவிப்
பேதுறாது மக்கள் போ˘ன்பப் பேறடைய
பாரதனை யாளும் பதம்பெற் றுயர்ந்தும்
பற்றறத் துறந்தாய் பாதைகோலி நின்றாய் (ஆதி)

3. 'மூவா முதல்வா'

இராகம்: ஸிம்மேந்திர மத்யமம் தாளம்: ஆதி

பல்லவி
மூவா முதல்வா முக்குடைச் செல்வா
தாவாத இன்பம் தழுவிய தலைவா (மூவா)

அனுபல்லவி
தேவாதி தேவனே திருமறு மார்பனே
கோவே குணக்குன்றே கோமானறிவனே (மூவா)

சரணம்
உடலெலாம் உயிரெலாம் உணர்வெலாம் உளமெலாம்
உனதறமன்றி வேறொரு பொருள் வேண்டிலேம்
கடல்மணல் போன்ற கணக்கிலாப் பிறப்பெல்லாம்
கடந்து கரைசேரும் கருத்தினைக் கொண்டனம். (மூவா)

4. 'தாமரை மலரே'

இராகம்: அடாணா தாளம்: ஆதி

பல்லவி
தாமரை மலரே தவம்பல செய்தனை
தாங்கி நின்றாய் எம்மானை (தாமரை)

அனுபல்லவி
சாமி யருகனவன் சாற்றிய நன்னெறியே
சகல உயிர்கட்கும் சார்ந்த அருள்நெறியே (தாமரை)

சரணம்
பேரருளான் அருகன் பேசிய நல்லறங்கள்
பெற்றி யறிந்தின்றே மேணுவோம் வாழ்வில்நின்றே
நற்காட்சி நல்ஞான நல்லொழுக்க மாமணிகள்
நலிவுசெய் வினைபோக்கும் நமதுபிறவி நீக்கும்.
(தாமரை)


5. 'அறவுரை அளித்தவனே'

இராகம்: கல்யாணி தாளம்: ஆதி

பல்லவி
அறவுரை அளித்தவனே ஆருயிர் போற்ற (அற)

அனுபல்லவி
செறிவன் ஜினேந்திரன் சீர்சால் எண்குணன்
செய்வினை வென்ற சித்த னாம்உயர் (அறவுரை)

சரணம்
திங்கள்போல் மூன்று குடையுடை நாதன்-தெய்வத்
திருப் போதன்-செம்மலர்ப் பாதன்
முழுதுணர் ஞான மெய்மூர்த்தி நீயே
மொய்ம்மலர் பிண்டிகீழ் சோதி நீயே
மோன ஞான குணமே மிகுத்த முனி
கணங்க ளேத்தும் உயர்மகா வீரன் நீயே (அறவுரை)


6. 'தேவாதி தேவா'

இராகம்: சுருட்டி தாளம்: ஆதி

பல்லவி
தேவாதி தேவா நின்பாதார விந்தம்
சேவை பேரானந்தம் நீதம் (தேவா)

அனுபல்லவி
கேவல ஞான கிளரொளி நாதனே
மேவினை எண்குணம் மிளிர்மலர் பாதனே (தேவா)

சரணம்
உலகெலாம் உம்பரெலாம் உயர்தவ முனிவரெல்லாம்
உனையலால் தெய்வம்வேறு உண்டோவென மகிழ்ந்தே
உலகக் குருவாயேத்தி உனதறம் தினம்பாடி
உயர்நிலையேகினர் உணர்ந்தே அடைந்தேன் நாடி
(தேவா)

வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றவா
சொலற்கரும் மெய்ப்பொருள் முழுவதும் சொன்னவா
அருவினை வெல்பவர்க்கு அரும்புணை யானவா
ஒருவனேயாகி உலகெலாம் உணர்ந்தவா (தேவா)

7. 'தீவினைகாள்!! இன்றே விலகுங்கள்'

இராகம்: பந்துவராளி தாளம்: ஆதி

பல்லவி

என் செய்வீர் தீவினைகாள்! இன்றே விலகிடுவீர் (என்)

அனுபல்லவி
சின்னஞ்சிறிய பிழை செய்யினும் சீறிவாĄŁர்
முன்னாள் புரிந்ததோடு முடிக்கவும்-துடிக்கின்றீர் (என்)

சரணம்
கடலினும் பெருந்துன்பம் கடிதினிலாற்றிடவே
காலம் கருதும் உமது கடுஞ்சிறையகலவே
குடை மூன்றுடைய கோமான் படைமூன்றும் திரட்டியே
கொண்டனம் பாĄŁர் எம்தலைமீ தவரடியே (என்)

8. 'நித்தம் ஆதி பகவனை'

இராகம்: ஸ்ரீரஞ்சனி தாளம்: ஆதி

பல்லவி
நித்தம் ஆதிபகவனை நாடுவாய்
நீடு வாழும் நிலைதனை கூடுவாய் (நித்தம்)

அனுபல்லவி
உத்தம னாமவன் உணர்த்திய நன்னெறி
உயிர்களி னிடரை ஓட்டிடும் உயர்நெறி (நித்தம்)

சரணம்
கல்வி யறிவெலாம் காட்டினன் அவனே
கருணை உள்ளமே கொண்டிச் சொன்னவன்
நல்வினை தீவினை தன்மையறிந் துநீ
நல்லறப் பண்பினைப் பயின்றிடும் உள்ளத்தால்
(நித்தம்)


 

1   2   3   4   5   6   7


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com