முகப்பு வாயில்

 

15. 'பிறந்தேன் இனிப்பிறவேனே'

இராகம்: ஹம்ஸாநந்தி தாளம்: ஆதி

பல்லவி
பிறந்தேன் இனிப்பிறவேனே-பிறவா
பெருமா நின்பேரறம் பெற்றேனே (பி)

அனுபல்லவி
மறம்கொண்ட தீவினை வலிமாய்ந்ததே
மாண்புடையாய் நின மலரடிகள் மனம்புகுந்ததே (பி)

சரணம்
அறியாயென் அகமதிலே கருணைமுகில் அலையாகி
அருள்மழையாய்ப் பொழிந்திருகண்களில் ஆறாகி
குறையில்லா அன்புவெள்ளம் கரைபுரளக்கொண்டேன்
குணம் கண்டே மனம் விண்டே கூறாநின்றேன் (பி)

16. 'தேனினங்கள் பாடும்'

இராகம்: தில்லானா தாளம்: ஆதி

தேனினங்கள்பாடும் தேமலர் அசோகா
தேங்கும் உயிர்க்கறம் செப்பிடும் அசோகா
வானதேவர் போற்றவந்தபதத்தனே
வருகையிலா நகர்வாழும் பதத்தனே (தே)

குறிப்பு:- இரு பொருள் விளக்கம்
அசோகனே-அசோக மரத்தையுடையவனே
அசோகனே-சோக மில்லாதவனே
பதத்தனே-அடிகளையுடையவனே
பதத்தனே-பதியை அதாவது வீடு பேற்றை உடையவனே

17. ' செந்தமிழ் மொழிபடைத்தாய்'

வரலாற்றுக்கெட்டாத ஆதிகாலத்தில் முதன் முதல் பிராமி என்னும் தாமிழி எழுத்தாகிய தமிழ் எழுத்துக்களைப் படைத்து அறவுரை வகுத்தருளிய பகவான் விருஷப தேவரைப்போற்றும் அரிய வரலாற்றுப் பாட்டு.

இராகம்: சண்முகப்பிரியா தாளம்: ஆதி

பல்லவி
செந்தமிழ் மொழி படைத்தாய்-எழுத்துச்
செல்வமும் கலைகளும் தந்தாய்-அருகா (செந்)

அனுபல்லவி
சந்ததம் கொல்லா அறம் சமைத்தாய்
சார்ந்ததாய்ப் பொய்யா நெறியமைத்தாய்
அந்தமில் களவினை அகற்றிட மொழிந்தாய்
அயலார் மனையாளை அணுகலைக்கடிந்தாய்

சிந்தையிலும் கள்ளோ டுனைத்தடுத்தாய்
செய்யும்பொருளினில் வரையறை வகுத்தாய்
பந்தமில் குரவரை இகழாமைப் பணித்தாய்
பசியினும் இரவுண்ணல் தேனைப் பகைத்தாய் (செந்)

சரணம்

ஆரூயிர் யாவும் இன்ப முற்றுய்யும் அறநெறியே-நீ
அருளினைத் தமிழால் அருகா ஆதிநாதா அறிவரனே
பேரருள் நெறியே திருக்குறள் மறையாய் மலர்ந்ததே-எங்கள்
பெருந்தகையே தெய்வத் தமிழகமண்ணில் பிறந்ததே (செந்)

18. 'காலம் வீணே'

இராகம்: கெளா˘மனோஹா˘ தாளம்: ஆதி
[பாட்டும் நானே பாவமும் நானே என்ற மெட்டு]

பல்லவி
காலம் வீணே கழித்தனன் யானே
கவலை வாழ்வே கண்டது முடிவே (காலம்)

அனுபல்லவி
சீலம் ஒன்றே சீரிய தென்றே
செப்பிய ஜினனே சிந்தைகொண் டனனே (காலம்)

சரணம்
அறிவியல் நெறியே அறைந்தனை முறையே
அவைதெளிந் தோரே அடைந்தனர் சீரே (காலம்)
உலகியல் இன்பம் உண்மையில் துன்பம்
ஊட்டுவ தென்றே உணர்ந்தன னின்றே
அன்பும் அறமும் அறிவனும் நீயே
பண்பும் நீயே பகவனும் நீயே
இன்ப நிலையினை எய்தியவன் நீயே
ஈச னுந்தன் இருபாதமே மறந்து (காலம்)

19. 'அஞ்சுகின்றேனையா'

இராகம்: வாசஸ்பதி தாளம்: ஆதி

பல்லவி
அஞ்சுகின்றேனையா ஒருண்மை உரைக்க-உம்
அடிபணிவோருள்ளக் குறிக்கோள் விளக்க (அ)

அனுபல்லவி
கஞ்சமலர் மீதுலாவும் கடையிலாஞானா-ஒரு
கணத்தில் மூவுலகறியும் கேவலஞானா (அ)

சரணம்
மஞ்சுலாவும் நின்மாக்கோயில் வந்தே-தினம்
மலர்க்கொண்டு வாழ்த்துவார் உள்ளம் கரைந்தே
எஞ்சலிலா நின்எழில் குணங்கள் பற்றி-உம்
இருப்பிடம் பிடித்திட ஏய்த்திடும்பெற்றி (அ)

எல்லாமுணர்ந்தோய்நீ ĄŁதொன்றறியீரே-இவர்
எண்ணமிதே சொன்னேன் இகழ்ந்திடாதீரே
நல்லார்கள் போயவழி நாலடி சென்றாலே-அவர்
நண்ணியபதம் பெறும் இயல்பாதலாலே (அ)

விளக்கம்:-

அருகப்பெருமானை வழிபாடியற்றும் நோக்கமும் குறிக்கோளும் அப்பெருமகன் அரும் பெரும் குணமாண்புகளையும் அறநெறிகளையும் பாடிப்பற்றி வீடு பேறடைய முனைவதேயாகும். இப்புனிதநெறியைக் கடைப்பிடித்து வழிபடுவோர் உள்ளத்தூய்மையைத் திரித்துக் கூறுவதுபோன்று உண்மையைப்படம் பிடித்துக் காட்டும் கருத்துக்கருவூலம் பொதிந்த பாடல் இது.


 

1   2   3   4   5   6   7


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com