முகப்பு வாயில்

 

(33) (தசரதாராஜ குமாரா என்ற மெட்டு)

எங்கும் பரந்து நின்ற இறைவா
அருள் உருவா
ஞான நிறைவா
அறம் புகல்வா (ஏ)

பொங்குங் கடலுலகில் புனித ஜென்மங்களென்றே புகலு மானிடக்கூட்டம் புலாலை விரும்பி நின்றே சிங்கங் காடிபோல சிறிய ஜெந்துக்கள் கொன்றே

சீல மிகவழிந்து போனார்
ஜென்மம் நாணார்
எமனா னார்
இன்பங் காணார் (ஏ)

கங்கையில் மூழ்கிய கடவுளே யென்றுமே
காலையுமாலையுங் கண்மூடி ஜெயித்துமே
சங்கையில்லாத ஞான சாஸ்திரம் படித்துமே
சண்டாளராகி உயிர்க்கொன்றே
ஊனைத் தின்றே
பக்த ரென்றே
பகர்வார் நின்றே (ஏ)

தன்னுயிர் நீப்பினும் மன்னுயிர் காப்பதே
தருமநெறியெனுந் தகைமொழி தப்புதே
மன்னுயிர் தமைக்கொன்றே தன்னுடல் வளர்ப்பதே
மனிதரெனுந் தலைகீழ் காலம்
என்ன கோலம்
கொலை ஞாலம்
சன சீலம் (ஏ)

உறங்கினவர் விழிப்ப துண்மையில்லாததாலே
உடலை வளர்க்கப்பாழும் ஊனைப் புசிக்காமலே
மரங்களுஞ் செடிகளும் மலிந்திருப்பதாலே
மகிழ்ந்துண்டு வாழ்ந்திடலாலே
மதியாமே
சுத்தமாமே
பாவம் போமே (ஏ)

(34)
தீபாவளிப் பாட்டு
(ஹக்கியப்பியாரே என்ற ஹிந்துஸ்தான் மேட்டு)

தீபாவளி யெனுந் தெய்வத் திருநாளைத் தீயதாக்காதீர்
ஐயா தீயதாக்காதீர்-நல்ல (தீ)


தீட்டியே கத்தியைத் தீரமாய்த் தாங்கி
திரியுமாடு கோழி பன்றி மேலோங்கி
வாட்டி யவைகளி னுயிர்தமை வாங்கி
வழியுஞ் சீழ் புண்ணினைப் புசித்துமே பொங்கி
தீயதாக்காதீர்-நல்ல (தீ)

பகுத்தறி வேயில்லா சிங்கம் நாய் நாயும்
பாயும் புலி சிறுத்தைப் பறந்திடுங் கழுகும்
செருத்து பிறவுயிரின் பிணத்தினை விழுங்கும்
செயலைப் போல் மானிடம் மிருகமதாகிடும்
-தீயதாக்காதீர்-நல்ல (தீ)

மனிதப் பிறவியதன் மாண்பினை மறந்து
மறம்புரிந் தழியாது மறைநெறி யறிந்து
புனிதராக விது நாளெனத் தந்து
போந்ததை மறியாமலுயிர்க் கொலை புரிந்து
-தீய தாக்காதீர் -நல்ல (தீ)

(36)

ஸ்ரீரங்கத்தில் அரங்கநாதருக்குப் பசுக்களைப் பிரார்த்தனைக்கு விடுகிறார்கள். அலைகளைத் கோயிலதிகாரிகள் ஏலத்தில் விடுவதால் கசாப்புக் கடைக்காரர்கள் எடுத்து கொலை செய்கிறார்கள். அக்கொடும் பிரார்த்தனையை விடும்படி வேண்டல்.

(பண்டித மோதிலால் நேரை என்ற மெட்டு)

பாந்தாமன் அருளைவேண்டி பக்தி பூண்போரோ
பக்தி பூண்போரே பான் சக்தி காண்போரே (பா)

புரந்தார் புகழும் கோயில்
புண்ணிய ஸ்ரீரங்கம் வாயில்
வரந்தர வேண்டி பசுக்கள் வழங்கி வந்தீரே
வழங்கி வந்தீரே அதன் வதை மறந்தீரே (பா)

தொஹைரா

அந்நாளில் எம்பெருமான் ஆக்கூட்
டந்தனிலாடி நின்ற காட்சி
எந்நாளும் காணவென இறைவனின்
சந்நிதியில் பசுக்களோட்டி
பன்னாளும் போற்றிவரும பண்டைய
நான் பக்தியெலாம் மறைந்து மாயும்
இந்நாளில் கோக்கள்படும் ஹிம்சையினை
யறியீரோ இருநிலத்தீர்

பாட்டு

பொன் விரும்பி விலை புகல்வார்
புவியில்பலர் அவை பெறுவார்
அன்பாயா கொலைஞாடை அல்லல் படுதே
அல்லல்படுதே ஆவி அலறி விடுதே
இன்பமென கோயிலிற் பசு இனி விடாதீரே
இனி விடாதீரே நரக இருள் விழாதீரே (பா)

(37)
(தசரதராஜ குமாரா என்ற மெட்டு)

திருவரங்கப் பெருமானே தேவர் கோனே
கோ குலனே குறை தீர்ப்போனே (திரு)

அரும்பெருங் குழவிபோல் ஆவினங்களணைந்தே
அன்றுகாத்த நினைவால் அரங்கர உனைப்பணிந்தே
ஒருவரம் அருளென ஊமைப் பசுக்கள் சேர்ந்தே
உயிர்வரங் கேட்டிடும் காலம்
என்ன கோலம்
பொருள் மூலம்
பொய்க்குஞ் ஞாலம் (திரு)

பசுவினுடலமெங்கும் பலப்பல தேவர்கள்
பண்போடுறைவாரென்றே பக்தியோடிந்து மக்கள்
வசையிலாது வணங்கி வாழ்த்தித் துதித்தபேர்கள்
வஞ்சனை நினைத்திடலானார்
வாழ்வைப் பேணார்
பக்தி பூணார்
பாவக் கண்ணார் (திரு)

பாலும் எருவோடேரு பணித்த உழைப்பை வாங்கி
பயிரைவளமதாக்கிப் பசியும் வறுமை நீங்கி
தோலும்பாகி ஏறு துணைபுரியாதென்றேங்கி
துரத்தடித்தோட்டுங் கோர காட்சி
தோஷ ஆட்சி
நன்றி மாட்சி
நகைக்க லாச்சு (திரு)

அரங்கனை வேண்டியே ஆவினங்களை யோட்டி
ஆலய கோக்களென்றே அருநாமங்கள் சூட்டி
காங்குவித்தே வணங்குங் காலமெலாந் தட்டி
காசின்மேலாசை மிகபட்டே
கருணையற்றே
கொலைஞர் கைவிற்றே
குதிப்பர் பொருள் பெற்றே (திரு)

(38)
எல்லம்மனை ஆடு கோழிகள்
வேண்டல்.
(கம்போதி)

பல்லவி
இறைவியே எல்லம்மா எழிலடி பணிந்தோம் வந்தருள்

சரணங்கள்

குறைகள் முன்னம் பல கோடி யிழைத்தே
கோழி ஆடுபன்றி யாகிப் பூதலத்தே
பிறந்து நின்முன்னாலே வந்ததாபத்தே
பித்தான் சித்தத்தை நித்தந்திருத்துவாய் (இறை)

அம்மா நின்பூஜைக்கு மாதமோ ஆடி
ஐயோ நாங்களெல்லாம் மடிவது கோடி
சும்மா நீ பார்த்திருப்ப தென்னமோடி
சுந்தா மைந்தரை சந்ததம் சிந்தைசெய் (இறை)

எட்டு திக்குந்துள்ள வெட்டுவதறிந்து
எழுந்துன் குழந்தைகள் தழுவித்தொழுதோம் (இறை)

பூசாரிக் கூட்டங்களுள் போல்பாரம்
பூவையரே வைத்துச் செய்கிறார் கோரம் (இறை)

கூசாமற் கெல்வதைக் கண்டு கொடூரம்
கொண்டு சண்டாளருக் குண்டுபண் தண்டனை (இறை)

சென்னை ஜீவரக்ஷ சங்கத்திற் தொண்டு
செய்யும் பறம்பை ஸ்ரீபாலன் சொல்கொண்டு (இறை)

உன்னைத் துதித்தோமுயிருடன் கண்டு
உலகினிற் பலயெனுங்கொலையினை விலகச்செய் (இறை)
 

1   2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com