முகப்பு வாயில்

 

ஆடுகள் முறையீடு

ஊமைப் பிராணிகளாகிய எங்களைக்
கத்தியினின்றுங் காப்பாற்றுங்கள்.
ஹா காம்போதி ஜன்ம் ராகம்.
ஸைந்தவி-தஸ்ர சாப்பு தாளம்.
(கரும்பு தோட்டத்திலே என்ற மெட்டு)

பல்லவி.

கத்தியினின்றுங் காப்பீர்-ஆ
கத்தியினின்றுங் காப்பீர்

சரணம்
(1) கத்தியினின்றுங் காப்பீர்-எங்கள்
கால்களுந் தலைகளும் அற்றுவிழும்படி
வெட்டிமடிப்போரே-நீர்
விழையும்வாழ் நாட்களின் வழியின் தொடர்ச்சியில்
சற்றே நின்றுபாரும்-கொலை
சாயாகுமா தெய்வ சம்மதமா வென்று
சிந்தந்தனில் தேரும்-துயரைச்
செப்ப முடியாத ஊமைப் பிராணிகளை
(கத்தியினின்றுங் காப்பீர்)

(2) இரக்கமென்பதிலையோ-ஆன்மா
ஏங்கித்திகைத்துத் துடித்து விம்முந்துயர்
உருக்கமெய் கண்களிலே-காணும்
உயிர்ப்புடன் படபடவெனப் பந்தடித்திடும்
இருதயசப்தங் கேளீர்-ஐயோ
இரக்க மின்னதெனவறியிரோ உங்களை
திருப்புதல் வீண்தானோ-யாங்கள்
திக்கற்ற கைதிகளென்று விடுவித்து
(கத்தியினின்றுங் காப்பீர்)

(3) மேகக்கூட்டஞ்சூழும்-தளிர்
மேவு மரங்களின் குளிர்ந்த நிழலிலும்
வேகப்பசி தீர்க்கும்-புல்
வெளிகளிலும் பனி சூழ்ந்த மலையிலும்
ஆகா எல்லையற்றே-பெரும்
ஆழிபோலும் லேகக்காற்றைப்போலெங்குமே
சோகமின்றித்திரிவோம்-இந்தச்
சுயேச்சையாய் ஜென்மபூமியில் வாழெமை
(கத்தியினின்றுங் காப்பீர்)

(4) மக்களெனும் பொயீர்-பெரும்
மாண்புமிக்கபுண்ய ஜென்மபூமி நின்றும்
சொக்கும்படி பிரித்தே-எங்கள்
சுதந்தரச் சிறகினை முறித்துக்கால் களிலே
தக்க விலங்கிட்டீர்-இந்தத்
தகாதன செய்யுமுங்கள் மனதிலே
துக்க முகத்தாலே-யாங்கள்
சோர்ந்து வேண்டுங்குறி கலனித்தீர்களில்லே
(கத்தியினின்றுங் காப்பீர்)

(5) அடிமைத்தனம் பூண்டே-உங்கள்
ஆக்கினைக்கடங்கினோ மெவருக்குமே யொரு
கொடுமை நினைத்தறியோம்-பச்சைக்
கொடிகளுந் தழைகளுமேய்ந்து பாலுமக்குப்
படிமைப்போல் நின்றளிப்போம்-எங்கள்
பரோபகாரத்தைச் சற்று நினையாது
கடுமையாய் வெட்டுகின்றீர்-இது
கலிகாலக்கூத்தோ தலையினெழுத்தோ.
(கத்தியினின்றுங் காப்பீர்)

(6) ஆண்டவன் முன்னாலே-உங்கள்
அன்பும் அருளும் அளிக்கவேகட்டிலோம்
வேண்டிநின்றோம் நியாயமே-இதனை
வீனென்று தாசீனஞ்செய்து விட்டோடாதீர்
தூண்டும் மனசாட்சியே-ஐயா
துன்பமெவர்க்கு மொன்றெண்ணா தெம்முயிரை
ஆண்டுவார் துரும்பாய்-ஏழை
அழுதுவிடுங்கண்ணீர் மண்ணிற் கலக்குமோ?
(கத்தியினின்றுங் காப்பீர்)

(7) வாரும் மஹாவீரரே-புவியில்
வாயில்லாப் பிராணிகள் மாயுது மனிதரால்
சேரும் மஹான் புத்தரே-புலால்
செறிந்த வயிற்றினரானார் மாந்தர் பலர்
பாருந்தாயுமானாரே-அந்தோ
பாழுஞ் சிறுதெய்வங்கள் கோயில்முன்னுயிர் பலி
ஒலி (இ) ராமலிங்கரே-நீங்கள்
உலகினிற்தோன்றி கொல்லாமை போதித்தெமை
(கத்தியினின்றுங் காப்பீர்)


(8) தெய்வ அசாரி
(வந்தேமாதரம் வந்தேமாதரம்-என்ற மெட்டு)

பல்லவி

அஞ்சேல் ஆடுகாள்! அஞ்சேல் ஆடுகாள்!
இன்றே காத்திடுவோம்.

சரணம்

தஞ்சமென்றே தலை தாழ்ந்து பணிந்தழும்
தன்மையினைக் கண்டே-மாந்தர்
நஞ்சின் கொடியராய்க் கொல்லுகின்றாரும்மை
நாணந்தன்னை மீண்டே-துயர்
மிஞ்சினு மானிடர் வெட்கமுறும்படி
மிக்க சாந்தம் பூண்டே-பெரும்
வஞ்சினைக்காரர்க்கு வாய்மை யுரைக்கின்றீர்
வண்மையறங்கொண்டே-இனி
(அஞ்சேல் ஆடுகாள்)

மன்னுயிர் யாவும் மகிழந்து குலாவிட
மண்ணுலகம் பொதுவே-அரும்
பொன்னுடல் படைத்த மானிடராயினும்
புழுவிற் குரியதுவே-உயிர்
முன்னமாற்றிய வினைப்படி ஆயுளை
முடிக்க யெமன் பொதுவே-இவன்
அன்றி வேறொருவருங்களைக் கொன்றிய
வழிவாருண்மையிதுவே-இனி
(அஞ்சேல் ஆடுகாள்)

ஊமைக் குழந்தைகளாயினு முங்களை
உதாசீனஞ் செய்யவில்லை-மாந்தர்
தீமைப் புரியும்போதழுத விம்முங்குரல்
செவிதனிற் கேளாதில்லை-இதோ
தாமதமின்றிப் பிறந்துத் தரையின்றி
தடுப்போமுங்கள் தொல்லை-உயிர்கள்
க்ஷமமுற்ற வாழும் வாழ்க்கையே யெங்கன்
க்ஷமமே வேறில்லை-இனி
(அஞ்சேல் ஆடுகாள்)

 

1   2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com