முகப்பு வாயில்

 

9. மிருகங்கள் மனிதர்களை வினாவுதல்

ஆனந்தக்களிப்பு

பல்லவி

எங்களைக்கொல்வோரே வாரும்-உடம்பில்
எவ்வகையில் தாழ்ந்தோ மென்பதைக்கூறும் (எ)

சரணம்

வந்த உயிர்களுமொன்றே-அதில்
ஏற்றந்தாழ்வென்றொரு வேற்றுமையன்றே
முந்திசெய் பாவபுண்ணியம்-உயிர்
மூடிக்கொண்ட உடலாலேதான் பேதம் (எங்)

அறிவில் குறைந்தவரன்றி-மற்ற
அச்சம் ஆகாரம் இணைதலோடொன்றி
உறக்கத்திலும்மில் குறைவோ-பகுத்
துணர்விலா மானிட ரெம்மில் உயர்வோ (எங்)

தாய்தந்தை தனயர்கள்கூடி-அன்பாய்த்
தாவிக்குதித்தனைத்தாடுவோம் ஓடி
காய்கனிதழை தமைக்கொண்டு-சேயை
காத்திடுந் தாய்ப்பணி யெமக்குந்தானுண்டு (எங்)

பொறுப்புடை நட்பினைப்பூண்போம்-இந்தப்
புவியிலெவரும் நிகராகாரென்போம்
விருப்பமிகுத்துவாழ்வோமே-எம்மில்
வேறாகிப்பிரிவுற்றல் விசனத்தாழ்வோமே (எங்)

உறுபுலி சிங்கங்கள்போலே- நாங்கள்
ஒருவருக்குந் தீங்கிழைக் காததினாலே
பொறுமையா யும்மோடுழைத்தே-இந்தப்
புவியில் வாழப்பிரம்மன் விடுத்தான்படைத்தே (எங்)

குருடன் விழிபெற்றார்போலே-உங்கள்
கூட்டுறவால் களித்தாடுவோமேலே
அறியோ முங்கள் வஞ்சநெஞ்சம்-ஐயோ
யாரையும் நம்பியடைவோமே தஞ்சம் (எங்)

ஆபத்தின்னதென்றறிவோம்-மென்ன
அதினின்று நீங்கும் வழியை முயல்வோம்
கோபத்தண லெமக்குண்டு-அதைக்
கொள்ளோமுமைப்போலெம்மேலாரைக்கண்டு (எங்)

பேசத்தொயாதாரென்று-சம்மைப்
பிரித்துப் பேசாதீரெம்பாஷைதான் வேறு
நேசமாய்க்கூடுங்காலத்தே-வெகு
நேர்மையாய்ப்பேசுவோ முகமுகம்வைத்தே (எங்)

துஷ்டர்தமை நெருங்கோமே-காணில்
தூரத்தினின்றுங் கதறிடுவோமே
கஷ்டங்களுண்டானபோது-அதைக்
காட்டுவோம் கண்களில் நீரைபுகுத்து (எங்)

என்ன! ஏன்! என்றதைத்தேற-மனம்
எண்ணிடு முறுதியாய்ச்சந்தேகமற
இன்னிசைக்கீதங்கள் கேட்டு-வெகு
இன்பமாய் வருவோமே யிரையையும்விட்டு (எங்)

மாலை மஞ்சள் வெய்யிலொளியும்-வரும்
மாயிருள் போக்குஞ் சந்திரனொளியும்
கோல நட்சத்திர ஒளியும்-காணில்
கொண்டாடத்திற் களவுண்டோ உரையும் (எங்)

பசுங்கிளி பூட்டித் தேரேறி-அனங்கன்
பாரின்வரவினை தென்றலுங்கூறி
பசுந்தளிர்விட்டு மரங்கள்-பூத்துப்
பாந்துவரவேற்பபோலசைந்தாடும் (எங்)

வசந்தகாலம் வரக்கண்டே-யாங்கள்
வாழ்த்தி வணங்கிக்குதிப்பதுமுண்டே
இசைகொள் வண்டினங்கள் சூழும்-மலர்
விரியுமணத்திற்கெம் மணமும் விரும்பும் (எங்)

வாடிக்கையாகநும்பின்னே-தினம்
வருவோம் சிறுவர்போல் பழக்கிடிலண்ணே
வேடிக்கையாட்டங்கள்கற்று-வெகு
விந்தையாய் நடிப்போமே பயமெலாமற்று (எங்)


எங்களைக் கொன்றிடவெண்ணி-நீங்கள்
எவ்வாறு வானெடுக்கின்றீரோ நண்ணி
பங்காளியாகவே வந்து-உம்மைப்
பாகங்கொடுவென்று கேட்டோமா நொந்து (எங்)

இரக்கமோ டன்பிலாமுகம்-வெறும்
இரும்புக் குண்டிலேழு துவாரங்களாகும்
உருக்குதெங்கள் மனமையோ-நாளை
உமக்குவருந் துன்பமெண்ணும் போதையோ (எங்)

கொலைப்பிசா சும்மையாட்டி-நாளைக்
கொண்டுபோகும் நாகவேந்தன் முன்கூட்டி
தலைமைப் பிசாசிது வென்றே-அங்கு
தருவார் வெகுமதி முதலாவ தென்றே (எங்)

அந்தப் பாழ் நரகத்தே நின்று-இந்த
அவனியி லிவர்களைப் பிடிப்பது போன்று
எந்த மாந்தரையு மையா-பிடிக்க
இயலாதென பிசாசேகிடுமையா (எங்)

நல்லறங்கொண்டு வாழ்வோரே-இன்ப
நல்லுலகடைபவ ரென் றறிந்தின்றே
கொல்லாவிரதங் கைகொண்டு-இந்தக்
குவலயத்தில் வாழும் புகழ்மிகப் பூண்டு (எங்)
 

1   2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com