முகப்பு வாயில்

 

20. (இந்துநேச வங்கதேச பந்துவை என்ற மெட்டு)

இந்தநீதி எங்குஓதி சிந்தையில் பதிந்திரோ
என்னசீலம் என்றுஞாலம் பேசுதே யறிந்திரோ
சந்ததம் சன்மார்க்கந் தனக்குச் சத்துருவாய் வந்திலோ
சாமியால யங்கெடுக்க சந்ததிப் பிறந்திரோ

சக்தியா மென்றே
சாற்றியே சென்றே
பக்தர்போல் நின்றே
பல்லுயிர் கொன்றே-இதை
பார்த்தபேர் மனம் பதைக்க
தூர்த்த பலியால் துதிக்க (இந்த)

தொஹைரா

பாரதநாட்டுப் பழம்பொயார் பண்போ டாலயம்
வகுத்துப் பரந்து நின்ற
பரமனது திருவடியைப் பணிந்தவான்
சன்மார்க்கம் பயின்று நாளும்
போதய வாக்குசெய லாலொழுகிப் போன்பம்
பேறு பெற்று
பிறவி பயனடைய வெனப் பேணி தந்த
பெருங்கோயில் வாயிலெல்லாம்

பாட்டு

பெருங் கொலைகள் செய்யலாச்சே
பேய் பிசாசு ஆடலாச்சே (இந்த)

தொஹைரா

ஏசுநாதரை வணங்கியின்புறுங் கிறிஸ்துமத
சோதாரும்
இஸ்லாமத சோதரரும் இறைவனாம் அல்லாவை
வணங்கிவரும் பதியிலே
தோஷமுடைக் கொலைபாலத் துன்மார்க்கம்
புரிந்து துதிசெய்யமாட்டார்
தூயரெனப் பேசிவரும் இந்துமதத்
தொகையடங்காக் கோயிலெல்லாம்

பாட்டு

துள்ளியுயிர்கள் மடியுதந்தோ
தூறிரத்தம் புரளுதந்தோ (இந்த)

______


(21)
பொயபாளையத்தின் கோரம்
(ஆடுபாம்பே விளையாடு பாம்பே என்ற மெட்டு)

பாளையம் ஈதே பொயபாளையம் ஈதே-சிறு
தேவதையென்றே மயங்கும் (பாளையம்)

மானிட ஜென்மமது மாட்சிமையென்றே
மறைகளும் உரைகளும் மதித்து நின்றே
ஈனக்கொலைப் புலையை இகழ்விரென்றே
எடுத்துரைத்த மொழிகெடுக்கும் பாளையம் ஈதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே.

ஆடவர்க்கும் அரிவையர்க்கும் மொட்டையடித்து
அழகொழிந்த பாழ்தலையில் விளக்கையேற்றித்
தேடாய மானம்போக்கி ஆடைகளைத்து
தேங்கிட வேப்பிலை கட்டும் பாளையம் ஈதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே

கொண்ட கணவன் காணில் நாணம் பூண்டே
குளிக்கும் மறைவில் குலப்பெண்களந்தோ
கண்டவர் நகைக்க நிருவாணமாகிய
காற்றில் வேப்பிலை பறக்கும் பாளையமீதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே

ஈனமானங் கெட்டவரென் றிதையேச
இந்துமதம் பெற்றமற்றே ரிழிவுகேளீர்
ஊனொடு கள் சாராயம் உண்ணுஞ்சாமி
உண்டு பலவென்று காட்டும் பாளையம் ஈதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே

பாளையத்தாளென்று பலர் பக்தி பூண்டு
பதையதைக்க ஆடுகோழி தலையறுத்து
ஆலையத்தெதிரே ரத்த வெள்ளம் ஓட
அநியாயப் பலியிடும் பாளையம் ஈதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே

ஆடையோடு நாகாகம் அறிவுமின்றி
அடவி வாழ் வேட்டுவ சட்டம் போல
பீடுடை ஞானங்கள் பெற்ற நாட்டு மக்களை
பேதையராய் ஆட்டுவிக்கும் பாளையம் ஈதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே.

சன்மார்க் சீலராக வாழ வேண்டியே
சாத்திரவேதாகமங்கள் சாற்றியிருக்க
துன்மார்க்கங்கள் பலவும் தூண்டியே விட்டு
தூயரைக் கொலைஞராக்கும் பாளையம் ஈதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே.

முன்கண்ணனை மறந்து மூட பக்தியால்
முழுபாட்டு மாரி செல்வி எல்லைக் காளியைப்
பக்திகொளும் பாவிகளின் மானம் போக்கிப்
பாழ் நரகில் தள்ளுவிக்கும் பாளையம் ஈதே
பாளையம் ஈதே பொய பாளையம் ஈதே.

(22)
(கலியாணஞ் செய்துவையுமே என்ற மெட்டு)

பெரும் பாவமாகும் பவியே
பேதாயுயிர்க் கொலையே
இருநிலைக் துயர்தமக் கியற்கையாம் பிணியே
எவருமழிக்க முடியாதிதை நினைய
உருஉடல் தமிழ் கோளாருற்றதுஞ் சனியே
உறைந்திடு மாதலால் மருந்தினால் தணியே

தொஹைரா

கொள்ளை கொள்ளையாய் மாய்த்துக்
குடிகெடுக்கும் கொடிய
கள்ள வைசூரி பிளேக்குக்
கடியதோர் காலரா முதலிய

பாட்டு

கடும்பிணி தமைக்காளி மாரியெனக் கொள்ளும்
கயவர்கள் மொழியினைக் கடையெனத் தள்ளும்
மடமை யென்றறிவாளர் மதியாம லெள்ளும்
மன்னுயிரை மாய்க்குமூட மார்க்கத்தை வெல்லும்

(23)
(அடைக்கலமே என்ற மெட்டு)

பல்லவி

பாதாபமே பாதாபமே
பலியிடுங் கோரமாங் கொலையினைப் பார்க்கப் (ப)

சரணம்

ஒருபாவமுமறியா ஊமைப்பிராணிகளென்றும்
உலகினிலூழியம் புரியஞ் சீவன்களென்றும்
அறியாத மாந்தர்கள் அம்மன் பிடாரிக்கென்றே
ஆடுகோழிகள் வெட்டும் அநியாயப் பலிவழக்கம் (பா)

பூமி சூரிய சந்திரன் வாயு வருணதேவர்
புவியினிலுயிர்களைப் பொதுவாய் ரக்ஷத்தருள
நாமங்கள் பல சூட்டி நவிலுஞ் சிறுதெய்வங்கள்
நாதன் வதியுமுயிரை நலியக் கொல்லச் சொல்
லுமோ (பாதா)

குதிரை மாடாடுபன்றிக் குரங்கு பானைக்கழுதை
கொஞ்சமு மாமிஸமதை நெஞ்சிலு நினைத்திடாவே
மதியாளர் யாங்களென்றே மார்தட்டு மானிடர்கள்
மானமின்றி மன்னுயிரை மடிக்கின்றாருன்
விரும்பி (பாதா)
 

1   2  3  4  5  6  7  8  9  10


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com