முகப்பு வாயில்

 


அந்த அரிய ஆலயம் பூமி மட்டத்திற்குக் கீழே அமைந்துள்ளதால் தா¢சனத்திற்குக் கீழே செல்லவேண்டும். மூலவர் பா¡£ஸ்வநாதர் சுவாமி அழகிய கருங்கல்லால் செய்யப்பட்டு அந்தரமாக சுமார் 1/2 அங்குள உயரம் பூமிக்குமேல் நிற்கின்றது. அதனாலேயே அதற்கு அந்தர்ஜித் பார்ஸ்வநாதர் என்று பெயர். உண்மையில் அது அந்தரமாக இல்லை. அது சிற்பியின் திறமையைப் பொறுத்தது. சுவாமியும் அதன்பின் பக்கத்தில் உள்ள மதில்கல்லும் ஒன்றேயாகும். அவ்விக்கிரகத்தைச் செய்யும்போது விக்கிரகத்தைத் தனியாக செதுக்கி அதன் முதுகில் 3 அங்குலம் கனமுள்ள பாகத்தை அப்படியே விட்டுவிட்டிருக்கிறது. அந்த சிறு துண்டின் ஆதரவினாலேயே அவ்விக்கிரகம் அந்தரத்தில் நிற்பதாகக் காணப்படுகின்றது. அநேகர் அந்த சிற்பியின் சூழ்ச்சியை யறியாததால் அந்தரமாகவே சுவாமி நிற்கின்றது என்று பூரணமாக நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

அங்கிருந்து மறுநாள் அகோலாவிற்கு நாங்கள் மூவரும் திரும்பிவிட்டோம். இவ்விடத்தில் பிரம்மச்சாரி சீதள பிரஸாத்தி ஏற்படுத்திய விதவாவிவாக சபையைக் காணச்சென்றோம். இவ்வூர் மராட்டா நாடு, பலர் குதிரைகளில் ஏறித் திரிகின்றார்கள். இங்குள்ள மக்கள் பலர் மிக்க ஏழைகளாகக் காண்கின்றார்கள். திலகர் பெருமானின் திருநாடு இதுவே.

நாங்கள் விதவாவிவாக சபைக்குச் செல்லும் வழியைக் கேட்டுக்கொண்டே சென்றோம். அவ்வீதிக்கு அருகில் வந்து கொண்டிருந்த சுமார் 9 வயதுள்ள ஓர் அழகிய மராட்டாச் சிறுமியைக் கண்டு திகம்பரஜைனர்கள் எங்கே வசிக்கின்றார்கள் என்று கேட்டோம். உடனே அச்சிறுமி எங்களைப் புன்னகையோடு உற்றுப்பார்த்து 'தாங்கள் ஜைனமதத்தினரா' வென்று கேட்டது. 'ஆம்' என்று விடையிறுத்தோம். எங்கள் விடையினைச் செவியேற்ற அச்சிறுமியின் முகம் மிகப்பொலிவுற்று முன்பின் கண்ட உறவினர்களை வரவேற்பது போல் தான் சென்ற காரியத்தையும் மறந்து 'வாருங்கள் நானும் ஜைனப் பெண்தான்' என்று ஆர்வமோடு கூறி அதனில்லத்திற்கு அழைத்துச் சென்றது. நாங்கள் வீட்டினருகில் செல்வதற்குள் அச்சிறுமி உள்ளே ஓடித் தன் தந்தையை அழைத்துக்கொண்டு வந்து எங்களை அறிமுகம் செய்து வைத்தது. அவரும எங்களை மிக்க அன்போடு வரவேற்று உபசா¢த்தார். எதிர்பாராத இவ்வின்பக் காட்சிகள் எங்கள் மனதைப் பூரிக்கச்செய்துவிட்டன. நாங்கள் மூவரும் அச்சிறுமியின் அறிவின், அன்பின் செயல்களைக் கண்டு ஆனந்தித்து "அம்மா! உன்பெயர் என்ன?" என்று கேட்டோம். அச்சிறுமியும் புன்சிரிப்போடும் நாணத்தோடும் தலைகுனிந்து 'சுசிலாதேவி' யென மொழிந்தது. அத்திருப்பெயா¢னைக் கேட்டதும் எங்கள் மூவா¢ல் என் மனம் மிக்க பேரானந்தத்தை அடைந்தது. ஏனெனில் எனது திருக்குமாரத்தியின் பெயரும் அதுவே!

பிறகு அப்பொ¢யார் திருநாமத்தைக் கேட்டோம். அவர் தனது பெயர் கஸ்தூரிசந்த் ஜெயின் என்றும் தனது மனைவியின் பெயர் ஸ்ரீமதி காசிபாய் என்றும், சுசிலாதேவி தவிர மன்னிபாய் என்ற 6 வயது பெண்ணும், புல்லியென்ற ஓர் ஆண்குழந்தையும் இருப்பதாகவும் கூறியதோடு தான் காசியை விதவா விவாகம் செய்துக்கொண்டதாகவும் மொழிந்தார். இச்சா¢தத்தைக் கேட்டதும் எங்களுக்கு ஆச்சா¢யமும் அளவிலாத ஆனந்தமும் பொங்கிற்று. இப்பொ¢யார் பெருஞ்செல்வந்தராக இல்லாவிடினும் நிறைந்த கல்வி அறிவும், தீவிரமான மதப்பற்றும், துணிவான சீர்திருத்த எண்ணமுமுள்ளவர். பிரம்மச்சாரி சீதளபிரஸாத்ஜீ அவர்கள் இவ்வூரில் ஓர் விதவாஸ்ரமத்தை நிலைநாட்ட முதன்முதல்¢ காரணமாக இருந்தவரும், அக்கொள்கைக்கு முதற்பலியாக நின்றவரும் கஸ்தூரிசந்த்ஜீயே! இவ்வூர் விதவாஸ்ரமத்திற்கும் இப்பேரறிஞரே காரியதா¢சியுமாவர். இத்தகைய புதிய சீர்திருத்தவாதியை சீர்திருத்தம் விரும்பும் எவர்தான் பாராட்டாமலிருக்க முடியும்! ஆகவே எங்கள் மூவா¢ல் நானும இந்திரகுமார நயினாரும் அப்பொ¢யாரை மனமாரப் பாராட்டினோம். ஸ்ரீமான் தரணிசெட்டியார் அவர்கள் வைதீகராயினும் இக்கொள்கையை ஏற்று அப்பொ¢யாரைப் புகழ்ந்து போற்றினார்.

நாங்கள் விதவாவிவாகத்தைப் பாராட்டிப் பேசவே அவர் எங்களையும் சீர்திருத்த நோக்கமுடையவர்கள் என்றறிந்து அவ்வூர் விதவாஸ்ரமத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார். அந்த ஆஸ்ரமத்தைக் கண்டதும் எங்களுக்கு ஓர் புத்துணர்ச்சி புளகாங்கிதமும் உண்டாயிற்று. ஏனெனில் வாழ்க்கையின்பத்தை இழந்து சதா துக்கமும் சோகமும் பூண்டு வருத்தத்திலாழ்ந்தலையும் விதவைகளுக்கு ஆதரவளித்து வாழ்க்கை நலனையளிக்கும் புனிதாஸ்ரமம் என்பதனாலேயேயாகும்.

இந்த ஆஸ்ரமத்தின் சார்பாக 30 விதவா விவாகங்கள் நடத்தியிருக்கின்றார்கள். இந்த ஆஸ்ரமத்தின் மேல்மாடியின் தா¢சன பிம்பம் வைத்திருக்கின்றார்கள். தினம் அநேகர் தா¢சனம் செய்ய வருகின்றார்கள். இவ்வாசிரமத்தைச் சுற்றி பல ஜைனர்களின் வீடுகளும் கோயில்களும் இருக்கின்றன.

நாங்கள் இரண்டு நாள் அவர் வீட்டிலேயே போஜனம் செய்தோம். எங்களை சென்னை வாசிகள் என்றறிந்து கோதுமை ரொட்டிகளைத் தவிர அரிசி உணவே அதிகமாக சமைத்து விருந்தளித்தார். நாங்கள் அவ்விடமிருந்த இரண்டு நாட்களும் அவரும், அவர் மனைவியும், மக்களும் எங்களுக்கு உபசா¢த்த உபசாரங்களை எழுபிறப்பும் மறவோம். ஸ்ரீசுசிலாதேவியின் இனிய மொழிகளும் அரிய தொண்டுகளும் எங்கள் ஹிருதயத்தினின்றும் என்றும் மறையாது. அதன் அழகிய தோற்றம எங்கள் கண்களின் முன் சதா நிற்கின்றது. நாங்கள் அவர்கள் பால் விடைபெற்றுக்கொண்டுவரும்போது பெற்றோரையும், சகோதர சகோதா¢களையும் விட்டுப் பிரிவதுபோன்று மனங்கலங்கிற்று; கால் எழவில்லை. சிறிது தூரம் நடந்ததும் மனம் கால்களுக்குத் தடை போட்டது! அவர்களும் எங்கள் பிரிவை பெருங்கலக்கத்தோடேயே ஏற்றுக்கொண்டார்களென்பதை நாங்கள் மறையும்வரை அக்குடும்பம் நின்று பார்த்தவண்ணமா இருந்த காட்சியே குறிப்பிட்டது. வழியில் கண்டானந்திக்க விடைபெற்று சூரத்திற்குப் புறப்பட்டுவிட்டோம்.

அகோலாவிலிருந்து நந்தர்பூரில் தங்கி ஆகரத்திற்குப்பின் புறப்பட்டு 9-2-35 காலை சூரத் போய்ச்சேர்ந்தோம். சூரத் ஓர் அழகிய நகரம்; அது ஜைனர்களுக்கு ஓர் முக்கிய யாத்திரை ஸ்தலமாகும். சூரத்திலுள்ள அநேக குடும்பங்ஸ்தர்கள் பம்பாயில் வியாபாரிகளாக இருக்கின்றார்கள். ஜைனகோயில்கள் பல இருக்கின்றன. ஒரு ஜைனா ஹைஸ்கூலும், இரண்டு மத்தியதர பாடசாலைகளும், பல வாசகசாலைகளும் லைப்ரா¢களும் இருக்கின்றன. இவ்வூரில்தான் ஜைனமத பூஷணமாகிய பிரம்மச்சாரி சீதள பிரஸாத் ஜீ அவர்கள் "ஜைன மித்திரா" என்ற வாரப்பத்திரிகையை நடத்திவருகின்றார். ஜைன மித்திராவின் உதவி ஆசிரியராகிய மூல்சந்த் காப்டியா அவர்கள் 1924-ம் வருஷம் தனது குடும்பத்தாருடன் எனது ஜென்ம §க்ஷத்திரமாகிய திருப்பறம்பூர் கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார். அப்பொழுது நான் எங்களூரிலுள்ள தருமசாகர சுவாமிகள் புத்தகசாலையின் காரியதா¢சியாக இருந்தேன். ஆதலால் கப்டியா அவர்களை நாங்கள் நன்கு வரவேற்று ஓர் வந்தனோபசாரப் பத்திரமும் வாசித்துக்கொடுத்தோம். அது முதல் அவருக்கும் எனக்கும கடிதப் போக்குவரத்துகள் நடப்பதுண்டு. நான் சூரத் சென்றதும் அத்தகைய பேரறிஞரைப் பாராமல் இருக்க முடியுமா? உடனே நாங்கள் மூவரும் அவர்வீட்டைத் தேடிச் சென்றோம். கப்டியா அவர்களை நான் மறவாதிருப்பது போலவே அவரும் என்னை மறவாமலிருந்ததால் என்னைக் கண்டதும் பேரானந்தத்தோடு எழுந்திருந்து ஸ்ரீபால்ஜீ (பதாரியே! பதாரியே!) வாருங்கள் வாருங்கள் என்று அன்போடும் ஆர்வத்தோடும் வரவேற்றார். நாங்களிருவரும் சற்று நேரம் குசலம் விசாரித்துக்களித்தபின் தன் வீட்டிலுள்ளார்க்கு என்னை அறிமுகஞ் செய்துவைத்தார். அவர்களும் மிக்க அன்போடு முகமன்கூறி மகிழ்வித்தார்கள். சற்று நேரத்திற்கெல்லாம் எங்கள் மூவருக்கும் சிற்றுண்டி தயார்செய்து விருந்தளித்தார்.

பிறகு எங்களை "ஜைனமித்திரா" ஆபீஸ€க்கு அழைத்துச் சென்றார். அங்கு ஜைன மதத்திற்கான பத்திரிகைகள், புத்தகங்கள், மற்றும் பல பிரசுரங்கள் வெளியிடும் அரிய தொழிலினைக் கண்டு மனங்களித்தோமாயினும், அதே நிமிஷத்தில் நமது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்ட நிலையை நோக்கி வருந்தினோம். சென்னை ஸ்ரீமான். தி. ஆதிநயினார் அவர்களையும் அவர்களால் நடைபெற்று வந்த தருமசீலனையும் புகழ்ந்து போற்றி அத்தகைய பத்திரிகை மறுபடி நமது தமிழ்நாட்டில் எப்பொழுது தோன்றுமோ வெனவும் ஏங்கினோம். கப்டியா அவர்களும் ஸ்ரீமான் ஆதிநயினார் அவர்களின் §க்ஷமம் விசாரித்தார். இவ்வாறு பல விஷயங்களைப் பற்றிப் பேசிக்களித்தபின் அவா¢டம் விடைபெற்றுக்கொண்டு திரும்பினோம்.

அன்று ஸ்பெஷலில் வந்த 700 ஜனங்களுக்கும் அவ்வூர் ஷேட் சாகர்சந்த் த்ரிலோக்சந்தீஜீ பெரும் விருந்தளித்தார். சாகர்சந்த் திரிலோக்சந்த் என்பவர் சென்னை சைனாபஜார் ரோட்டில் அமிச்சந்த் நாகின்தாஸ் என்ற தங்கள் பொன் வியாபாரகம்பெனியின் முதலாளியாவார். இவர்கள் வியாபாரம் பம்பாய், கல்கத்தா முதலிய பல முக்கிய நகரங்களில் நடக்கின்றது. சென்னை தென்னிந்திய ஜீவரக்ஷ¡ பிரசார சபையின் பொக்கிஷத்தை மதிப்பிட்டு உரைக்க முடியாது. இந்தியாவிலேயே சூரத் நகரமானது தித்திப்புப் பண்டங்களுக்குப் பேர் போனது என்று புகழ்வதுண்டு. அதனை மெய்ப்பிக்கவே ஷேட்ஜீ சுமார் பத்துப் பன்னிரண்டு வகையான தித்திப்புப் பண்டங்களும், அநேக கார வகைகளும், பலவித பதார்த்த வகைகளுமாக செய்து விருந்தளித்தார். கடைசியாக எல்லோருக்கும் சந்தன தாம்பூலம் வழங்கி ஒவ்வொருவருக்கும ஒவ்வொரு ரூபாய் பெறுமான ஒவ்வொரு பித்தளைத் தட்டினைத தானமாக வழங்கினார்.

எல்லோரும் விருந்துண்டபின் அரிய பாண்டு (Šand) வாத்தியத்துடன் எல்லோரையும் ஸ்டேஷனுக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றார். மாலை 3-மணிக்கு நாங்கள் நகரத்தைச் சுற்றிப்பார்த்தோம். சூரத் நகரம் சா¢கைக்குப் பேர்போனதாகையால் சா¢கை நெய்யும் சாலைகளுக்குச் சென்றோம். அங்கு ஆண்களும் பெண்களும் மிக்க ஆனந்தத்தோடு சா¢கை நெய்யும் காட்சியினைக் கண்டு களித்தோம். நமது நாட்டின் பண்டைய கைத்தொழிலின் மேல் கவனம் சென்று அத்தொழிலின் வீழ்ச்சிக்கு வருந்தினோம்.

கடைசியாக இரவு 9மணிக்குப் புறப்பட்டு 10-2-35 காலை ப்ரோச் வந்து சேர்ந்தோம். அவ்வூரிலுள்ள பல காட்சிகளையும், ஜினாலயங்களையும் தா¢சித்துக்கொண்டு நருமதைநதியின் இயற்கையழகில் மூழ்கி 11-2-35ல் ஆமதாபாத் வந்து சேர்ந்தோம்.

மெளன்ட் ஆபு (ஆபு மலை)

12-2-35 ஆபு மலைக்குச் சென்றோம். எங்கள் ஸ்பெஷல் அங்கு போக ஏற்பாடில்லாததால் தமிழ் நாட்டு ஜைனர்களாகிய நாங்கள் மூவரும் ஷேட் N. தன்ராஜ் B.A., அவர்களும் அவருடைய குடும்பத்தாரும் மற்றும் சில ஷேட்மார்களும் அம்மலைக்கு 11-2-35ல் ஆமதாபாத்திலிருந்து புறப்பட்டோம்.

ஆபு மலை இந்தியாவிலுள்ள மிக்க அழகும் வசீகரமும் வாய்ந்த மலைவாசங்களில் ஒன்று. ஹிமாலயம் போல் இது மிக்க பிரஸித்திபெற்றது. மலையின் பெரும்பாகம் கடல் மட்டத்திற்கு 4500 அடி உயரத்திலிருக்கிறது. இம்மலையின் உயர்ந்தபாகமாகிய குருசிகர் என்ற உச்சஸ்தானம் 5600 அடி என்று கணக்கெடுத்திருக்கிறார்கள். இராஜபுதனத்திற்குத்தெற்கே இம்மலை அமைந்திருக்கிறது. இராஜபுதன மாகாணத்தின் வடகிழக்கிலிருந்து தென்மேற்கே நீண்டிருக்கும் அரவல்லி மலைத்தொடர்ச்சியிலிருந்து ஒரு குறுகிய கணவாயால் இம்மலை பிரிக்கப்பட்டிருக்கிறது. இ·து 20 மைல் நீளமும் 8 மைலுக்கு மேற்படாத அகலமும் உள்ளது. இம்மலையின் மேலிருக்கும் இயற்கைக் காட்சிகள் உள்ளத்தைக் கவரக்கூடிய அழகுவாய்ந்தனவாயிருக்கின்றன. மலையின் மேல்பாகங்களில் ஆங்காங்கே மல்லிகை, ஷண்பகம், வெள்ளை ரோஜா, முதலிய பலவகையான மரங்களும் செழிப்பாக வளர்ந்திருக்கின்றன. இவைகளின் தோற்றம் ஓர் இயற்கை நந்தவனம் போல் காணப்படுகின்றது. உண்மைக் காதலர்களுக்கு இக்காட்சிகள் மிக்க பேரானந்தத்தைத் தரும். மலையின் மத்திய பாகத்தில் ஆபு நகரம் அமைந்திருக்கிறது. அதைச் சுற்றி மலையின் பல பாகங்களிலும் அநேக கிராமங்கள் இருக்கின்றன. நகரத்தில் அழகிய கட்டடங்களும், கடை வீதிகளும் கவர்மெண்டு ஆபீஸ€களும் இருக்கின்றன. இராஜபுதன அரசர்களின் அரண்மனைகள் பல இந்நகரத்தை அழகு செய்துக்கொண்டிருக்கின்றன.

1  2  3  4  5  6  7  8


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com