முகப்பு வாயில்

 


ஏரி

கடைவீதிக்கு மேற்கே ஓர் அழகிய ஏரி இருக்கிறது. அது 1/2 மைல் நீளமும், 1/2 மைல் அகலமுமாயமைந்துள்ளது. ஏரியைச்சுற்றி ஓர் கால்நடைப்பாதை இருக்கிறது. நிலா ஒளியில் இந்த ஏரி ஓர் வெள்ளியாலமைந்த தரையைப்போல் விளங்குகின்றது. ஆயிரக்கணக்கான நீர்வாழும் பறவைகள் இந்த ஏரியில் மூழ்கி விளையாடுகின்றன. ஆபு முனிஸிபாலிடியார் அப்பறவைகளுக்கு எவ்வித தீங்கையும் எவரும் செய்யப்படாதென்று சட்டம் பிறப்பித் திருக்கின்றார்கள். ஏரிக்குத் தெற்கே ஓர் குன்று தவளையைப் போல் தோன்றுகின்றது. இங்குள்ள இயற்கை செடிகொடிகளும் மனதைக் கவர்கின்றன.

டெல்வாடாவிலுள்ள ஜைன ஆலயங்கள்

ஆபு மலையை ஜைனர்கள் மிக்க மாயாதையாகவும் பக்தியாகவும் ஆபுஜி என்று அழைக்கின்றார்கள். ஏனெனில் இம்மலையில் அநேக பாகங்கள் ஜைனர்களின் திருக்கோயில்களுக்கு இருப்பிடமாக விளங்குகின்றன. டெல்வாடா என்ற இடத்தில் சலவைக்கற்களால் கைதேர்ந்த ஒப்பற்ற சிற்பிகளின் நுண்ணிய சித்திர வேலைப்பாடுகளமைந்த சிறந்த இரண்டு ஆலயங்கள் உலகமே புகழும்வண்ணம் அமைந்திருக்கின்றன. உலகிலுள்ள எல்லா ஆலயங்களைவிட இவைகள் மிகச்சிறந்தவையென்றும் தாஜ்மகாலைத்தவிர வேறு எந்த கட்டடத்தையும் இவைகளுக்கு ஒப்பிட முடியாதென்றும் காலனல் டாட் (Colanal dot) என்ற ஆங்கிலேயர் கூறியிருக்கின்றார் என்றால் இதன் வனப்பினை என்னென்று எழுதுவது! உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் யாத்திரிகர்கள் இவ்விரு ஆலயங்களைக் காண தினம் வருகின்றார்கள்.

இங்கு ஐந்து கோயில்கள் இருக்கின்றன. ஒவ்வொன்றையும் சுற்றி பிரகாரங்களும் சிறு சிறு ஆலயங்களுமிருக்கின்றன. இவைகளில் இரண்டு கோயில்களே மிகப் பிரசித்திபெற்றவை.

இவைகளைச் சுற்றியுள்ள மதிலின் உட்புறத்தின் தாழ்வாரத்தில் சிறு சிறு ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொன்றிலும் தீர்த்தங்கர விக்ரகங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரண்டு கோயில்களில் ஒன்று குஜராத் அரசான் இராஜப் பிரநிதி விமல்ஷாவால் கி.பி.1032ம் ஆண்டில் கட்டப்பட்டது. இது இருபத்தி நான்கு தீர்த்தங்கரால் முதல்வரான ஆதிநாத பகவானுடைய ஆலயமாகும். இக்கோயிலின் மூலஸ்தானத்தில் ஆதிநாத பகவானின் திருஉருவம் பல விலையுயர்ந்த நவரத்தினங்களாலாகிய ஆரத்தொடு விளங்குகின்றது. விக்ரகத்தின் முடியிலுள்ள நவரத்தினங்களின் மதிப்பைக் கணக்கிடமுடியாது.

இரண்டாவது கோயில் வஸ்துபால், தேஜ்பால் என்ற இரு சகோதரர்களால் கி.பி. 1231வது வருஷத்தில் கட்டப்பட்டது. இவர்கள் கெய்க்வார் இராஜாங்கத்தைச் சேர்ந்த படான் நகரத்தவர்கள். இவ்வாலயங்கட்டின காலத்தில் இவர்களிருவரும் குஜராத் அரசான் மந்திரிகளாக இருந்தார்கள். இக்கோயிலைக் கட்டி முடிக்க 16 கோடி ரூபாய் செலவாயிற்றாம். இக்கோயில் நேமி தீர்த்தங்கரருக்காகக் கட்டப்பட்டது. நேமி தீர்த்தங்கரான் உருவச்சிலை கருமை வாய்ந்த சலவைக்கல்லால் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வுருவமும் பல ஆபரணங்களால் அலங்காக்கப்பட்டிருக்கின்றது. இவ்விரண்டு ஆலயங்களும் வெள்ளைச் சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு ஆலயங்களிலும் மூலஸ்தானத்திற்கு எதிரிலுள்ள மண்டபத்தின் மத்தியில் மேல்பாகத்தில் வட்டமான வடிவில் ஓர் கூண்டு (Doom) போல் அழகிய சித்திர வேலைகளால் செய்யப்பட்டிருக்கிறது. அதன் மத்தியில் தாமரை இதழ்கள் தொங்கும் பாவனையில் பளிங்குக்கற்கள் போல் செதுக்கப்பட்டிருக்கின்றன.

ஆதிநாதஸ்வாமியின் ஆலயத்தின் கோபுரவாயிலில் விமல்ஷாவின் சிலை குதிரைமேல் ஏறி இருக்கும் பாவனையாக செய்துவைக்கப்பட்டிருக்கிறது. இதன் பக்கத்தில் ஓர் பொய அறையில் விமல்ஷா தன் குடும்பத்தாருடன் கோயிலுக்கு யானை மீதேறிவரும் பாவனையின் வெள்ளைச் சலவைக்கற்களால் மிக்க அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது. நேமிநாதர் ஆலயத்திலும் இவ்வாறே ஓர் அறையில் பத்து யானைகள் செதுக்கப்பட்டிருக்கின்றன. யானைகளின் போல் செதுக்கப்பட்டிருக்கும் ஆபரணங்கள் மிக்க நுட்பமாக வேலை செய்யப்பட்டிருக்கின்றன. கயிறுகளின் முடிச்சுகள் கூட அச்சித்திர வேலைகளில் காட்டப்பட்டிக்கின்றன. இந்த யானைகளின் போல் இருந்த சாரதிகளின் உருவங்கள் இப்பொழுது காணப்படவில்லை. யானைகளின் போல் வஸ்துபாலினுடைய உருவமும் அவருடைய இரு மனைவியர்களான லலிதாதேவி, வருதாதேவியின் உருவங்களும், தேஜ்பாலின் உருவமும் அவருடைய மனைவியான அனுபாதேவியின் உருவமும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த யானைவிக்ரஹத்திற்கெதிரில் ஓர் கல்லாலாகிய திரை இருக்கிறது. இத்திரையிலுள்ள துவாரங்கள் மிகமிக நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. அவைகள் அச்சிற்பிகளின் சாமார்த்தியத்தை விளக்கிக்கொண்டிருக்கின்றன.

சலவைக் கற்களால் செதுக்கப்பட்டிருக்கும் உருவங்கள் யாவும் உயிரும் உணர்ச்சியுமுள்ளதுபோல் விளங்குகின்றன. விதவிதமான சித்திர வேலைப்பாடுகள் வருணனைக்கு எட்டாதவைகளாக இருக்கின்றன. மதிலின் உட்புறத்தில் சுற்றிலுமுள்ள சிறுசிறு ஆலயங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு விதமான சித்திர வேலைகளால் செதுக்கப்பட்டிருக்கின்றன. ஒரு இடத்திலுள்ள சித்திரக்கலைகளை முழுதும் அறிந்து கொண்டு மற்றோரிடம் சென்றால் அந்த சித்திரம் நம்முடைய மனதைக் கொள்ளை கொள்கின்றது. இவைகளை முழமையும் கண்டானந்திக்கலாமென்ற எண்ணமும் இன்றி ஒன்றிரண்டிலேயே நம்முடைய மனம் மயங்கிக் கிடக்கின்றது. சலவைக்கற்கள் மெல்லிய பளிங்கு போன்ற ஓடுகளைப் போல் செய்திருக்கும் வேலைத் திறத்தையும், தூண்களிலும், தளங்களிலும், வாயில்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் அதிநுட்பமான அலங்காரங்களையும் நோக்குமிடத்து அழகைக் கனவு காண்பது போல் தோன்றுகின்றது.

'ஜைனர்கள் பண்டைய காலத்தில் வடமொழி, தென்மொழி முதலிய பாஷைகளுக்குத் தாயகமாய் விளங்கிய பெருமையை மெய்ப்பிக்க அவர்கள் ஆக்கிய கலைகள் இன்னும் உலகினிற் புகழோடு பிரகாசித்துக்கொண்டிருப்பது போலவே சித்திரக்கலையை முதன்முதல் ஆக்கிய ஜைனர்களின் நுண்ணிய வேலைத்திறமையை உலகுக்குப் புகட்டவே இவ்விரு ஆலயங்களும் சிறப்பாக விளங்கிக்கொண்டிருக்கின்றன' வென ஓர் ஆங்கிலேயர் புகழ்ந்திருப்பதினின்றே இதன் பெருமை நன்கு விளங்கும்.

ஆதிநாதபகவானின் ஆலயத்தைக் கட்டுவதற்காக தரையை சமனாக்குவதற்கு மாத்திரம் 56 லக்ஷரூபாய் செலவாயிற்றாம். கோயிலைக் கட்டுவதற்கு 18 கோடி ரூபாயும், கட்டி முடிப்பதற்கு 14 வருஷங்களும் ஆயின வென்றும் சாஸனங்கள் சுரங்கங்கள் இல்லையென்பதையும் கோயில்களை கட்டின காலத்தில் தற்காலத்தைப்போன்றே போக்குவரவு சாதனங்கள் இல்லை யென்பதையும் ஆராயின் இவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டிருக்குமென்பதில் சந்தேகமே யில்லை.

நேமிநாத்ஜீ ஆலயத்து வாயிலின் இரு பக்கங்களிலும் இரண்டு பொய அழகிய சித்திர வேலைப்பாடுகளமைந்த கோயில்கள் போல் மாடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இவைகளிரண்டிலும் வஸ்துபால் தேஜ்பால் இவர்களுடைய மனைவிகளின் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விரு சீமாட்டிகளும் தங்களுடைய சொந்த சொத்திலிருந்து ஒவ்வொருவரும் 1 1/4 லக்ஷரூபாய் இம் மாடங்கள் கட்டுவதற்காகச் செலவழித்தார்களென்று சாஸனம் விளக்குகின்றது.

வெளியிலிருந்து நோக்கும்போது இக்கோயில்கள் மிகச் சாதாரணமாகத் தோன்றுகின்றன. உள்ளே இவ்வளவு அருமையான அழகின் புதையல் இருப்பதாக யாரும் எதிர்பார்க்க முடியாது.

இவ்விரு அழகிய சித்திரக்கலைகளின் திறமைவாய்ந்த ஆலயங்களைத் தாசியாமல் இறக்கும் ஒவ்வொரு பாரத புத்திரனும் பிறப்பினாலுண்டாகும் பயனை இழந்தவனுக்குச் சமானமேயாகும். அதன் அழகினைப் பிறருக்கு எடுத்துரைக்க முடியவில்லை. மனதில் அவ்வாலயங்களின் சித்திரத் தோற்றங்கள் நன்கு புலனாகின்றன. ஆனால் வாயினால் வருணிக்க முடியவில்லை. எவ்வாறு வருணிப்பதென வாயுந் திறக்கத் தயங்குகின்றது. சொல்லவேண்டுமெனும் அவாவோ மேலிட்டெழுகின்றது! என் செய்வது சக்தியில்லை. ஆகையால் ஒவ்வொருவரும் அவரவர்கள் கண்களால் பார்த்து மனதால் மகிழ்தல் வேண்டும். நாங்கள் மூவரும் அவ்வற்புதக் காட்சியை தாசித்ததும் அரும்பெறல் யாக்கையைப் பெற்ற பயனையடைந்ததாகவே களிப்புற்றோம்.

செல்வம் பெற்றவர்களுக்கு இவ்விதக் காட்சியைக் காணுதல் எளிதாகையால் அவர்கள் தாங்கள் பொருள் பெற்ற பயனை இத்திருக்கோயில்களின் தாசனத்தாலும் அடையலாம். இல்லையேல்

"உண்ணான், ஒளிநிறான், ஓங்கு புகழ்செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னே
வழங்கான் பொருள்காத்திருப்பானேல்- அ ஆ
இழந்தானென் றெண்ணப்படும்"

என்ற நாலடியார் செய்யுளுக்கு இலக்காக வேண்டியவர்கள்தான்.

மற்ற மூன்று ஆலயங்களும் பாச்சாஷா, சாந்திநாத்ஜீ, பார்ஸ்வநாத்ஜீ இவர்களுக்காகக் கட்டப்பட்டவை. பார்ஸ்வநாதர் கோயில் முன்சொன்ன அழகிய இரண்டு ஆலயங்களைச் சித்தாத்த சிற்பிகள் தங்கள் சொந்த செலவில் கட்டினார்களாம்.

டெல்வாராவில் திகம்பர ஜைனர்களுக்கும் ஓர் கோயில் இருக்கிறது. கார்த்திகை, சித்திரை இவ்விரு மாதங்களில் ஜைனர்கள் அதிகமாக இவ்விடம் வருகின்றார்கள். ஸ்வேதாம்பாகளுக்கும் திகம்பாகளுக்கும் தங்குவதற்கு வசதியான பொய பொய தரும சாலைகள் இருக்கின்றன.

கோயில்களின் மானேஜ்மென்ட் இந்தியாவிலுள்ள ஜைனர்களின் தலைவர்களாலாகிய ஓர் கமிட்டியால் நடத்தப்படுகிறது. 1924ம் வருஷம் இவர்களுடைய உதவியைக் கொண்டும், சிரோஹி மகாராஜாவின் உதவியைக் கொண்டும் இந்திய கவர்மெண்டார் ஆபுரோட் ஸ்டேஷனிலிருந்து இக்கோயில்களுக்குப் போகும் வரை ரஸ்தாவை மெட்டல் ரோட்டாகப் போட்டிருக்கிறார்கள். மேற்சொன்ன கமிட்டியால் ஏற்படுத்தப்பட்ட விதிகள் பிரகாரம் இந்துக்கள் பலரும் கோயில்களில் போக அனுமதிக்கப்படுகிறார்கள். ஐரோப்பியர்களும் சில கட்டுப்பாடுகளுக்குப்பட்டு ஆபு மாஜிஸ்டிரேட்டுகளிடம் அனுமதி பெற்று உள்ளே செல்ல வேண்டும். ஆபுரோட் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இக்கோயில்கள் வரை வாடகை மோட்டார்கள் ஓடுகின்றன.

1  2  3  4  5  6  7  8


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com