முகப்பு வாயில்

 


அசலேஸ்வர் மகாதேவ் (Achalgadh)

ஆபு சிவில் ஸ்டேஷனுக்கு 5 மைல் தூரத்தில் ஓர் சிவாலயம் இருக்கிறது. அது சாதாரண ஆலயமாயினும் சிவ மதத்தினர்களுக்கு ஓர் புண்ணிய ஸ்தலமாக விளங்குகின்றது. அவ்வாலயத்தினுள் சிவபெருமானின் கால் கட்டைவிரல் மாத்திரம் கல்லால் செய்யப்பட்டு இருக்கிறது. இவ்விரலுக்குக் கீழே ஓர் சுரங்கம் தொகிறது. அச்சுரங்கத்தை அங்குள்ளவர்கள் நரகத்திற்குப் போகும் வழியென்று நம்புகின்றார்கள். இக்கோயில் ஒரு காலத்தில் மிகப்பழமையாகவும் இடிந்தும் போய்விட்டது. அதனை ஜைன மதத்தினரும் நேமிநாத பகவானின் ஆலயத்தை கட்டியவருமாகிய வஸ்துபால் தேஜ்பால் இருவரும் புதுப்பித்ததாக சாஸனம் பொறிக்கப்பட்டிருக்கின்றது. இது மதத்வேஷமற்ற ஜைனர்களின் பெருந்தன்மையையும் சூடாமணி நிகண்டாசிரியர் "பகவனே ஜினனேமாயோன் பங்கயன் சிவனே புத்தன்" என்ற திருவாய் மொழிப்படி எல்லா தெய்வங்களும் பெயரளவில் வேறுபடினும் மூலப்பொருள் ஒன்றே என்ற சமரச நோக்கத்தையும் விளக்குகின்றதல்லவா? இத்தமிழ் நாட்டிலோ அத்தகைய குற்றமற்ற ஜைனர்களைப் புண்படுத்தும் வகையில் சைவ மதத்தினர் சிவபெருமான் ஜைனமதத்தை அழிக்க சிவபக்தர்களுக்குத் துணைபுரிந்ததாக பல புராணங்கள் பாடியும் கதைகளாக புத்தகங்கள் எழுதியும் பிரசங்கங்கள் செய்தும் வருகின்றார்கள். மதுரைக் கோயிலில் ஜைனர்களைக் கழுவிலேற்றிக் கொல்லும் விழாவையும் நடத்திக் காண்பிக்கின்றார்கள். நமது சைவ சகோதரர்கள் எப்பொழுது இக்கொள்கைகளை மறப்பார்களோ அறியேன். இச்சிவாலயத்தின் எதிரில் ஓர் பித்தளை நந்தியின் உருவம் வைக்கப்பட்டிருக்கிறது. அது சிறிது உடைபட்டிருக்கிறது. இங்கே வடஇந்தியர் பலர் மகதேவ் தாசினம் என பக்தியோடு யாத்திரை வருகின்றார்கள்.

அச்சலேஸ்வராலயத்தின் பக்கத்தில் அக்னி குண்டம் என்ற ஓர் பொய குளம் இருக்கிறது. அக்குளத்தைச் சுற்றி சிறுசிறு குன்றுகள் இருக்கின்றன. குளக்கரையின் மேல் கல்லினால் செய்யப்பட்ட மூன்று எருமைக் கடாக்களின் உருவங்க்ள அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன. இவ்விடத்திலுள்ள குன்றுகளினுடையவும், மரஞ்செடிகளினுடையவும் எருமைக் கடாக்களின் நிழலும் அக்குளத்தில் பிரதிபலிக்குங் காட்சி மனதைக் கொள்ளை கொள்ளுகின்றது.

இங்கிருந்து சிறிது தூரம் சென்றால் அங்கு ஜைனர்களுக்குரிய சாலையும் தர்ம சாலையும், விருஷப ஸ்வாமி, பார்ஸ்வநாதர், நேமிநாத்ஜி முதலிய தீர்த்தங்கர பரமேஷ்டிகளின் ஆலயங்களும் இருக்கின்றன.

அச்சல்காட் (Achalgadh) என்பது ஒரு கோட்டை, இது ஆபு மலையை ஆண்டுவந்த பார்மரர்கள் என்ற அரச பரம்பரையால் கி.பி.900ம் வருஷத்தில் கட்டப்பட்டு அவர் கள் ஆக்ஷயில் இருந்தது. அவர்கள் முதலில் சுயேச்சையாக இருந்தார்கள். பிறகு சாளுக்கிய அரசர்களின் ஆதிக்கத்திற்கு அடங்கியிருந்தார்கள். பதினொன்றாம் நூற்றாண்டில் இக்கோட்டைக்கும் ஆடி மலைக்கும் அரசனாயிருந்த குஜராத் அரசன் குமாரபால மகாராஜாவென்ற ஜைன அரசான் ஆதிக்கத்திற்குட்பட்டு எசோதவால்பார்மர் என்ற அரசன் ஆண்டு வந்தான். இந்த குமாரபால மகாராஜனே ஓர் பொய யாத்திரையை நடத்தியவன். இங்குள்ள ஆதிநாத பகவானின் ஆலயம் மிகவும் முக்கியமானது. இது உயரமாகவும் அழகாகவும் கட்டப்பட்டிருக்கிறது. ஆதிநாத பகவானின் நான்கு சிலைகள் நான்கு பக்கங்களிலும் பார்க்கும் படி அமைந்திருக்கின்றன. இவைகள் 1400 மணங்கு எடையுள்ள தங்கத்தால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், வெள்ளியும் செம்பும் கலந்திருக்குமென்று அதன் தோற்றத்தை உற்று கவனிப்பவர்களுக்கு விளங்கும். இக்கோயிலின் மண்டபத்தின் மேலும் நான்கு சிலைகள் இருக்கின்றன. இம்மண்டபத்தின்மேல் நின்று பார்த்தால் குருசிகர் என்ற ஆபு மலையின் உயரமான சிகரமும், பூமியிலுள்ள சமவெளிகளும், ஆபுரோட்டிற்கு வருகின்ற ரயில்வே பாதைகளும், ஆபு ரோட் ஸ்டேஷனிலிருந்து மலைக்கு வருகின்ற ரோட்டும் நன்றாகத் தொகின்றன. இந்த இடத்தின் காட்சிகள் ஓர் வித்தியாதரன் தன் வித்தையால் நிர்மாணித்த மாய பூமிபோல் தோன்றுகின்றது. இங்கு காற்று வெகு வேகமாக வீசுகின்றது. உச்சியில் நின்றால் காற்று நம்மைக் கீழே தள்ளுவதுபோல் வீசியடிக்கின்றது. இத்திருக்கோயில்கள் கும்பராணா என்ற ஓர் ஜைன அரசனின் மனைவியால் தன் நாயகனின் ஞாபகார்த்தமாக 15-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டன. கும்பராணாவின் சிலையும் அவனுடைய பேரனின் சிலையும் குதிரையின் போல் ஏறிக்கொண்டிருக்கும் பாவனையில் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இங்கிருந்து சிறிது தூரம் மலைமேல் சென்றால் அங்கே ஓர் இடிந்த பழைய கோட்டைவாயில் இருக்கின்றது. உள்ளே ஷ்ரவன், பதர்வா என்று இரண்டு குளங்கள் வற்றாத ஜலமுடையவைகளாயிருக்கின்றன.

குருசிகர்

குருசிகர் என்ற இடத்திற்குப் போகும்வழியில் ஒரியா என்ற கிராமம் இருக்கிறது. அக்கிராமத்தினருகில் மகா வீரஸ்வாமியின் கோயில் ஒன்று இருக்கிறது. இங்கிருந்து தான் குருசிகருக்குப் போகவேண்டும். குருசிகால் சிவன் கோயில் ஒன்றும் இருக்கிறது. கெளமும், வஸிஷ்டாஸ்ரமம் என்ற இரண்டும் இவ்விடத்தில் பிரசித்தி பெற்றிருக்கின்றன. இங்கிருந்து சுமார் 2 பர்லாங் தூரம் சென்றால் ஆபு ஹைஸ்கூல் ஒன்று இருக்கிறது. இது பம்பாய், பரோடா, மத்திய இந்தியா, முதலிய ரயில்வே கம்பெனியாரால் தாங்கள் ரயில்வே உத்தியோகஸ்தர்களின் பிள்ளைகள் வாசிப்பதற்காக 1887-ம் ஆண்டில் கட்டப்பட்டு வெகு சிறப்பாக நடந்துவருகிறது. இதன் பக்கத்தில் ஆர்ணா என்ற ஓர் இடத்தில் ஜைனர்களுக்கென ஓர் தர்மசாலை இருக்கிறது.

ஆபுமலை தாசனம் முடிந்ததும் ஆமதாபாத்திற்குத் திரும்பினோம். ஆமதாபாத்தில் சுமார் 100, 150 ஜைன ஆலயங்கள் இருக்கின்றன. நாங்கள் சில முக்கிய ஆலயங்களைத் தாசித்துக்கொண்டு மகாத்மாகாந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமத்தை தாசிக்கச் சென்றோம்.

இது சபர்மதி நதியின் கரையோரத்தில் இருக்கிறது. மகாத்மா காந்தி அவர்கள் தமது உயாய குணத்திற்கேற்ப அவ்வாசிரமத்தையும் அமைந்திருக்கின்றார். ஆசிரமத்தைச் சுற்றி மரங்களும் செடிகளும் செழிப்பாக வளர்ந்து அவ்வாசிரமத்தை அழகு செய்துகொண்டிருக்கின்றன. அவருடைய எளிய தூய வாழ்க்கையைப் போலவே சாதாரண ஓடுகளால் மூடப்பட்ட கூரைகளாலாய கட்டடங்களாகக் கட்டப்பட்டிருக்கின்றன. மகாத்மா போஜன மருந்தும் இடமும், படுக்கையறையும், தவமியற்றுந் தனிக்குடிலும், உபதேசம் புரியும் மைதானமும், அம்மைதானத்தில் மகாத்மா உட்காரும் சிறிய மேடையும் எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. அப்பெரும் பதியை தாசிக்கும் வாய்ப்பை எங்கள் முன்னை பாக்கியமாக எண்ணிக் களித்தோம். மகாத்மாவே இவ்விடத்தில் இருந்திருப்பாரேயானால் நாங்கள் வீடுபேறு பெற்றதாகவே மகிழ்ந்திருப்போம்.

இம்மகத்தான புண்ணியாஸ்ரமத்தைத் தாசித்துவிட்டு சபர்மதி நதியில் நீர் விளையாடி எங்களிருப்பிடம் சென்றோம். ஆமதாபாத்திலும் அநேக ஜைன பத்திரிகாலயங்கள் இருக்கின்றன. அன்று இரவு ஆமதாபாத்திலிருந்து புறப்பட்டு 14-2-35-ல் வாங்கனீர் வந்து சேர்ந்தோம். இங்கு ஷா. மகன்லால் என்பவர் எங்களை நன்கு வரவேற்று ஓர்விருந்து செய்தார். இவர் சென்னை பந்தர் தெருவில் ஜே. எம்.ஷேட் என்ற விலாசமுள்ள ஓர் பொய வாசனைத் திரவிய வியாபாரி.

இவ்வூரில் ஒரு துணி நெய்யும் ஆலை இருக்கின்றது. இங்குள்ள ஜைன க்ஷத்திரங்களைத் தாசித்துக்கொண்டு 15-2-35 காலை ஜுனாகாட் போய்ச் சேர்ந்தோம். ஜுனாகாட் என்பது ஓர் மகம்மதியான் ஆதிக்கத்திற்குட்பட்ட சமஸ்தானம். இவ்வூரில் மகம்மதியர்களே அதிகம். இங்குள்ள ஓர் பொய மலைக்கே ஊர்ஜயந்தகிரி என்று பெயர். இம்மலை நேமி தீர்த்தங்கரான் மோக்ஷஸ்தானமாகும். ஆகையால் இங்கு அநேக ஜைன ஆலயங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. மலையின் அடிவாரத்தில் இரு வகுப்பாருக்கும் தரும சாலைகள் இருக்கின்றன.

ஊர்ஜயந்திகிரியின் போல் ஏறிச்செல்ல ஒழுங்கான படிக்கட்டுகள் அமைந்திருக்கின்றார்கள். மலையின் அடிவாரத்திலிருந்து மலையின் மேலுள்ள கோயில்கள் வரை சுமார் நான்குமைல்கள் இருக்கும். நடக்க முடியாதவர்கள் டோலியில் ஏறிச் செல்லுகின்றார்கள்.

இங்கு மயில்களின் கூட்டம் நமது நாட்டில் கோழிகளின் கூட்டம் போல் சாதாரணமாகத் திரிகின்றன. அவைகள் தங்களது அழகிய தோகைகளை விரித்தாடுங் காட்சிகளை திருத்தக்கதேவர், கம்பன், காளிதாசன் முதலிய கவிவாணர்கள் வருணித்திருக்கும இயற்கை நிறைந்த வருணனைக் கவிகள் எனது சிந்தையிற் கலந்து மகிழ்ச்சியையூட்டின.

இவ்வாறு பல வனப்புகளையும் ஜுனாகாட் நகர அலங்காரங்களையும் பார்த்துவிட்டு 18-2-35 காலை பாலிடானா வந்து சேர்ந்தோம்.

பிரசாரங்கள்


இந்த இரு ஸ்பெஷல்களிலும் சென்றபோது நமது சபை பிரசாரங்கள் அலீர், ஜங்கம், அகோலா, வங்கனீர், ஆமதாபாத், பாலிடானா முதலிய விடங்களில் நடந்தன. ஆங்காங்கு உள்ள ஜீவகாருண்ய சபையார்கள் எங்கள் பிரசாரத்திற்குத் துணைபுரிந்தும் சிற்றுண்டிகளை வழங்கியும் சிறப்பித்தார்கள். சென்னை தென்னிந்திய ஜீவரக்ஷ பிரசார சபையைப் போலவே வடநாட்டிலுள்ள எல்லா ஜீவகாருண்ய சங்கங்களும் ஜைனர்களின் பொருளுதவியால் ஸ்தாபிக்கப்பட்டும் பெரும்பாலும் ஜைன தொண்டர்களால் பிரசாரம் செய்யப்பட்டும் வருகின்றன. என்னைப் பற்றி அந்த சபைகளில் அறிமுகம் செய்வித்தபோது ஆமதாபாத்திலுள்ள ஒரு பொயகவி என்னைப் புகழ்ந்து, தென்னாட்டிலும் ஜீவகாருண்ய பிரச்சாரத்தைச் செய்பவர் ஒரு ஜைனர் என்பதால் நான் மிக்க பேரானந்த மடைகின்றேன். அக்காலத்திலும் நம்மதத்தினரே அஹிம்ஸாதருமத்தைப் பரவச் செய்ய பெரும்பாடுபட்டிருக்கின்றார்கள். இக்காலத்தும் அப்பெருந்தொண்டினை தொடர்ச்சியாக நம்மவரே ஆற்றிவருவதைக் கண்டு மகிழ்வாதாகக் கூறி என்னை வாழ்த்தினார்.
 

1  2  3  4  5  6  7  8


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com