முகப்பு வாயில்

 


வரவேற்பு

இந்த இரு ஸ்பெஷல்களும் சென்ற வழிகளில் அலீர், அகோலா, சூரத், அஹமதாபாத், வாங்கனீர், முதலியவிடங்களிலுள்ள ஜைனர்கள் மிக்க பக்தியோடும் அன்போடும் வரவேற்று ஸ்டேஷனிலிருந்து தர்ம சாலைவரை மேள வாத்தியங்களோடு நகர ஊர்வலமாக அழைத்துச் சென்று நல்விருந்து செய்து சிறப்பித்தார்கள்.

கேட்டி விஜயம்

நாங்கள் 18-2-35ல் பாலிடானா போய்ச் சேர்ந்தோம். அன்றுதான் அப்பெரும் யாத்திரை சங்கத்தார் சோமால் என்ற கிராமத்திலிருந்து பாலிடானாவிற்கு 5 மைல் தூரத்திலுள்ள கேட்டி என்ற கிராமத்திற்கு விஜயமாகின்றார்கள். அச்சங்கதியறிந்ததும் நானும் திரு. இந்திரகுமார நைனார் அவர்களும் அவ்விடம் சென்று தா˘சிக்கப் புறப்பட்டோம். ஆனால் எங்களோடு வந்த தரணி நயினார் அவர்களுக்கு அன்று சற்று அயர்ச்சி ஏற்பட்டிருந்தபடியால் அவர் வரவில்லை. நாங்களிருவரும் 19-2-35 காலை 4 மணிக்கு புறப்பட்டு 6-30 மணிக்கு கேட்டி போய்ச் சேர்ந்தோம். அப்பொழுத அந்த சங்கம் நகருகின்ற காட்சியைக் கண்டோம். வண்டிகள் வா˘சை வா˘சையாக வந்து கொண்டிருப்பதையும், சாதுக்களும் மற்றவர்களும் நடந்துவருகின்ற காட்சியையும், மோட்டார்கள் வருகின்ற காட்சியையும், கூடாரம் அடிக்கின்ற காட்சியையும், குதிரைப்படைகள் உலவுகின்ற அரிய காட்சியையும் மற்ற எல்லாக் காட்சிகளையும் நோ˘ல் கண்டு உடல்பூரித்து புளகாங்கிதமடைந்தோம். பிறகு சுமார் 10-30 மணிக்கு சங்க பதியும் மற்றவர்களும் விஜயம் செய்தார்கள். சுமார் 12 அல்லது 1 மணிக்கு சங்கபதியும் அவர் மனைவியும் மற்றும் பலரும் அவ்வூராரின் அழைப்பிற்கிணங்கி ஊர்வலமாகச் சென்று அங்குள்ள கோயில்களை தா˘சித்தும் பல பொது ஸ்தாபனங்களை பார்வையிட்டும் வந்தார்கள். அங்குதான் நானும் என் நண்பரும் சங்கபதியை வணங்கி நின்றோம். அவரும் பதில் வணக்கம் தொ˘வித்து எங்களை 'தாங்கள் மதராஸிகளா' வென்று ஆங்கிலத்தில் கேட்டார். நாங்கள் ஆம் என்று பதில் இறுத்தி ஜைனர்களென்றும் சொல்லிக்கொண்டோம். எங்களிருவா˘ல் என் உடையையும தலையிலு;ள குடுமியின் அமைப்பையும் கண்டே மதராஸியென்று தொ˘ந்துகொண்டார். எனது நண்பர் திரு. இந்திரகுமார் அரையில் மடிசாரும் மேலே நீண்ட ஷர்ட்டையும் அங்கவஸ்திர மேதுமின்றி தலையில் குல்லாயும் அணிந்து வடநாட்டு உடை (Imitate) போல உடுத்தி நடித்துவந்தார். நான் தமிழ்நாட்டு உடைபோல தலையிலேதுமின்றி மேலங்கவஸ்திரமும், ஜுப்பாவும், அரையில் மடிசாரின்றி வஸ்திரமும் உடுத்தியிருந்தேன். என் உடையைக் கண்டே எங்களை சங்கபதி சென்னை வாசிகளென்று அறிந்துகொண்டார். சென்னை யென்றும் தமிழ்நாட்டு ஜைனர்களென்றும் சங்கபதி அறிந்துகொண்டதும் அளவிலா ஆனந்த முண்டாகி முகமலர்ச்சியோடு எங்கள் வரவை பெருமையாகக் கொண்டாடிக்களித்தார். உடனே அவர்தம் பக்கலில் நின்ற ப்ரைவேட் செக்ரிடா˘யும் அன்போடழைத்து, அங்குள்ள மற்ற முக்கியஸ்தர்களுக்கும் தொண்டர் படையின் தலைவர் ஷா. லக்ஷ்மிசந்த் கீம்சந்த் அவர்களுக்கும் எங்களை அறிமுகஞ்செய்துவைத்த, தொண்டர் தலைவரை எல்லாவித செளகர்யங்களையும் எங்களுக்குச் செய்யும்படி உத்தரவு இட்டார். அத்தொண்டர் தலைவர் பம்பாயில் ஒரு பொ˘ய ரத்ன வியாபாரி. அவர் இச்சங்கத்திற்குத் தொண்டுபுரியவே அநேக தொண்டர்களோடு அன்பும், அடக்கமும், பக்தியும் நிறைந்த உண்மைத் தொண்டினை இங்கு ஆற்றிவந்தார். அவரும் எங்களை தங்கள் முகாமில் அழைத்துக்கொண்டு போய் மற்ற தொண்டர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார். அத்தொண்டர்கள் யாவரும் எங்களிடம் அன்பாக நடந்துகொண்டார்கள். பிரார்த்தனை, ஊர்வலம், போஜனம், சிற்றுண்டி முதலிய எல்லா சமயங்களிலும் எங்களையின்றி தொண்டர்கள் செல்வதேயில்லை.

கேட்டியிலும் பாலிடானாவிலும் இருந்த ஏழு நாட்களும் எங்களுக்கு எந்தவிதமான குறைவுமின்றி மா˘யாதையோடும் சிறப்போடும் நடத்தினார்கள்.

பாலிடானா விஜயம்

20-2-35 காலை இந்த சங்கமானது கேட்டியிலிருந்து பாலிடானாவிற்கு விஜயமாயிற்று. இவருடைய வரவை முன்னிட்டு பாலிடானா வீதிகளிலெல்லாம் வரவேற்புக்கொடிகள் கட்டப்பட்டு நகரம் அலங்கா˘க்கப்பட்டிருந்தது. 19-2-35 இரவு 8 மணியிலிருந்தே வண்டிகளும் சாமான்களும் சென்றுகொண்டே யிருந்தன. காலை 9 மணிக்கெல்லாம் எல்லா கூடாரங்களும் அடித்தாகிவிட்டன. காலை 7-30 மணிக்கு சங்கபதி தங்கள் விருதுகளோடு பாலிடானாவிற்குள் நுழைந்தார். உடனே பாலிடானா சமஸ்தான திவான், அரச ஏஜெண்டு (Political AGent) முதலிய பல உயர்தர உத்தியோகஸ்தர்கள் அரச சின்னங்களோடு பல வாத்திய கோஷ்டங்கள் முழங்க அவரை எதிர்கொண்டு கவர்ன்மெண்டு மாளிகைக்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கு வரவேற்புச் சிறப்புகளெல்லாம் நடந்தேறியபின் அப்படியே அவ்வுத்தியோகஸ்தர்களுடன் சங்க முகாமிற்கு ஊர்வலமாக பல வீதிகளைச் சுற்றிக்கொண்ட சென்றார்கள். அப்பொழுது பாலிடானாவில் நடந்த காட்சியை அளவிட்டுரைக்க ஆதிசேடனாலும் முடியா. அந்நகரத்து மாளிகைகளெல்லாம் ஜனக்கூட்டம், தெருக்களில் எள்ளிடஇடமில்லாத ஜனத்திரள், அக்காட்சியைக் காண்பதற்காக பல பாகங்களிலிருந்தும் வந்த ஜனக்கூட்டங்கள் சுமார் 60,000த்திற்கு மேலிருக்கலாம். பாலிடானாவில் சுமார் 50, 60 ஜைன சத்திரங்கள் பொ˘து பொ˘தாக கட்டப்பட்டிருக்கின்றன. அவைகளெல்லாம் நிறைந்துவிட்டன. பலர் இடமின்றியும் தவித்தார்கள். இவ்வாறு பல வீதிகளிலும் ஜனத்திரள் புடைசூழ எங்கும் பூமாரிகள் பொழிய, பல ஜைன சங்கங்களும் பொது ஸ்தாபனங்களும் வழி நெடுக சங்கபதிக்கும் அவர் தம் மனைவியாருக்கும் மாலைகள் சூட்டி மகிழ வெகு சிறப்போடு சங்க முகாம் போய்ச் சேர்ந்தார்கள். இக்காட்சிகளெல்லாம் சினிமா கம்பெனியார்களால் படம் பிடிக்கப்பட்டது.

சித்தாசல தா˘சனம்

பாலிடானாவிலுள்ள சத்ருஞ்சயகிரி என்ற சித்தாசலத்தை தா˘சிக்க சங்கபதி 21-2-35 காலை 6 மணிக்கு சங்க ஜனங்களோடு புறப்பட்டார். அம்மலையிலுள்ள ஜினாலயங்களை சங்கபதி தன் சுற்றத்தாரோடும் தா˘சித்து அம்மலையிலுள்ள ஆதீஸ்வர பகவானுக்கு இரண்டு லக்ஷ ரூபாய் மதிப்புள்ள நவரத்தின ஆரத்தைச் சூட்டினார். சங்கபதி அவர் மனைவி, அவருடைய சிறியதாயார் ஆகிய மூவம் பகவானைப் பூஜிக்கக்கொண்டுபோகும் தேங்காயை, நவரத்தினங்களாலிழைத்ததும் ஒவ்வொன்றும் சுமார் 1 1/2 லக்ஷ ரூபாய் மதிப்புள்ளதுமான தேங்கா யுருவுபோ லுருண்டை வடிவான நவரத்தினக் கூடுக்குள் வைத்து மிக்க பக்தியோடு பகவானின் திருவடிகளில் வைத்துப் பூஜித்தார்கள். நவரத்தினங்களாலாய இம்மூன்று கூடுகளும் அவர்கள் ஆலயங்களுக்குச் செல்லும் போது இவ்வாறு உபயோகப்படுத்துவதற்கெனவே செய்யப்பட்டவைகள். இவ்வாறு பல சிறப்புகளோடு அம்மலையிலுள்ள ஆலயங்களையெல்லாம் தா˘சித்துக்கொண்டு சங்க முகாம்வந்து சேர்ந்தார்கள். இவ்வித சிறப்புகளோடு ஒன்றுவிட்டொரு நாளாக மூன்றுநாள் அத்திருமலையை பக்திவினயத்தோடு தா˘சனம் செய்தார்கள். 23-2-35ல் சங்கபதிக்கு ஆமதாபாத் நகர ஷேட்கள் வாழ்த்துப்பத்திரம் வாசித்து அதனைப் பொன்பேழையில் வைத்துக்கொடுத்தார்கள். அப்பொ˘யார்களில் சிலர் பட்டுத்துணியில் பொன்னிறச் சா˘கை பிரகாசிக்க நூதன வடிவினாலமைந்து அழகாக விளங்குந் தலைப்பாகைகளை அணிந்திருந்தார்கள். அத்திருப்பாகைகளைக் கண்டதும் நாங்கள் அங்குள்ளவர்களை அதன் விவரத்தை விசாரித்தோம். அத்தகைய தலைப்பாகையையுடையவர்களெல்லாம் கோடீஸ்வரர்கள் என்று கூறினார். அதனைக் கேட்டதும் இந்நாட்டின் வியாபாரங்களிலும் செல்வங்களிலும் பாதியை ஜைனர்களும் மற்ற பாதியை மற்ற வகுப்பார்களும அடைந்திருக்கின்றார்களென்று 1900-1905 வரை வைசிராயாகவிருந்த லார்ட் கர்ஸனின் புகழ்மொழி என் சிந்தையில் எழுந்தது. இப்புகழ் மொழியை மெய்ப்பிக்கும் கோடீஸ்வரர்களும் பல நகர சங்கத்தார்களும் சங்கபதிக்கு வாழ்த்துப் பத்திரங்கள் வாசித்துக்கொடுத்தார்கள். நமது சபையின் சார்பாகவும் நமது சபை கெளரவ காரியதா˘சி ஷேட் பபூத்மல் ரிகப்தாஸ் அவர்களாலும் ஒரு வாழ்த்துப் பத்திரம் வாசித்துக்கொடுக்கப்பட்டது. இவ்வாறு வாழ்த்துப் பத்திரங்களை வாசித்துக்கொடுத்தபின் உலகமே அதிசயிக்கும் இவருடைய யாத்திரையைப் பல படப்புகழ்ந்து பலர் பேசினார்கள்.

பிறகு எல்லாரும் சேர்ந்து சங்கபதிக்கு சங்க்வி மாணிக்கலால் மன்சுக்பாய் என்ற பட்டத்தை அளித்தார்கள். அவரும் பலருக்கும வந்தனமளித்தார். மறுநாள் ஆனந்தரஜீ கலியாணஜீ என்ற ஜைன மகா சங்கத்தில் செய்யப்பட்ட 10 லக்ஷ ரூபாய் பெறுமான முள்ளதும் 10, 12 வருஷங்களாகச் செய்யப்பட்டதுமான ஒரு ரத்தினக் கிĄŁடத்தை சங்க்வி முதலிய பலரும் ஆதிநாத பகவானுக்குச் சூட்டிப் பூஜித்தார்கள். இவ்வாறு மாணிக்கலால் மன்சுக்பாய் தனது யாத்திரையை மிகச் சிறப்போடும், பக்தியோடும், புகழோடும் முடித்துக்கொண்டு கடைசி நாளாகிய 28-2-35ல் பல ஸ்பெஷல்கள் மூலமாக சாமான்களையும் சங்க ஜனங்களையும் அவரவர்களிருப்பிடங்களுக்கு அனுப்பிவிட்டார். அன்று சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சங்கபதியை வாழ்த்தி வணங்கி பூமாலை மா˘யாதைகள் செய்து தங்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு ரயிலேறிச் சென்றார்கள். சாமான்களும் அவ்வாறே ஸ்பெஷல்களில் அனுப்பப்பட்டன. மாட்டு வண்டிகள் 1,150ம் மோட்டார்கார்களும் காலியாகவே ஆமதாபாத்திற்குச் சென்றன. இவ்வாறு அந்த திவ்ய யாத்திரை உலகமே அதிசயிக்கும்படி வெகு சிறப்போடும் பக்தியோடும் ஆனந்தமாகவே முடிவு பெற்றது.

ஸ்ரீஜைனாசார்ய கம்பீர விஜயாஜி மகராஜ் தா˘சனம்

1926-ம் வருஷத்தில் சென்னைக்கு விஜயம் செய்து நமது சபையாகிய தென்னிந்திய ஜீவரட்சா பிரசாரக சபையை தோற்றுவித்தருளிய ஸ்ரீ ஜைனாசார்ய கம்பீர விஜயாஜீ மகராஜ் அவர்களைப் பாலிடானாவில் நேரே கண்டு தா˘சித்தேன். அப்பொ˘யார் என்னை அன்போடு ஆசீர்வதித்து என் உண்மைத் தொண்டினை பழைய கெளரவ காரியதா˘சி ஷேட் ஹாம்ஜி ஷிவ்ஜி மூலமாகக் கேள்விப்பட்டதாகக்கூறி என்னை மகிழ்வித்தார். 8 வருடங்களுக்குப் பின்னால் தா˘சித்த அப்பொ˘யாரை நான் நேரே கண்டபோது ஆனந்தக் கண்ணீர் சொரிந்தேன்; அம்மகானும் அடியேனைக் கண்டதும் உள்ளம் பூரித்து அடிக்கடி என்னைத் தட்டிக்கொடுத்துப் பேசி மகிழ்ந்தார். சபையைப்பற்றி விசாரித்தபின் சபை நிதிக்காக ஆரம்பத்தில் ரூ.7151 கொடுத்துதவிய ஷா. தேவ்ஸி மூல்ச்சந்த், C.S. மல்லிநாத் அவர்களுடையவும் மற்ற அங்கத்தினர்களுடையவும் §க்ஷமங்களைப்பற்றி மிக்க அன்போடு விசாரித்தார். அடியேன் சுமார் 1/2 மணி நேரம் பேசி மகிழ்ந்த பின் அவர் தம் திருவடிகளை வணங்கி விடைபெற்றுக்கொண்டு வந்தேன். மறுபடியும் சென்னைக்குப் புறப்படும் போதும் அப்பொ˘யாரின் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு வந்தேன்.

சங்கம் முகாம் செய்த விடங்கள்

(1) அஹமதாபாத் நகர சங்கம், (2) சார்கேஜ், 3) காசந்திரா, 4)பாதர்கா, 5) டோல்கா, 6) ஸாரண்டி, 7) கோச், 8) பகோத்ரா, 9) மிட்டாபூர், 10) தேவபூர், 11) பாலிஸானா, 12) சோகி, 13) சூடர், 14) பேசான், 15) லோயா, 16) பாலியா, 17) ஸார்வா, 18)வீச்சியா, 19) லீலாவதார், 20) ஜெஸ்டன், 21) அட்காட், 22) நதூலா, 23) மாயாபத்தார், 24) கோண்டால் கம்பாலியா, 25) ரோஜாடி, 26) போண்டாஸ், 27) வீர்பூர், 28) ஜாட்பூர், 29) வடால், 30) ஜுனாகாட், 31) வடால், 32) காராச்சியா, 33) வாவிடி, 34) க்யூரி, 35) குக்காவால், 36) அக்காடியா, 37) அம்ராலி, 38) சல்லடி, 39) காரா, 40) கா˘யாதா, 41) சோமால், 42) கேட்டி, 43) பாலிடானா, 44) சித்தாசல். (சத்ருஞ்சயகிரி)

இணையற்றதும் அடிக்கடி காணமுடியாததுமான இப்பெரும் புனிதயாத்திரையை தா˘சிக்கும் பாக்கியத்தையடைந்த நாங்கள் பம்பாய் நகரத்தைச் சுற்றிக்கொண்டு 1-3-35 காலை சென்னை வந்து சேர்ந்தோம்.

சென்னை நகர் வந்ததும் இங்குள்ள ஸ்வேதாம்பர திகம்பர ஜைனர்கள் ஸென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து பலவித வாத்திய கோஷ்டங்களோடு வரவேற்றார்கள். ஸ்டேஷனிலிருந்து தங்கசாலை வீதியே வந்து அங்குள்ள மூன்று ஸ்வேதாம்பர ஜினாலயங்களைத் தா˘சித்தும், சுப்பிரமணிய முதலி வீதியிலுள்ள திகம்பர ஜினாலயத்தையும் தா˘சித்தோம்.

இந்த திகம்பர ஜினாலயம் ஸ்ரீமான் தி. ஆதிநயினார் அவர்களின் களங்கமற்ற ஹிருதயத்தின் தூண்டுதலால் எடுத்துக்கொண்ட பெரு முயற்சியாலும், ஸ்ரவணபெளிகுளமடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீ நேமிசாகரவர்ணிஜீ ஸ்வாமிகளுடையவும், பிரம்மச்சாரி சீதளபிரசாத்ஜீ அவர்களுடையவும் பேருதவியாலும் பல திகம்பர ஜைனர்களின் பொருளுதவியாலும் 1924-ல் ஸ்தாபிக்கப்பட்டது. இத்திருக்கோயிலை வடநாட்டிலுள்ள ராஞ்சி நகரவாசியும், திகம்பர ஜைனரும் தருமகுண சீலருமாகிய ஜோகிராம் மங்குராஜ் கம்பெனி ஷேட் பெய்ஜினாத் பாபுஜி அவர்களால் விசாலமாகவும் அழகாகவும் கம்பீரமாகவும் 1934-ல் புதுப்பிக்கப்பட்டது. சென்னையில் திகம்பா˘களுக்கு தங்குவதற்குரிய வசதியையும் தா˘சிப்பதற்குரிய திருக்கோயிலையும் தந்தருளிய மேற்படி பொ˘யார்கள் யாவருக்கும் நிறைந்த ஆயுளும், குறைவற்ற செல்வமும், உயா˘ய தருமகுணமும் மென்மேலும் உண்டாக வேண்டுமென எல்லா முணர்ந்த இறைவனாம் அருகப் பெருமானை அனவரதமும் இறைஞ்சுகின்றேன்.

வந்தே ஜினவரம்.

சுபம்! சுபம்!! சுபம்!!!
 

1  2  3  4  5  6  7  8


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com