முகப்பு வாயில்

 


 

"Sacrifice of animals in the name of religion is remnant of Barbarism"

"மதத்தின் பெயரால் உயிர்ப்பிராணிகளைப் பலியிடுதல்
காட்டுமிராண்டித்தனத்தின் கையிருப்பு."
(ஒப்பம்) காந்தி.

(கையிருப்பு என்றால் நம்மிடமுள்ள அநாகாகப் பழக்கவழக்கங்களில் ஒழிந்தன போக மீந்திருப்பது.)

"I am grieved to learn that it is proposed to offer animal sacrifice in temples. I think that such sacrifices are Barbarous and they degrade the name of religion. I trust that the authorities of the temple will pay heed to the sentiments of cultured People in this matter and refrain from such sacrifices.
(sd.) JAWAHARLAL NEHRU.

"கோயில்களில் மிருகங்களைப் பலியிடுவதற்க ஏற்பாடு செய்யப்படுகிறது என்று கேட்க மிகவும் வருந்துகிறேன். அவ்வாறு பலியிடுதல் மிலேச்சத்தனமென்றும் மதத்திற்கு இழுக்காகுமென்றும் நான் கருதுகிறேன். இவ்விஷயத்தில் கோயில் அதிகாரிகள் கற்றவர்களுடைய மனப்பான்மையைக் கவனித்து அவ்வாறு பலியிடுவதை விலக்குவார்களென்று நான் நம்புகிறேன்."
(ஒப்பம்) ஜவஹர்லால் நேரு.

இவ்விரு அறிவுரைகளையும் ஆயிரக்கணக்கில் அச்சிட்டு வழங்கினோம். அதனால் பொதுமக்கள் சக்தியும், பொயோர்கள், அதிகாரிகள் ஆதரவுகளும் எங்கள் பக்கம் திரும்பிவிட்டன. கடைசியாக பாளையங்கோட்டை சம்மாஜிஸ்டிரேட் ஸ்ரீ D. விஸ்வனாதமுதலியார் அவர்கள் தலையீட்டால் உயிர்ப்பலிகள் அறவே நிறுத்தப்ட்டு சுத்த பூஜையுடன் விழா நடைபெற்றது.

எனவே தெய்வத்தின் பெயரால் உயிர்பலியிடும் மூட வழக்கத்தை உலகெங்கும் தோன்றிய அறிஞர் பெருமக்களும் மதத்தலைவர்கள் பலரும் அறவே வெறுத்துள்ளனர் என்பதை அறிந்தோம். இவ்வுண்மைகளை நன்கு ஆராய்ந்து, திருவாங்கூர் மகாராணியார் சேதுலட்சுமிபாய் அம்மையார் அவர்கள் தமது சமஸ்தானம் முழுவதும் "எந்தக் கோயிலிலும் உயிர்ப்பலியிடக்கூடா" தென 1930 ஆம் ஆண்டிலேயே சட்டமூலம் தடுத்துவிட்டார்கள். இன்று திருவாங்கூர் சமஸ்தான மக்கள் தங்கள் தெய்வங்களைத் தேங்காய் பழத்தால் வழிபடுகின்றனர்.

கோயிலா? கொலைக்களமா?

அஹிம்ஸாதருமம் பிறந்த புண்ணியபூமியில் மதத்தின்பெயரால் கொலை! திருக்குறள் பிறந்த தமிழகத்தில் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலி! "தன்னுயிரைப்போல் மன்னுயிரைப்பார்" என்னும் பேரறம் எங்கே? "கொல்லா விரதம் குவலயமெல்லாம் ஓங்குக" என்ற தாயுமானவான் அன்புநெறி எங்கே? -எல்லாம் புறக்கணிக்கப்பட்டன. கோயிலுக்கேகும்போது கையிலே கூரியவாள்!-பக்கத்திலே ஆடு கோழிகள்! கோயிலெல்லாம் கொலைகளம்! இரத்த ஆறு! பிணக்குவியல்! புலால் நாற்றம்! இதுதானா தெய்வவழிபாடு? மக்கள் சன்மார்க்கர்களாக விளங்க வேண்டுமென அறநூல்களெல்லாம், மக்களை அன்புநெறியில்-அறநெறியில் அழைத்துச் செல்கின்றன. பூசாரிகளோ சிறு தெய்வங்களின் பெயரால் மக்களைக் கொலை நெறியிலே செலுத்துகின்றனர். கொலைமட்டுமா? மனிதனின் இயற்கைப்பண்பைப் பாழ்படுத்தும் வகையில் சித்ரவதைகளும் நடைபெறுகின்றன. ஆடுகளை ஒடவிட்டுக் கம்பால் அடித்துக் கொல்லுதல், ஆட்டுக்குட்டிகளைக் கடித்து இரத்தம் உறிஞ்சுதல், சூலாடுகளின் வயிற்றைப் பிளந்து குட்டியுடன் பலியிடுதல், ஈட்டிகளால எருமைக் கடாக்களைக் குத்திக் கொல்லுதல்-போன்ற பல தீமைகள் செய்யப்படுகின்றன. இவ்வநாகாக செயல்களெல்லாம் தெய்வ வழிபாடாம்!

தெய்வங்களும் நோய்களும்

மேலும் மனித வர்க்கத்தையே புலால் உண்ணலைத் தவிர்க்க வேண்டும் என அறங்கூறும் நாட்டிலே தெய்வத்திற்கு இறைச்சியையும், இரத்தத்தையும் படைப்பதை அனுமதித்திருப்பார்களா? பகுத்தறிவால் ஆராய்ந்து பாருங்கள். தெய்வத்திற்குப் பலியிடுதல் பொருந்தாக் கொள்கை! பொருந்தாக் கொள்கை!!-என்பது புலனாகும். நாம் தெய்வ வழிபாடு செய்வது எதற்காக? தெய்வத்தின் இணையிலாக் குணங்களைப்போற்றி நம்மை நாமே புனிதப்படுத்திக் கொள்வதற்காகவேயாகும். இம்மாண்புறு கொள்கை மாய்ந்து, நமது துன்பங்களையும், கோயில்களையும் நீக்கி, நம்மை இன்பத்தில் இருந்துமாறு வேண்டுமுறையில் தெய்வ வழிபாடு மாறிவிட்டது. அன்றே தேவாலயங்கள் வியாபாரப்பதிகளாகிவிட்டன. எல்லாம் அவன் திருவிளையாடல் என்ற பழமொழி வளர்ந்தது. இக்கொள்கையையே வைத்துப் பார்த்தாலும், நமக்கு இன்பம் தருமாறு வேண்டுகின்றபோது, அத்தெய்வத்தின் முன்னே பிற உயிர்களைக் கொண்று துன்பம் விளைவிக்கலாமா? தீமையைப் புரிந்துவிடடு நன்மையை அருளுமாறு வேண்டுவது அறிவுடைமையா? தீமைக்குப் பதில் நன்மை விளையுமா? "தீயவை தீய பயத்தலால் தீயலை, தீயினும் அஞ்சப்படும்" என்றார் நமது வள்ளுவக்கடவுள். ஆகவே, தீமைக்குத் தீமைதான் விளையும் என்பதை அறிந்தால் தெய்வங்களுக்குஉயிர்ப்பலியிடுதல் மக்களின் இழிசெயலே என்பது தெளிவாகிற தல்லவா? உலகில் தோன்றும் பிணிகளும், துன்பங்களும் தெய்வங்களால் வருவன அல்ல, அவைகள் சுகாதாரக் கேடுகளாலும், நமது ஆகாராதிகளாலுமே வருகின்றன. காலரா, வைசூரி, முதலிய கொள்ளை நோய்கள் விஷப்பூச்சிகளின் வாயிலாகவே தோன்றுகின்றன. நோய்களை அகற்றவேண்டி தக்க மருந்துகளையும் சுகாதார முறைகளையுமே கையாளவேண்டும். இவ்வித செயற்கை சக்திகளையே பூசாரிகள் தெய்வங்களின் செயல்கள் என்றும் அவைகளுக்கு உயிருக்குயிர்க் கொடுத்தால் நோய்கள் நீங்கிவிடுமென்றும் ஆசைக்காட்டிவிட்டனர். நாமும் நன்கு ஆராய்ந்து பாராது, நோய்கள் தீரத் தெய்வங்களை வேண்டிக்கொள்ள ஆரம்பித்துவிட்டோம் நமது அறியாமையை விளக்க ஒரு புலவர்,

"உங்கள் மக்களும் நீங்களும் நோய்பட
எங்கள் மக்களும் யாங்களும் என்செய்தோம்?"
என ஆடு கோழிகள் நம்மைப் பார்த்து அறிவுறுத்தியதுபோன்று பாடியுள்ளார்.

சட்டம் பேசுகிறது!

இதுவரை நாமறிந்த வரலாற்றுப் பேருண்மைகளாலும், மதப்பொயோர்களின் மாண்புரைகளாலும், இலக்கியங்களின் அறவுரைகளாலும், மகாத்மா காந்தியடிகள போன்ற பேரறிஞர்களின் அறிவுரைகளாலும் தெய்வத்தின் பெயரால் உயிர்ப்பலியிடுதல் காட்டு மிராண்டித்தனமென்பதையும் மதசம்பந்தமும் தெய்வசம்பந்தமும் அற்றவென்பதையும் தெளிவாக அறிந்தோம். இன்று சட்டமும் அத்துறையிலேயே பேசுகிறது! ஆகவே இனி நமது கடமையை உணர்ந்து நடக்கவேண்டும். சட்டம் வெற்றிபெற சகலரும் ஒத்துழைக்கவேண்டும். பலிவிலக்குச் சட்டம் நமது நன்மைக்காகவே பிறந்துள்ளதாகையால் அதன் வழிநின்று தெய்வத்தின் பெயரால் நடைபெறும் உயிர்ப்பலி போன்ற பல கண்மூடி வழக்கங்களை மண்மூடி, நாட்டில் அன்பையும், அறிவையும், நல்ல பண்பையும் வளர்த்து சிறந்து வாழ்வோமாக!

நன்றியறிதல்!

நமது நாட்டிற்கு இன்றிமையாததும் புரட்சிகரமானதுமான உயிர்ப்பலி தடை மசோதவை சென்னை சட்டசபை இரண்டிலும் பிரேரித்த உயர்திரு. S.B. ஆதித்தன் M.L.C., அவர்களுக்கும், உயர்திரு. K. இராஜாராம் நாயுடு M.L.A. அவர்களுக்கும், சிறப்பு வாய்ந்த இம்மசோதாவை பேரன்புடன் அனுமதியளித்துச் சட்டமாகவும் செய்தருளிய முன்னாள் முதல் அமைச்சர்களான உத்தமர் உயர்திரு. ஓ.பி. இராமசாமி ரெட்டியார் அவர்களுக்கும், உயர்திரு. P.S. குமாரசாமி ராஜா அவர்களுக்கும், அந்நாள் அமைச்சர் குழுவினர்களுக்கும், சட்டசபை அங்கத்தினர்களுக்கும், சட்டத்தை அமல் நடத்த அனுமதிதந்த நமது ஜனாதிபதி இராஜேந்திர பிரசாத் அவர்களுக்கும், அஹிம்ஸையின் பெயரால், குற்றமற்ற ஊமைப் பிராணிகளின் பெயரால், எங்கள் சபையின் சார்பாக நன்றிகலந்த வணக்கத்தைத் தொவித்துக்கொள்ளுகின்றோம்.

திருவறம் வளர்க!
ஆபோர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட்
IV-B-வது பாகத்தின் சப்ளிமென்ட்
SUPPLEMENT TO PART IV-B OF THE
FORT ST. GEORGE GAZETTE
JANUARY 23, 1951.

மதராஸ்: செவ்வாய்க்கிழமை மாலை, 1951-ம் வருட ஜனவா மீ 23

சென்னைப்பட்டணத்து சட்டங்கள்
MADRAS ACTS

சென்னை சட்ட நிரூபண சபையாரின் அடியிற்கண்ட சட்டமானது 1950-ம் வருடம் டிசம்பர் மீ 12-ம் தேதி உயன்று ராஷ்டிரபதி அவர்களால் அங்கீகாக்கப்பட்டு, எல்லோருக்கும் தொயும்பொருட்டு இதனால் பிரசித்தம் செய்யப்படுகிறது:-

ACT No. XXXII OF 1950
1950 வருடத்து - 32-வது சென்னை அரசாங்க சட்டம்

An Act to Prohibit the Sacrifice of Animals and Birds in or in the precincts of Hindu Temples in the State of Madras.

சென்னை ராஜ்யத்திலுள்ள ஹிந்து கோயில்களிலாவது அவற்றின் சுற்றெல்லையிலாவது மிருகங்களையும் பறவைகளையும் பலியிடுவதைத் தடுப்பதைக் குறித்த சட்டம்.

சென்னை ராஜ்யத்திலுள்ள ஹிந்து கோயில்களிலாவது அவற்றின் சுற்றெல்லையிலாவது மிருகங்களையும் பறவைகளையும் பலியிடுவதைத் தடுப்பது யுக்தமாயிருக்கிறபடியால், இதனால் விதிக்கப்படுவது என்னவென்றால்:-

சுருக்கமான பெயரும் வியாபகமும், செலவாணியாகத் தொடங்குவதும்,


1. (1) இச்சட்டத்தை மிருகங்களையும் பறவைகளையும் பலியிடுவதைத் தடுப்பதைக் குறித்த 1950-ம் வருடத்திய சென்னப்பட்டணத்துச் சட்டம் என்று சொல்லலாம்.

2. இது சென்னை ராஜ்யம் முழுவதிலும் வியாபிக்கும்.

3. இப் பிரிவு உடனே செலவாணியாகத் தொடங்கும். இச்சட்டத்தின் எஞ்சிய பாகம் இந்த ராஜ்ய அரசாங்கத்தார் போர்ட் ஸெய்ன்ட் ஜார்ஜ் கெஜெட்டில் விளம்பரம் பிரசுரித்து அதன் மூலமாய் நியமிக்கக்கூடிய தேதியன்று செலவாணியாகத் தொடங்கும்.

 

1   2   3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com