முகப்பு வாயில்

 


அர்த்தம்

2. இச்சட்டத்திலே சங்கதியினாலாவது சந்தர்ப்பத்தினாலாவது விரோதமொன்று மிராவிட்டால்:-

(a) யாதொரு கோயில் சம்பந்தமாய் "சுற்றெல்லை" என்பதில், யாதொரு கோயிலுக்குச் சமீபத்திலுள்ளவையும் அந்தக் கோயில் வழிபாடு சம்பந்தமான காரியங்கள் அக்கோயிலுக்குள் நடந்தாலும் சா, அதற்கு வெளியே நடந்தாலும் சா, அந்தக் காரியங்களுக்காகச் சாதாரணமாய் உபயோகப்படுபவையுமான நிலங்களும் கட்டடங்களும் அந்தக் கோயிலுக்குச் சொந்தமானவையாயிருந்தாலும் சா, இராவிட்டாலும் சா, அப்படிப்பட்ட சகல நிலங்கள் என்பதும் கட்டடங்கள் என்பதும் அடங்கும். அதிலும் முக்கியமாய், அக்கோயிலின் மண்டபங்களுக்கும், பிராகரங்களுக்கும் முன் வெளிகளுக்கம் பின் வெளிகளுக்கும் எந்தப் பெயர் வழங்கினாலும் சா, அந்த மண்டபங்கள் முதலியவை என்பதும், கோயில் ரதம் சாதாரணமாகத் தங்கியிருக்கிற பூமி என்பதுங்கூட அதில் அடங்கும்.

(b) "பலி" என்பது யாதொரு தேவதையை சாந்தப்படுத்துவதற்காக அல்லது அந்த உத்தேசத்துடன் ஒரு மிருகத்தையாவது பறவையாவது கொல்வது அல்லது ஊனப்படுத்துவது என்ற அர்த்தமாகும்.

சென்னை 1927ம் வருடத்து 2-வது சட்டம்

(c) "கோயில்" என்பது ஹிந்து மத சம்பந்த மான நிதி யேற்பாடுகளைக் குறித்த 1920ம் வருடத்திய சென்னப்பட்டணத்துச் சட்டத்தின் 9-வது பிரிவைச் சேர்ந்த (12) பகுதியில் அர்த்தம் சொல்லப்பட்டபடியுள்ள ஒரு கோயில் என்று அர்த்தமாகும்.

கோயிலிலாவது அதன் சுற்றெல்லையிலாவது பலியிடக்கூடாதென்பது

(3) யாதொரு கோயிலிலாவது சுற்றெல்லையிலாவது எவரும் யாதொரு மிருகத்தையேனும் பறவையேனும் பலியிடக்கூடாது.

பலிகொடுப்பது முதலியவற்றை முன்னிருந்து நடத்துவிக்கக்கூடாதென்பது

(4) எவரும் யாதொரு கோயிலிலாவது அதன் சுற்றெல்லையிலாவது ஒரு பலியை

(a) முன்னிருந்து நடத்திவைக்கவோ முன்பிலிருந்து நடத்தி வைப்பதாகச் சொல்லவோ கூடாது; அல்லது

(b) செய்யவோ செய்து வைப்பதாகச் சொல்லவோ கூடாது அல்லது,

(c) அதில் ஊழியம் செய்யவோ உதவி புரியவோ கலந்து கொள்ளவோ கூடாது அல்லது ஊழியம் செய்வதாகவேனும் உதவி புரிவதாகவேனும் கலந்துகொள்வதாகவேனும் சொல்லவும் கூடாது.

கோயிலிலாவது அதன் சுற்றெல்லையிலாவது பலிகொடுப்பதற்காக அதை அனுமதிக்கக்கூடாதென்பது


(5) எவரும்___

(a) யாதொரு கோயிலுக்குள் அல்லது அதன் சுற்றெல்லையில் இருப்பதும்

(b) தமது சுவாதீனத்தில் அல்லது தம் மேல் விசாரணையிலிருப்பதுமான,

ஓரிடத்தில் யாதொரு பலி கொடுக்கப்படுவதைத் தொந்திருந்து அனுமதிக்கலாகாது.


தண்டனைகள்:

6. (1) எவராகிலும் 3-வது பிரிவில் கண்ட நிபந்தனைகளை மீறி நடந்தால், அவருக்கு முந்நூறு ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.

(2)எவராகிலும் 4-வது பிரிவில் கண்ட நிபந்தனைகளை மீறி நடந்தால் அவருக்கு முன்னூறு ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும்.
 

1   2   3  4


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com