முகப்பு வாயில்

 

ஆயிரங் கண்களின் தோற்றம்

பகவான் அடைந்த கேவலஞானப் பேரொளியைக் கண்டுகளிக்கும் இந்திரன், ஆனந்த மேலீட்டால் பகவானைக் காண இருகண்களும் போதாவென எண்ணுகின்றான். ஆயிரங்கண்களால் கண்டுகளிக்க வேண்டுமென விழைகின்றான். எண்ணிய எண்ணியவாறு எய்தும் தனக்குரிய வைக்கிரம சாரத்தின் ஆற்றலால், இந்தின் தன் உடலெங்கும் கண்களை உண்டாக்கிக்கொண்டு பகவானைப் போற்றி மகிழ்கின்றான். இக்காட்சியைக் கண்ட புலவர் பெருமக்கள் இந்திரனை ஆயிரங் கண்ணுடையான் எனப் புகழ்ந்து வாழ்த்தினர்.

இவ்வரலாற்று நிகழ்ச்சி ஆதிபுராணம் என்னும் வடநூலில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது.

'தவரூபஸ்ய செளந்தர்யம் திருஷ்டியாதிருப்திம் ஆனாயிவான்
ஹயக்ஷ: சக்ர சஹஸ்க்ஷ: பபூப பஹவிஸ்வமய:

(இ-ள்) இறைவனே! தவத்தாலுயர்ந்த ஞான ஒளி வீசும் நினது பேரழகினைத் தனது இரு கண்களால் பருகியும் திருப்பதியடையாத இந்திரன், பலரும் வியக்கத்தக்க முறையில் ஆயிரங்கண்களை உண்டாக்கிக்கொண்டு உன்னைப் போற்றி வழிபடுகின்றான்' என்பதாகும். இவ்வாறே தமிழ் நூலாகிய தோத்திரத்திரட்டில்.

'இன்றே அருளென இந்திர ரெண்ணில வாய்க் கண்கொண்டு
நின்றே துதித்துப் பெற லரும் பேற்றினை நீயுமென்ன
நன்றே என்நெஞ்சமே பாகையின் முக்குடை நாயகன்தன்
குன்றே குணத்தன்பின் சாதுக்களா வாற்றலை கொள்ளுதியே'

என வாழ்த்தப்பெற்றுள்ளது. இதனால் இந்திரன் ஆயிரங் கண்களைத் தற்காலிகமாகப் பெற்றான் என அறிகின்றோம். இத்தகு சிறப்பமைந்த உண்மை நிகழ்ச்சியை மறைத்து இந்திரன் கெளதம முனிவான் மனைவியைக் கற்பழித்ததின் காரணமாக, அம்முனிவான் சாபத்திற்குள்ளாகி உடலெல்லாம் சொல்லொணாக் குறிகளையுடையவனானான் என வைதிக சமய நூல்கள் கூறுகின்றன. இக்கொள்கையைப் பாமேலழகரும், தற்கால உரையாசிரியர் சிலரும் ஏற்றுக்கொண்டுள்ளது வருந்தத்தக்க செய்தியாகும்.

ஐந்தவித்தோரின் மாண்பு

வைதிக சமயக் கூற்றால் ஐந்தவித்துயர்ந்தோரின் தூய தவநெறியும், அறவோரைப் போற்றும் இயல்புடை இந்திரனின் எழில் நிலையும் மாசடைகின்றன. ஐந்தவித்தானெனில் ஐம்புலன்களால் ஏற்படும் உலகியல் ஆசைகளை அறவே அகற்றி ஐம்புலன்களையும் தன் வயப்படுத்தியவன் என்பது பொருளாகும். இப் பெறலருந்தவத்தோரையே ஐந்தவித்தான் ஆற்றல் எனத் தேவர் போற்றினார். இவ்வரலாற்றின் மேன்மையை உலகோர் அறியவே, பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடு வாழ்வார் என்னும் கடவுள் வாழ்த்தின் வாயிலாக முற்றும் துறந்த முனிவர்களின் தவ நெறியையும், அவர் கடவுளரோடொப்பர் எனும் கருத்தையும் அறிய வைத்துள்ளார். இங்கே வைதிக சமயத் துறவுக்கு இடமில்லை. அத்துறவுக் கோலத்தைக் கொண்டு குறளில் காணும் ஐந்தவித்தோரைக் காதல் வாழ்க்கையின் சித்தாத்துக் காட்டுவது தமிழர்தம் பண்பாட்டையே இழிவுபடுத்துவதாகும். எனவே திருக்குறளாசிரியர் கூறும் மாசற்ற முனிவர்களையும் அவர்கள் வழிபடும் இந்திரனின் பக்திச் சிறப்பையும், வரவேற்று வாழ்த்தி வணங்குவோம். இதுவரை நமக்குப் பல உண்மைகள் கிடைத்தன. மனிதனின் ஆற்றல், இந்திரனின் வழிபாடு, அவன் திருப்பணியால் தாமரை மலால் நடந்த ஆதிபகவன் ஆகியவைகளைக் கண்டோம். இவ்வாறே மனிதனின் ஆத்மீக வாழ்க்கைக்கு இன்றியமையாத அறநெறிகளை அன்று வழங்கிய ஆதிபகவன் பெற்ற கேவலஞான நிலையை உலகுக்கு அறிமுகப்படுத்தும் அரும்பெரும் குறட்பாக்களை நமது நுண்ணறிவின் துணைகொண்டு ஆராய்ந்து மேலே செல்லுவோம்.

'பொறிவாயிலைந் தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்'

'சென்ற விடத்தான் செலவிடாது தீதொஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு'

'ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்'

'ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து'.

'காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்'

'செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்'

'தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்'

'பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு'

'ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்'

என்பன போன்ற குறட்பாக்களை நோக்கின் திருக்குறளாசிரியர் போற்றும் ஆதிபகவன் என்னும் பெயரும் மற்ற ஒன்பது குறட்பாக்களில் காணும் ஆதி பகவனின் சிறப்புச் சொற்களும், நம்மைப் போன்று உலகில் தோன்றி அறநெறி வழுவாது ஒழுகி உயர்ந்த ஒரு மகானின் காரணப் பெயரே என்பது தெளிவாகப் புலப்படுகின்றது. திருக்குறள் நீதி நூல் மட்டுமன்று. இலக்கியப் பண்புகளும் நிறைந்த நூல் என்பதை அறியவேண்டும். அதனாற்றான் திருக்குறளாசிரியர் தேவரை உலகெலாம் போற்றுகின்றது. சுமார் 1500 ஆண்டு கட்கு முற்பட்டதாகக் கருதப்படும் சூளாமணி எனும் காவியத்தின் ஆசிரியர் தோலாமொழித் தேவர் திருக்குறளைப் போற்றுகையில், 'புகழ்ச்சி நூல்*' (The Famous Book) எனப் பாராட்டியுள்ளார்.

* 'இகழ்ச்சியிற் கெடுவார்களை யெண்ணுக' யென்னும் சூளாமணிச் செய்யுளில் காண்க.

நீலகேசி ஆசிரியர் 'தேவன் உரைப்பத் தெளிந்தேன்' என்றும், அதன் உரையாசிரியர் சமய திவாகரமா முனிவர் திருக்குறளை மேற்கோள்காட்டி, 'இது எம்மோத்தாதலால்' என்றும் புகழ்ந்து போற்றியுள்ளார்கள். இவைகளால் திருக்குறளாசிரியான் நுண்மாண் நுழைபுலன் நன்கு விளங்குகிறது. ஓவியக்காரன் உருவத்தைச் சித்திரத்தால் தீட்டிக் காண்பிப்பான். நமது பொய்யாமொழித் தேவரோ ஆதிபகவானின் அறப்பண்புகளைச் சொல்லோவியங்களால் தீட்டி நமது அகக் கண்களால் அறிய வைத்துள்ளார். ஆம்! நாம் ஆதிபகவனைக் காண்கின்றோம். அருளுருவம் காட்சியளிக்கிறது! தவ நிலை தொகிறது! அறிவொளி வீசுகிறது! பூமிசை நடக்கின்றார்! அறவுரை கேட்கின்றோம். இவ்வாறெல்லாம் ஆதிபகவனைக் காணுமாறு குறட்பாக்களிலே அமைத்துள்ளார். இனி இத்தவச் செல்வனின் இயற்கை வரலாற்றைக் காண்போம்.

ஆதிபகவன் வரலாறு

உலகின் நிலையை நோக்கின் அது அடிக்கடி மாறும் இயல்புடையதென்பதை அறிகின்றோம். கடல் நாடாவதும், நாடு கடலாவதும் உண்டு. பூகம்பங்களாலும் மற்றும் பல இயற்கை நிகழ்ச்சிகளாலும் சிதறுண்டு போவதும் உண்டு. இத்தகைய இயற்கைச் சூழலின் வயப்பட்டு நமது நாடும் ஒரு காலத்தில் சீர்குலைந்திருந்தது. மக்கள் வாழ்க்கைக்குரிய வழி தொயாது. மனம் போல் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் அயோத்தி மாநகால் நாபிராஜா என்பவருக்கும் அவர் மனைவி மருதேவிக்கும் ஓர் ஆண் மகவு பிறந்தது. அதற்கு விருஷபதேவர் எனப் பெயாட்டனர். அக்குழந்தை நாளுக்குநாள் வளர்ந்து காளைப் பருவம் அடைந்தது.

இயற்கை அறிவால் மிகுந்த விருஷபதேவர் உலகை நோக்கினார். அறிவுக்குப் பொருந்தாத சமுதாயம் அமைந்திருப்பதைக் கண்டார். மக்களெல்லாம் மாக்களாகக் காட்சியளித்தனர். எங்கும் பயங்கர நிலை! எங்கும் துன்பம்! எங்கும் சோம்பல்! எங்கும் அறியாமை! இத்தகைய சீர்கேட்டினின்றும் மக்களை விடுவிப்பதெவ்வாறு என இரவு பகலாய்ச் சிந்தித்தார். அவர் சிந்தனையில் பல்வேறு திட்டங்கள் உருவாயின. அத்திட்டங்களைக் கொண்ட ஒரு புது சமுதாயத்தை உண்டாக்கினார். வாள், வரைவு, வாணிபம், உழவு, கல்வி, சிற்பம் போன்ற தொழில்களைப் பயிற்றுவித்தார். இவைகளைச் சாவர நடத்திவர அரசர், வணிகர், வேளாளர் எனும் மூன்று பிரிவினரை வகுத்தார். இம்மூன்று குலங்களும் செய்தொழில் வேற்றுமையின்றிப் பிறப்பினால் ஏற்பட்டவை அல்ல. அறிவு வளர்ச்சிக்காக அகர முதலாகிய எழுத்துக்களையும் ஒன்று முதலாகிய எண்களையும் தோற்றுவித்துக் கல்வியையும் பல கலைகளையும் வளர்த்தார். இந்நிகழ்ச்சிகளைச் சூடாமணி நிகண்டில்.

'வரைவொடு தொழிலே வித்தை வாணிகம் உழவே சிற்பம்
உரைசெய்யும் போகபூமி பொழிவினி லாதிகாலம்
விரைசெறி பிண்டிவேந்தன் விதித்த லினதேயம்ம
கருமபூமி என்னும்பேர்கண்ட தொன்றுண்டுநூலில்' எனவும்.

'திருக்கிளர் தேவர்கோமான் ஏவலிற்குபேரன் செய்த
விரும்புறு பொன்னெயிற்குள் விளங்க எண்ணெழுத் திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி' எனவும்,

'சொல்வகை யெழுத்தெண் ணெல்லாந்தொல்லை நாளெல்லையாக
நல்வகையாக் கும்பிண்டி நான்முகன்'

எனவும்,

'செல்வளம் பிண்டிவேந்தன் சினேந்திரன் ஆதிகாலம்
பல்வளம் பெற்ற ஆதிப் பரதனே முதல்வராகச்
சொல்லிய நூற்றுவர்க்கும் துறைவழாக் கலைகள்யாவும்
கல்வியே பயில்களப்பேர் கழகம் கல்லூரியாமே'.

எனவும் விளக்கப் பெற்றுள்ளன.
ஆதிநாதர் பிள்ளைத் தமிழ் என்னும் நூலில்,

'சசிகளாதித்த ரொருகோடி வந்தோருருக்
கொண்டாடி கண்ட பரமனே
சமவசா ணேசனே இமையவர்களீசனே
சார்ந்தவர்க் கைந்தாருவே
இசையினா லெண்ணெழுந் தியம்புவித்தாயநீ'

எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.

இவ்விலக்கியச் சான்றுகளை மெய்ப்பிக்க வரலாற்றுத்துறைப் பேராசிரியர் திரு. N.N. பாஸ (N.N.Basu) அவர்கள் ஹிந்தி விஸ்வகோஸா (Hindi Visva Kosa) என்னும் நூலில், 'முதன் முதல் எழுத்துக்களையும் எழுதும் கலையையும் பகவான் விருஷப தேவரே தோற்றுவித்தார். பிராமி எழுத்துக்களைக் கண்டுபிடித்தவரும் அவரே' என வரைந்துள்ள வரலாற்றுரைகள் பெருந்துணை செய்கின்றன. மேலும் பகவான் விருஷபதேவர் மக்கள் அனைவரும் ஒற்றுமையும் அன்புங்கொண்டு வாழ அஹிம்சா தருமம் என்னும் அருளறத்தைப் படைத்தார். கொல்லாமை, பொய்யாமை, கள்ளாமை, பிறர் மனை நயவாமை, மிகுபொருள் வெகாமை என்னும் ஐம்பெரும் ஒழுக்கங்களின் வழியில் இல்லறம் துறவறம் என்னும் இருபேரறங்களை வகுத்தார்.

'சோலைதாழ் பிண்டிக்கீழ்ச்
சூழந்தவர்தம் சொல்முறையான்
மனையறமுந் துறவறமும்
மன்னவர்க்கும் விண்ணவர்க்கும்
வினையறுக்கும் வகைதொந்து
வீடொடு கட்டிவை யுரைத்த
தொன்மைசால் மிகுகுணத் தெம்
துறவரசைத் தொழு தேத்த
நன்மைசால் வீடெய்து மாறு'
- யாப்பருங்கலக்காரிகை மேற்கோள் உரை

என்பதனாலும் அறியலாம்.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com