முகப்பு வாயில்

 

இவ்விரு அறங்களில், இல்லறம் மக்கள் மேம்பாட்டிற்கும், பண்பாட்டிற்கும், அறவாழ்க்கையில் அமைந்தது. துறவறம் ஆத்மீகத் துறையில் வீடுபேறு பெறும் தூய தவ வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. இவ்விரு அறநெறிகளில் இல்லறமே துறவறத்திற்குத் தாயகமானது. இல்லறம் இருப்புச் சுரங்கம். துறவறம் பொன் சுரங்கம். பொன்சுரங்கத்தினின்றும் பொன்னையெடுக்க இரும்பு இன்றியமையாததுபோல், துறவறம்மேற்கொள்வோர் இல்லற நெறியில் வெற்றி காணவேண்டும். இல்லையேல் துறவறம் புகக்கூடாது. இல்லறத்திலேயே நின்றுவிடலாம் என்பது அவர் திருவறம். இவ்வறநெறிகள் மக்கள் அனைவருக்கும் உரியதாகும். செய்தொழில் வேற்றுமையன்றிப் பிறப்பினால் அனைவரும் ஒன்றேயென்னும் சகோதர உணர்ச்சியை வளர்த்தார். மக்களனைவரும் பசி, பிணி, நோய், பகையின்றி வாழப் பொருளாதார சமத்துவம் இன்றியமையாதென அன்றே அறிந்து பொதுவுடைமைத் தத்துவமாகிய மிகு பொருள் விரும்பாமை எனும் பகுத்துண்டு வாழும் பண்பினை ஐம்பெரும் அறங்களில் ஒன்றாக அமைத்தார்.

கண்கள் எவ்வாறு புறப்பொருள்களைத் தெளிவாக அறிகின்றனவோ அவ்வாறே நூற்பொருள்களின் உண்மைகளை நன்கு ஆராய்ந்து தெளிய வேண்டும் என்னும் பகுத்தறிவு இயக்கத்தினை (Rationalism)த் தோற்றுவித்தார். அக்கொள்கையை நற்காட்சி என அழைத்தார். இப்பேரறங்களை மதமென்றோ சமயம் என்றோ அழையாமல் அறம், அறம் என்றே அழைத்து உலகுக்கு உரை செய்தார். இவ்வாறு அருளறத்தின் அடிப்படையில் பொதுவுடைமைத் தத்துவங்கொண்ட புது சமுதாயத்தைப் படைத்தருளினார். இப்பெருமகனை மக்களே யன்றி மன்னுயிரும் தேவர்களும் போற்றி மகிழ்ந்தனர். கண்கண்ட தெய்வமெனக் கொண்டாடினர். வாழ்வுக்கு வழிகாட்டிய வள்ளல் என வாழ்த்தினர். அவர்தம் திருமொழியைச் சிரமேற்கொண்டனர்! அவர் வகுத்த ஒழுக்க நெறியில் நின்று வாழ்க்கையில் வளம் பெற்று விளங்கினர். இவ்வரலாற்று நிகழ்ச்சியையே 'ஆதிபகவன் முதற்றே உலகு' எனத் தேற்றேகாரத்தால் கூறினார்.

'ஊழி மூன்றாவதி னிறுதி மன்னுயிர்
சூழ்துயர் பலகெடச் சோதி மூர்த்தியாய்
ஏழுய ருலகுடன் பரவ வீண்டருள்
ஆழியங் கிழமையெம் அடிகள் தோன்றினார்'

'ஆரருள் தழுவிய ஆழிக்காதியாம்
பேரருள் மருவிய பிரான்றன் சேவடி
காரிருள் கழிதரக் கண்க வின்றரோ
சீரருள் சரணென உலகஞ் சேர்ந்ததே'

எனவும்,

'ஆதி நாளரசர் தங்கள் அருங்குலம் ஐந்துமாக்கி
ஓத நீருலகின் மிக்க ஒழுக்கமுந் தொழிலுந் தோற்றித்
தீது தீர்த்திருந்த பெம்மான் திருவடிச் சாரச் சென்று
நீதி நூற்றுலகங்காத்து நிலந் திரு மலரநின்றார்'

எனவும் சூளாமணி ஆசிரியர் தோலாமொழித்தேவர் பகவான் விருஷப தேவரைப் புகழ்ந்துள்ளார்.

விருஷப தேவா˘ன் துறவு

புத்துலகச் சிற்பியாம் நமது விருஷப தேவர் இல்லற நெறியிலே மக்கள் மனைவியுடன் பலகாலம் வாழ்ந்தார். இப் பொ˘யாரின் முதல் மகன் பரத சக்கரவர்த்திக்குப் பட்டம் சூட்டித் தனது முதிய பருவத்தில் தாம் வகுத்த துறவற நெறியிலே நின்று கடுந்தவம் புரிந்தார். ஐந்தவித்து உயர்ந்தார், கேவல ஞானம் பிறந்தது. அகல் விசும்புளார், கேவல ஞானம் பிறந்தது. அகல் விசும்புளார்கோமான் 'பகவான் அருகா' என வாழ்த்தி வணங்கினான். தேவர்குழாம் கூடிச் சிறப்புச் செய்தனர். மக்கள் பலரும், 'பகவான் விருஷப தேவர் வாழ்க!' என்ற கோஷத்துடன் அவர் திருவடிகளை வணங்கி நின்றனர். இறுதியாகக் கைலாய மலையிலே வினைகளை வென்று வீடுபேறு பெற்றார். அப்புனித நாளையே சிவராத்திரி என இன்றும் கொண்டாடுகின்றோம்.

இவ்வுலக வரலாற்றில் முதன் முதல் பகவான் எனப் போற்றப் பெற்றவர் பகவான் விருஷப தேவரேயாவர். அவ் அறிவனே உலக முதல் தொண்டர்! உலக முதல் தலைவர்! உலக முதல் பேராசிரியர்! உலக முதல் நூலாசிரியர்! உலக முதல் முனிவர்! உலக முதல் இறைவராவார். இப்பெருமகனையே ஆதிபகவன் என்னும் சிறப்புப் பெயரால் போற்றியுள்ளார். நமது தமிழ்மறை தந்த பெருந்தகை. இச்சிறப்புப் பெயர் வந்ததன் காரணத்தையும் ஆராய்வோம்.

இருபத்துநான்கு தீர்த்தங்கரர்கள்

பகவான் விருஷபதேவருக்குப் பின்னர் அப்பெருமான் அருளிய அறநெறிகளையும் கல்வி அறிவையும் மக்களிடையே பரப்பியவர்கள் இருபத்துமூவர். இவ்விருபத்துமூவர்களும் வெவ்வேறு காலங்களில் ஒருவர் பின் ஒருவர் தோன்றியவர்கள். இவர்கள் அனைவரும் பகவான் விருஷப தேவரைப் போலவே கடுந்தவம் செய்து கேவல ஞானத்தோடு வினைகளை வென்று வீடுபேறு பெற்றவர்கள். தேவர்களாலும் மக்களாலும் பகவான் எனப் போற்றப் பெற்றவர்கள். இவ்விருபத்து மூன்று அறவோர்களுக்கும் பகவான் விருஷப தேவர் முதல்வராகையால் அப் புண்ணிய மூர்த்தியை ஆதிபகவன், ஆதிநாதர், ஆதிமூர்த்தி, ஆதிதேவர், ஆதிநாயகன், ஆதிபட்டாரகர், ஆதிமூலர், ஆதிபிரம்மா, ஆதிக்காலத்து அந்தணர், ஆதி முதற்கடவுள் என்றெல்லாம் அழைத்தனர். இவ்வழக்காற்றைக் கொண்டே நமது தமிழ்மறை யாத்த பெரியார் பகவான் விருஷப தேவரை 'ஆதிபகவன்' என வாழ்த்தினார்.

பகவான் விருஷபதேவர் முதல் பகவான் மகாவீரவர்த்தமானர் வரை இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களாவார்கள். இவ்விருபத்து நால்வா˘ல் விருஷப தேவரையும், இருபத்தி இரண்டாம் தீர்த்தங்கரரான பகவான் நேமிநாதரையும், இருபத்தி மூன்றாம் தீர்த்தங்கரரான பகவான் பாĄŁஸ்வநாதரையும், இருபத்தி நான்காம் தீர்த்தங்கரரான பகவான் மகாவீர வர்த்தமானரையும் வரலாற்று அறிஞர்கள் ஆராய்ச்சி நூல்களில் ஏற்றுக்கொண்டுள்ளார்கள். மற்றவர்களைப் பற்றிய வரலாற்றையும் அறிய ஆராய்ச்சித் துறை வல்லார் முயன்று கொண்டுள்ளார்கள்.

இவ்விருபத்து நான்கு குரவர்களையும் வடமொழியில் தீர்த்தங்கரர்கள் எனப் போற்றுகின்றனர். தீர்த்தங்கரர் என்பது பிறவிப் பெருங்கடலினின்று மக்களைக் கரையேற்றுபவர் என்னும் பொருள் கொண்டது. தீர்த்தம் என்பது அறம் அல்லது நீர்நிலையைக் குறிக்கும் வடசொல். இக்கருத்தைக்கொண்டே நம் தேவர்,

'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார்'

என வாழ்த்தினார்.

'சாதல் நோய்சரை பிறவி தாம்செய்
தீவினைக் கடலுள்
மாது யருழந்துறு நோய் மறுகும்
மன்னுயிர்க் கெல்லாம்
தீதுஇல் நன்னெறி பயந்து திரை செய்
நீள்கரை ஒருவிப்
போதரும் புணைப டைத்தாய் புலவர்தம்
புலவர்க்கும் புலவா'

என நீலகேசி ஆசிரியரும் ஆதிபகவனை வாழ்த்தியுள்ளார். அகளங்க தேவர் என்னும் பன்மொழிப் புலவர் தத்வார்த்த சூத்திரம் என்னும் அரியதொரு தத்துவநூலுக்கு உரை எழுதியுள்ளார். அந்நூலின் 11-ஆம் சூத்திரத்திற்கு உரை எழுதுகையில் ஆதிசப்தம் அநேகப் பொருள்களையுடைய தெனவும், சில விடங்களில் முதல் என்னும் பொருள் பெற்று வருமென்றும் வரைந்துள்ளார். அதற்கு மேற்கோளாக,

'அகாரா தயோ வர்ணா
ரிஷபா தயஸ் தீர்த்தகரா இதி'

எனும் சுலோகத்தைக் காட்டிப் பின்வருமாறு பொழிப்புரை எழுதியுள்ளார்.

'எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. தீர்த்தங்கரர்கள் விருஷப தேவரை முதலாக உடையர்' என்பதாகும். அகளங்க தேவர் அருளிய சூத்திரத்தால், ஒரு நல்ல விளக்கம் பெற்றோம். நமது மயக்கத்திற்கு மருந்து போன்ற விளக்கம். ஆம்! அறிவுக்கு விளக்கம். உண்மை விளக்கம். திருக்குறள் முதற்குறளுக்கு விளக்கம், விளக்கம் மட்டுமா! வரலாற்று அகச் சான்று. பொய்யா மொழித் தேவருக்கு அகளங்க தேவர் அளிக்கும் அரும்பெரும் சான்று. ஆதிபகவன் என்னும் சிறப்புப் பெயர் பகவான் விருஷபதேவரையே குறிக்கும் என்னும் உண்மையை நிலைநாட்டுகின்றார் அகளங்கதேவர். அது மட்டுமன்று! அகரமாகிய உவமையைக் காட்டியே ஆதிபகவனை மெய்ப்பிக்கின்றார் அகளங்கதேவர். கி.பி. நான்கு அல்லது ஐந்தாம் நூற்றாண்டைச் சார்ந்தவர் என வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர். அவ்வாறாயின் அவர் காலத்திலும் பகவான் விருஷபதேவரை ஆதிபகவன் எனப் போற்றியிருந்தனர் என்பது தெளிவாகிறது. அகளங்கதேவா˘ன் அகச்சான்று அறிஞர் உலகுக்கு ஓர் உண்மையை அளித்தது. அகளங்கதேவர் வாழ்க! அறிவு உலகம் விழித்தெழுக! எழுக!

தமிழ் இலக்கியங்களில் ஆதிபகவன்

பகவான் விருஷப தேவர் வரலாற்றைக் காணவைத்தார் நமது அகளங்கதேவர். இம்முனிவரைப் போன்றே பகவான் விருஷபதேவரைப் போற்றும் பண்டைய தமிழ் நூல்கள் பல இருக்கின்றன. அவைகள் யாவும் திருக்குறள் வழி வந்தவை. திருக்குறள் அறத்தைப் பேணி வளர்ப்பது. உலகுக்கு உரை செய்யும் ஒப்பற்ற நூல்கள்.

'சமய வாதிகள் செவியினில் அறம்புகச்
சாற்றுவன் காணீரே'

எனச் சூளுரைக்கும் சமயச் சார்பற்ற அறநூல்கள். அறிவு சான்ற அப்பொது நூல்களை அணுகி ஆதிபகவனைக் காண்போம்.

  1   2   3   4   5   6   7   8   9   10   11   12   13   14 


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com