முகப்பு வாயில்

 


ஜீவபந்து T.S.ஸ்ரீபால்

ஆசிரியர் : இளங்கோவடிகள் சமயம் யாது?, பகுத்தறிவியக்கத்தின் பழமை, ஆதிபகவனும் ஆச்சாரிய வினோபாஜீயும், எம்மான் கோயில், சமணர்மலை செல்வோம், வள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன்.

வெளியிடுதல் :

ஜைன இலக்கிய ஆராய்ச்சிக் கழகம் (Jain Literature Research Society)
34, சுப்பிரமணிய முதலி வீதி, சென்னை-1.

முன்னுரை :

ஆராய்ச்சி அறிவு

ஆராய்ச்சித்துறை ஒரு தனிக்கலை. அது சிந்தனையைக் கிளறுவது. ஆழ்ந்து சிந்திக்கச் செய்வது. ஆராய்ச்சி அறிவுடையவர்களைப் பேரறிவு பெற்றவர்கள் என்று கூறலாம். ஆராய்ச்சியாளர்களின் கொள்கைகளைப் பெரும்பாலும் அறிஞர் உலகம் ஏற்றுக்கொள்ளுகிறது. எழுத்தாளர்களிலே ஆராய்ச்சியறிவுடையவர்கள் தலைசிறந்தவர்கள் எனில் அது மிகையாகாது. இலக்கிய உலகுக்கும் வரலாற்றுத் துறைகளுக்கும் இன்றியமையாதவர்கள். ஆராய்ச்சியாளருக்குரிய தனிப்பண்பு காய்தல் உவத்தல் அகற்றி உண்மைகாண்பதாகும். சமன் செய்து சீர்தூக்கும் கோல்போல் ஆராயும் இயல்பு அவர்களுக்கு அமைந்திருக்க வேண்டும். இல்லையேல் கலை உலகமும் வரலாற்று உலகமும் அதிர்ச்சியுறும். அறிவு உலகில் மயக்கமும் ஐயமும் புகுந்து குழப்பத்தை உண்டாக்கும். நேர்மையும், நீதியும் மாயும். பொய்மை வளரும். எனவே, ஆராய்ச்சித் துறையில் பணியாற்ற விழைபவர்கள் தங்கள் பொறுப்பையும், கடமையையும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும்.

இன்றைய நிலையில் நமது பாரத நாட்டிலும் சிறப்பாகத் தமிழகத்திலும் நடுநிலைமை தவறாத நல்லறிவாளர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் அளித்துவரும் அறிவு சான்ற ஆராய்ச்சி நூல்கள் உலக இலக்கிய அரங்கில் நற்புகழ் பெற்றிருப்பதுடன் பல உண்மைகளை அறியச் செய்துள்ளன. இப்பொயோர்கள் தங்களையும் தங்கள் சமயங்களையும் மறந்து பண்டைய வரலாற்று உண்மைகளைக் காண விழைந்தவர்கள். வேறுசிலர் ஆராய்ச்சியாளக்குரிய முறைமையை மறந்து சமயக் காழ்ப்புக் கண்ணோட்டத்தோடு பண்டைய இலக்கண இலக்கியங்களிலும் புதைபொருள் ஆராய்ச்சித் துறைகளிலும் பற்றிபல கோளாறுகளைச் செய்துள்ளார்கள். இவர்களால் பாதிக்கப்பட்டவைகள் பெரும்பாலும் ஜைன சம்பந்தமானவைகளே யாகும். ஜைன சமயக்கலைச்செல்வங்கள் உலகுக்கு உரை செய்பவை. அவைகள் அறிவுப் புதையல்கள், அன்புப் புதையல்கள், அருட்புதையல்கள், எவ்வுயிருக்கும் தீங்கு நினையாத இன்பப் புதையல்கள். அப்புதையல்களைப் பலவாறாக ஆராய்ந்தெடுத்து உலகுக்கு அளிப்பின் மக்கள் வாழ்க்கை நிலையில் மறுமலர்ச்சி உண்டாகும். சகோதர உணர்ச்சியும் சாமாதானமும் நிலவும். பொருளாதார சமத்துவம் இடம்பெறும். அவ்வாறே மலைகளிலும், குகைகளிலும், சாலை ஓரங்களிலும், பூமிக்கு அடியிலும், கிராமங்களிலும், நகரங்களிலும் சிதறிக்கிடக்கும் ஜைன சமயச் சிற்பங்களையும், கல்வெட்டுச் செய்திகளையும் அறவோர் பள்ளிகளையும் ஆராய்ந்து வெளியிடின் வரலாற்று உலகில் பற்பல புதுச்செய்திகளைக் காணலாம். நமது தமிழகத்தின் பண்டைய பெருமையும், நாகாகமும் அறிவும் அறனும் எத்தகைய உயாய நிலையில் விளங்கியிருந்தன என்பது புலனாகும்.

ஜைன அறவோர்கள் தமிழ் நாட்டிற்கும், தமிழ் மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் செய்திருக்கும் அரும்பெரும் சேவைகளை அறிஞர் உலகம் நன்கு அறியும். இவ்வுண்மையை சென்னை எழும்பூர் புதைபொருள் ஆராய்ச்சி, கண்காட்சிக் கலைக்கூட்டத்துறை அலுவலகத் தலைவர் உயர்திரு. A. ஐயப்பன் அவர்கள் ஆச்சாரிய வல்லபசூரிஜி நினைவு மலர் நூலுக்கு "ஹிந்து" பத்திரிகையில் மதிப்புரை வழங்கிய பேருரையில் பின்வருமாறு எழுதியுள்ளார்கள் :

"Jainism is believed by many to be the oldest religion in India. Its historical beginings go back to 800 B.C. Its emphsis on absolute Ahimsa and vegetarianism makes it unique among great religions and it looks certain that these two traits were borrowed by Hinduism and Buddhism from Jainism. The contributions of Jaina savants to Tamil and Kannada culture deserve to be better recognised. It is a pity that not even a small fraction of the scholarly attention given to Buddhism has been devoted to Jainism, but fortunately Jainism is still an active, living religion in India with a small but influential following."

Hindu 15-9-57
A. AIYAPPAN

"ஜைன மதம் இந்தியாவில் மிக்க பழமையான சமயம் என்று அநேகரால் கருத்தப்பட்டு வருகிறது. அதனுடைய சாத்திர ஆரம்பம் கி.மு. 800 வருடங்களுக்கு முற்பட்டதாகும். மற்ற மதங்களினின்றும் ஜைனமதம் தன் கொல்லாமை, மரக்கறி உண்ணல் (ஊன் உண்ணாமை) இவைகளின் வலியுறுத்தலால் ஒப்பற்று விளங்குகிறது. மேற்கண்ட இரு கொள்கைகளும் ஜைன மதத்திலிருந்து இந்து மதமும் புத்த மதமும் எடுத்து கையாளப்பட்டு வருவதாக நிச்சயமாகத் தொகிறது. தமிழ் கன்னட கலாசார அபிவிருத்திக்கு ஜைன பொயோர்களின் தொண்டுகள் சிறந்தனவாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. புத்த மதத்திற்கு அறிஞர்களால் காட்டப்பட்ட ஆதரவில் ஒரு சிறிதளவு கூட ஜைன சமயத்திற்குக் காட்டாதது வருந்தத்தக்கதாகும். எனினும் அதிர்ஷ்டவசமாக ஜைன மதம் இந்தியாவில் குறைந்து ஆனால் மதிப்புவாய்ந்து பின்பற்றுபவரால் உயிருள்ள மதமாகத் திகழ்கிறது."

சென்னை
15-9-57

அ. அய்யப்பன்

இப்பேராசிரியர் வருந்துவது போன்று ஜைன சமயத்திற்கு ஆதரவு காட்டாதது மட்டுமன்று, ஒரு சிலர் ஆராய்ச்சியென்னும் பெயரால் ஜைன சமய இலக்கண இலக்கியங்களையும் நீதி நூல்களையும் மற்றும் பல கலைகளையும் மாற்றாந்தாயின் மனப்பான்மையில் நோக்குகின்றார்கள். ஏன்? பகைமை உணர்ச்சியோடு பார்க்கின்றார்கள் எனில் மிகையாகாது. ஜைன சமய சம்பந்தமான வரலாறுகளையும் சிறப்புகளையும் இருட்டடிப்புச் செய்தும் வருகின்றார்கள். மற்றும் சிலர் ஜைன சமய நூல்களை வெளியிடுகையில் அவைகளின் ஆசிரியர்களைப் பற்றிய உண்மைச் செய்திகளையும் சமயத்தையும் மறைத்தும் மாற்றியும் வெளியிடுகிறார்கள். இச்செயலை சென்னைப் பல்கலைக்கழகமும் அரசாங்கமும் கண்காணித்து வருவதுடன் ஜைன சமயக் கலைகளைப் பாதுகாப்பதில் பொதும் அக்கறை காட்டவேண்டுமெனத் தமிழ்த்தாயின் சார்பாகக் கேட்டுக்கொள்ளுகிறேன். இல்லையேல் இவர்கள் வெளியிடும் நூல்களால் கலை உலகமும், வரலாற்று உலகமும் எந்நிலை எய்தும் என்பதை எண்ணிப்பார்க்கும்போது, உண்மையிலேயே நமக்கு உள்ளம் பதைக்கிறது. இவர்கள் செயல்களுக்கு எடுத்துக்காட்டாக மே மாதம் 'அமுதசுரபி' திங்களிதழில் திரு. தி.நா. சுப்பிரமணியம் அவர்கள் 'வானவில்' என்னும் தலைப்பின்கீழ் எழுதியுள்ள கட்டுரை ஒன்றே சாலும்.

பல நூற்றாண்டுகளாக வழங்கி வரும் நாலடியாரைப் பற்றிய வரலாற்றையும், அதன் ஆசிரியர்களையும், கடவுள் வாழ்த்தின் கருத்துக்களையும், உரையாசிரியர் பதுமனாரையும், மதுரைமா நகரைச் சுற்றி மாண்புடன் நின்று நிலவிப் பற்பல வரலாற்றுச் சின்னங்களைத் தம் மகத்தே கொண்டு விளங்கும் எண்பெரும் சமணர் குன்றுகளையும் மதமாற்றஞ் செய்ய முயற்சிக்கும் அவர்தம் ஆராய்ச்சி அலங்கோலத்தை அறிவதே இந்நூலின் நோக்கமாகும். அறிஞர் பெருமக்கள் நடுநின்றாராய்ந்து உண்மையை உலகுக்கு உரைத்தருள வேண்டுகிறேன்.

சமணமும் தமிழும், பெளத்தமும் தமிழும், கிருஸ்தவமும் தமிழும், மகேந்திர பல்லவன், மாமல்லபுரத்து ஜைன சிற்பங்கள் போன்ற பல அரும்பெரும் நூல்களில் ஆசிரியரும், சமன்செய்து சீர்தூக்கும் கோலின் சின்னம் போன்றவருமாகிய உயர்திரு. மயிலை-சீனி. வேங்கடசாமி அவர்களை இந்நூலுக்கு அணிந்துரை அளிக்குமாறு வேண்டிக்கொண்டேன். அப்பொயாரும் திரு. தி. நா. சு.வின் போக்கைக் கண்டு உள்ளம் பதைத்து வருந்தி இந்நூலுக்கு ஆர்வமோடு அணிந்துரை வழங்கியுள்ளார்கள். "நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை" என்னும் ஆன்றோர் மொழிக்கேற்ப எப்பொருளையும் நடுநின்றாராயும் நல்லாராய் விளங்கும் உயர்திரு. மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களின் அணிந்துரையால் புலவர் உலகம் எனது சிறு கட்டுரையாம் இந்நூலினை நன்கு வரவேற்கும் எனப் பொதும் நம்புகின்றேன். இத்தகைய ஒப்பற்ற அணிந்துரை வழங்கிய பொயாருக்கு எனது நன்றி கலந்த வணக்கத்தைத் தொவித்துக்கொள்ளுகின்றேன்.

இந்நூலினை அழகுற அமைத்துத் திருத்தமுடன் அச்சிட்டுத் தந்த நமது தமிழ்ப்பொயார் திரு.வி.க. அவர்களின் அறிவிற் கலந்த சாது அச்சகத்தின் நிர்வாகி உயர்திரு. மு. நாராயணசாமி அவர்களுக்கும் எனது நன்றி கலந்த வணக்கம் உரித்தாகுக.

சென்னை
1-10-58

அன்பன்
T.S. ஸ்ரீபால்

1  2  3  4  5


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com