முகப்பு வாயில்

 


இவர், பொருத்தமற்ற தனது உரையைக் கொண்டு மேலும் பின்வருமாறு எழுதுகின்றார் :


"இப்பாடலில் காணும் இந்திர வில்லின் உண்மையை ஜைனர்கள் ஒப்புக்கொள்வதில்லை. பாகசித்து மறுத்துக் கூறுவர். அது நீலகேசி என்னும் ஜைன மத நூலிலிருந்து தொகிறது."

நீலகேசியும் ஆசீவக சமயமும்

இவர் கூறும் இக் கூற்றை நீலகேசியினின்றே ஆராய்வோம். நீலகேசி ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்று. காப்பியத்தலைவியான நீலகேசி பல சமயத் தலைவர்களுடன் வாதுசெய்து தோற்கடிக்கின்றாள். அவள் ஆசீவக சமயத்தலைவனான பூரணன் என்பவரைக் கண்டு வாதிக்கையில், அவன் தனது சமயக் கடவுளின் தன்மையை,

"உரையான் இறைவன் உணலும் இலனாய்த்
திரையான் நரையான் தொவில் உருவம்
வரையா வகைவா னிடுவில் அனையன்
புரையா அறிவிற் புகழ்பூ ரணனே"

எங்கள் இறைவன் மெளனமாக இருப்பவன். ஆகாராதிகள் அருந்தாதவன். நரை திரை மூப்பு இல்லாதவன். ஆகாயத்தில் காணும் வானவில்லைப் போலத் தோன்றும் தோற்றத்தையுடையவன் எனக் கூறுகின்றான். இதனைக் கேட்ட நீலகேசி உங்கள் கடவுள் பேரறிவாளன் எனக் கூறுகின்றாய். அவன் உரையாடான் என்றும் சொல்லுகின்றாய். அவ்வாறாயின் தான் அறிந்தவற்றை பிறர்க்கு உரைக்காமலிருப்பதின் காரணம் என்ன? மக்களிடம் அவருக்குச் சீற்றம் பிறந்துவிட்டதோ? என்றெல்லாம் பல பாக்களில் பாகசித்துக் கடைசியாக,

"வானிடு வில்லின் வரவறியாத வகையனென்பாய்
தானுடம்போடு பொறியின னாதலின் சாதகனா
மீனடைந் தோடும் விடுசுட ரான்கதிர் வீழ்புயன்மேற்
றானடைந் தாற்றனு வாமிது வாமதன் றத்துவமே"

"வானத்து இந்திர தனுசுப்போல இன்னவாறு வந்தனனென்று அறியாமல் தோன்றுவான் எம்முடைய ஆப்தன் என்று சொல்லுவாய். அவன் சாரேந்திரிய புத்தியாதிகளுடையனாதலின் பிறப்புடையனாம்; சாராதிகளையுடையான் பிறப்புடையனாகக் காணப்படுதலான். இனி ஆதித்திய கிரணம் மேக படலத்துப்பட்டால் வில்லுப் பிறக்கும்; அது போல் மற்கலி தேவனும் காரணஜன்யனாக விசைதியோ வென்றவாறு."

இங்கே ஆசீவகருடைய, கடவுள் பிறப்பிறப்பை உடையவர் என்பதை மெய்ப்பிக்க அவர்கள் கூறும் "வானிடு வில்லின் வரவறியாத வகையான்" என்னும் உவமையையே விளக்கிக் காட்டியுள்ளார் நீலகேசி.

இதனால் ஆசீவகான் கடவுள் தத்துவம் வீழ்ந்து விடுகிறது. ஆசீவகத் தலைவன் பூரணன் வாதத்தில் தோற்றுவிடுகின்றான். வானிடுவில் உவமையை கடவுளுக்குப் பொறுத்திக் கூறுதல் பொருந்தாது என்பதை மெய்ப்பிக்கவே வானிடுவில் உவமையைப் பாகசித்தாள் நீலகேசி. நாலடியாரில் காணும் வானிடுவில் உவமை, கடவுளைச் சார்ந்ததல்ல. உயிர்களின் வாழ்க்கை நிலையாமையைப் படம் பிடித்துக்காட்டுவது. நாலடியார் தோன்றிய காலம் முதல் அந்நூலில் காணும் வானிடுவில்லை மக்களின் வாழ்க்கை நிலையாமைக்கே, உரையாசிரியர்கள் பலரும் உவமை காட்டி வந்துள்ளார்கள் என்பதைப் புலவர் உலகம் நன்கு அறியும். நாலடியார் ஜைன சமயத்தைச் சார்ந்ததல்லவெனக் காட்டவேண்டி திரு. தி.நா.சு. அவர்கள் கடவுள் வாழ்த்திற்குத் தானே ஒரு புத்துரையை வலிந்து எழுதிக்கொண்டார் போலும்!

மேலும், ஒவ்வொரு சமயத்தாரும் தங்கள் தங்கள் கடவுளுக்கெனத் தனிச் சிறப்பொன்றைக் கூறுவார்கள். அவ்வாறு அசீவக சமயக் கடவுளுக்குத் தனிச் சிறப்பு மெளனம் சாதித்தலே யாகும். நீலகேசியில் ஆசீவகக் கடவுளைப் பற்றி, பூரணன் கூறுகையில் வாய்பேசாமை, உணவருந்தாமை, நரை, திரை, மூப்பு, சாக்காடு இல்லாமையாகிய தன்மையைக் கூறினானேயன்றி கானிலந் தோயாமையை யாங்கணுங் கூறவில்லை. திரு. தி.நா.சு. அவர்களோ கானிலந்தோயாமையை ஆஜீவக சமயக் கடவுளுக்குப் புதிதாக ஏற்ற உரை கூறியுள்ளார்.

கானிலந்தோயாக் கடவுள்

கானிலந் தோயாமை ஜைன சமயக் கடவுளுக்கே உரிய தனிச் சிறப்பென்பதைப் பண்டைய நூல்களிற் பரக்கக் காணலாம். அருகக் கடவுள் மலான் மிசை நடந்தவராகையால் அவர் கால்கள் பூமியில் பதிந்ததில்லை. எனவே அவரை கானிலந் தோயாக் கடவுள் எனப் போற்றுவது இயல்பேயாகும்.

பதுமனார் தமது விளக்க உரையில் "பூவின்மேல் வந்தருளு மிறைவன் என்பது கருத்து" என எழுதியுள்ளார். இக்கருத்தை மெய்ப்பிக்க அருகக் கடவுள் மலர்மிசை நடந்தவன் என்னும் வரலாறு ஒன்றே சாலும்.

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்" - திருக்குறள்

"மலர்மிசை நடந்தோன் மலரடி யல்லது" - சிலப்பதிகாரம்

"விரிபூந் தாமரை மேற்சென்ற திருவாரடி யேத்தி" - சீவக சிந்தாமணி

"விரைமலர்ந்த தாமரைமேல் விண்வணங்கச் சென்றாய்" - சூளாமணி

"விரையார் மலர்மிசை வருவார்" - திருக்கலம்பகம்.

இங்ஙனம் மலர்மிசை நடந்தவன் என்பதால் அவர் திருவடிகள் பூமியிற் படியா வென்பது சொல்லாமலே விளங்கும். இவ்வரலாற்றை வலியுறுத்தத் திருநூற்றந்தாதியில்,

"பூரணையாற் பதினாற் கயிற் றொக்கப் புவன மெல்லாம்
நீரணை மாருதந் தாங்கிய தொக்கு நிவந்த சிங்கம்
பேரணையாற் கிணையாரு மில்லாப் பொயோர்க்கு விண்ணோர்
பாரணையா வடிதாங்கச் செந்தாமரை பாரித்ததே"

என்றார். இச்செய்யுளின் ஈற்றடியாகிய "பார் அணையா அடி தாங்கச் செந்தாமரை பாரித்ததே" என்னும் வா "கானிலந்தோயாக் கடவுள்" என்னும் நாலடியார் கருத்துக்கு அரணாக அமைந்து, நமது ஆராய்ச்சிக்குப் புதை பொருளாகவும், அறிவு உலகுக்குக் கலங்களை விளக்கமாகவும் காட்சியளிக்கிறது என்பதை அன்பர் அறிவாராக.

எண்பெருங் குன்றங்கள்

இனி, எண் பெருங் குன்றுகளையும், சமண முனிவர்களையும் ஆராய்வோம். சமணர் என்ற சொல் சிரமண என்னும் வடசொல்லின் திரிபேயாகும். சிரமணர் என்றாலும் சமணர் என்றாலும் பொதுவாகத் துறவிகளையே குறிக்கும். சமணர் என்றால் பொதுவாகத் துறவிகளையே குறிக்கும். சமணர் என்றால் முற்றுந் துறந்தவர். இன்பம் துன்பம் இரண்டையும் சமத்துவமாக ஏற்பவர். நட்பு பகை அற்றவர். 'யான்' 'எனது' என்னும் செருக்கு அறுத்தவர். இன்னோரன்ன பல தூய ஒழுக்கங்களையுடைய துறவிகளுக்கே சமணர் எனும் பெயர் வழங்கிற்று. இச்சொல் முதன் முதல் ஜைன துறவிகளுக்கே உரியதாக அமைந்திருந்தது. இன்றும், சிறப்பாக சமணர் என்றால் ஜைனர்களையே குறிக்கும். இச்சொல்லைப் பிற்காலத்தில் தோன்றிய பெளத்தர்களும் ஆசீவகர்களும் தங்களுடைய துறவிகளுக்கும் ஏற்றிக்கொண்டனர். எனினும் அவர்கட்குச் சமணம் என்ற சொல் விரவி வழங்கவில்லை. ஆசீவகத் துறவிகள் ஆடையின்றி இருந்தாலும் அவர்களுக்குரிய துறவற ஒழுக்கங்கள் வேறு. அவர்கள் மலைகளில் வசித்ததாகத் தொயவில்லை. அம்முனிவர்கள் கையில் ஒரு தடியும், படுக்கைக்கு வேண்டிய தடுக்கும் வைத்திருந்தார்கள். பிழைப்புக்காகத் துறவு பூண்டவர்கள் என்றும் கூறுவதுண்டு.

"தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடுபிண்ட மதுவுண்டு
உழல்தரும் கடுப்பொடி உடற்கவசர்"

என ஞானசம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.

அச்சாதுக்களைப் பற்றிப் புத்தர் கூறுகையில் அவர்கள் பெண்களோடு சேருவதைப் பாவமல்வென்று கூறுகிறவர்கள்; அவர்கள் பெண்களின் அடிமைகள் என்றும் கண்டித்துள்ளார். இதனை மெய்ப்பிக்க புத்தமத நூலாகிய "மஜ்ஜிமனிகாய" என்னும் நூலில் ஆசீவக சாதுக்கள் அப்பிரம்மச்சாரிகள் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய ஆபாசத் துறவு அல்ல நாலடியாரில் காணும் துறவுநிலை. அது தூய துறவறத்தை வற்புறுத்துவது. இல்லறத்திலுடையவரும் பிறர் மனையை விரும்பலாகாதெனும் பேரறத்தை யுடையது நாலடியார். அது மட்டுமன்று, ஆன்ம தத்துவத்திலும் ஆசீவகக்கொள்கைக்கும் நாலடியாருக்கும் முரண்பாடுகள் நிறையக் காணப்படுகின்றன. இதிவ்வாறாக ஞானசம்பந்தர் ஆசீவகத் துறவிகளையும், பெளத்தத் துறவிகளையும், ஜைன சமயத் துறவிகளையும் சேர்த்துத் தமது தேவாரப் பாக்களில் ஒருங்கே பழிக்கும் பாக்களும் இருக்கின்றன.

1  2  3  4  5


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com