முகப்பு வாயில்

 


எண்ணாயிரம் முனிவர்கள் யார்?


எண்ணாயிரம் முனிவர்கள் என எண்ணும் பொழுதே நமது உள்ளங்களில் சந்திரகுப்த மெளா˘யப் பேரரசனாகிய மன்னனும் அவர்தம் குருவாகிய பத்திரபாகு சுவாமிகளும், அவருடன் தமிழகம் விஜயம் செய்த எண்ணாயிரம் ஜைன முனிவர்களும் காட்சி யளிக்கின்றனர். அது மட்டுமன்று! அவ்வெண்ணாயிரம் முனிவர்களும், தமிழகச் சுற்றுப்பிரயாணமும், அவர்கள் சிரவண பெளிகுளா சென்றதும், அங்கே பத்திரபாகு சுவாமிகள் கேவல ஞானம் பெற்று வீடுபேறு பெற்றதும், சந்திரகுப்த மன்னா˘ன் தவக்கோலமும் நமது அகக் கண்களின் முன்னே வந்து தோன்றுகின்றன. நமது இந்திய வரலாற்றில் இந்நிகழ்ச்சி குறிப்பிடத்தக்க தொன்றாக மதிக்கப்படுகிறது. இவ்வரலாற்றுண்மையை மெய்ப்பிக்கக் கல்வெட்டுச் செய்திகளும், பற்பல சின்னங்களும் காணப்படுவதால் இதனை மறைக்கவும் திரித்துக் கூறவும் இயலாது.

பத்திரபாகு சுவாமிகள் தமது எண்ணாயிரம் சீடர்களுடன் தமிழகம் விஜயம் செய்து ஆங்காங்குள்ள ஜைனக் கோயில்களையும், அறவோர் பள்ளிகளையும், அரசர்களையும், சாவக சாவகிகளையும் கண்டுகளித்தும் அறவுரைகள் ஆற்றியும் வந்தனர். இவ்வெண்ணாயிரவரும் தமிழக மலைகளிலே தவமியற்றும் ஜைன முனிவர்களுடன் தங்கி அளவளாவியும் வந்தனர். இவ்வாறு இம்முனிவர்கள் எண்ணாயிரவரும் தமிழகத்தில் சுற்றுப் பிரயாணம் செய்து தமிழக மக்களின் மனதைக் கவர்ந்தனர். அவ்வறவோர்கள் அறவுரைகளை மன்னர்களும், மக்களும் கேட்டு இன்புற்றனர். அத்தூய தவத்தோர்களை கடவுளர் எனவும் போற்றி வணங்கினர். இந்நிலையை பிற் காலத்தவராகிய கவிச்சக்கரவர்த்தி கம்பரும்,

"வில்லாள ரானார்க்கெல்லாம் மேலவன் விளிதலோடும்
செல்லாதவ் விலங்கை வேந்தர்க் காசெனக் களித்ததேவர்
எல்லாருந் தூசுநீக்கி ஏறிட வார்த்தபோது
கொல்லாத விரதத்தார்தம் கடவுளர் கூட்டமொத்தார்"

என ஜைன முனிவர்களைக் கடவுள் எனப் புகழ்ந்துள்ளார். எனவே அம்முனிவர்கள் தமிழக மக்கள் உயிர் கலந்து, உளங்கலந்து, ஊன் கலந்து விளங்கினர். இவ்வறவோர்கள் பலரும் சிரவண பெளிகுளா சென்றுவிட்ட பின்னரும் அவர்களைப் பற்றிய நினைவும், அவர்கள் தொகையாகிய எண்ணாயிரமும், அவர்கள் தொடர்பு கொண்ட மலைகளும் மக்கள் மனத்தை விட்டு அகலவேயில்லை. கி.மு.3-ஆம் நூற்றாண்டில் வழங்கிய எண்ணாயிரம் முனிவர்கள் என்ற தொகை எண்ணிக்கையில் குறைந்திருப்பினும் நாலடியார் காலத்தில் கலந்து ஞானசம்பந்தர் கதையில் புகுந்து பொ˘ய புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இதனால் எண்ணாயிரம் முனிவர்கள் எனில் எண்ணாயிரம் ஜைன முனிவர்களையே குறிக்கும் என்பதையும், அத்தொகை பத்திரபாகு சுவாமிகள் காலத்திருந்தே வழங்கிவரும் வரலாற்றுண்மை என்பதையும் எவராலும் மறுக்க வியலாது. இச்சம்பவத்தால் ஜைன முனிவர்களுக்கு எண்ணாயிரவர் என்ற மறு பெயரும் வழங்கி வந்துள்ளது என்பதையும் அறிகின்றோம். இந்திய வரலாற்று நூல்களில் பதிவாகி, வரலாற்றுத் துறைவல்லவர்களால் போற்றப்பட்டு வரும் இவ்வெண்ணாயிரம் ஜைன முனிவர்கள் வரலாற்றை மறைத்து அவர்களை ஆசீவக சமய முனிவர்கள் எனத் துணிந்து திரு. தி.நா.சு. அவர்கள் எழுதியது வியப்புக்குரியது.

இவ்வாறு இலக்கியச் சான்றுகளேயன்றி அம்மலைகளில் காணும் ஜைன அறவோர் பள்ளிகளின் அகச்சான்றுகளும் எண்ணிறந்தவை. இரண்டு ஆண்டுகட்கு முன்னர் யானும் உயர்திருவாளர்கள் : மயிலை-சீனி.வேங்கடசாமி அவர்கள், பேராசிரியர்-சதாசிவ பண்டாரத்தாரவர்கள், ஊ. ஜெயராமன் அவர்கள், மா.சு. சம்பந்தம் அவர்கள், மற்றும் சில நண்பர்களும் மதுரையைச் சுற்றியுள்ள திருப்பரங்குன்றம், ஆனைமலை, சமணர்மலை, ஆந்தைமலை, அழகர்மலை ஆகியவற்றிலுள்ள அறவோர்பள்ளிகளைக் கண்டு வந்தோம். அம்மலைகளில் ஜைன சமய தீர்த்தங்கரர் சிலைகள் முக்குடைகளுடன் விளங்குகின்றன. பாĄŁஸ்வநாதர் சிலை, மகாவீரர் சிலைகள் பற்பல சின்னங்களுடன் அப்பள்ளிகளில் காட்சியளிக்கின்றன. ஜைன முனிவர்களின் படுக்கைகளும், கல்வெட்டுச் செய்திகளும் கண்கொள்ளாக்காட்சியாக விளங்குகின்றன. இவ்வாறு இயற்கையாயமைந்திருக்கும் மலைக்குகைகளாம் ஜினப்பள்ளிகளை அக்கிருத்திம சைத்தியாலயம் என வடமொழியில் அழைப்பர். இவைபோன்று ஆசீவக சமயத்திற்குரிய சின்னங்கள் மருந்துக்கேனும் ஆங்கு காணவில்லை. மதுரைக்கு மேற்கே கம்பம் போகும் பாதையில் 6 மைல் தூரத்திலுள்ள சமணர் மலையைச் சுற்றிப் பார்க்கையில் இடையில் மற்றொருமலை தென்பட்டது. அம்மலையின் பெயரை அறிய ஆங்கு ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுவனை அணுகி அம்மலையின் பெயர் என்ன வென்று கேட்டோம். அவன் "ஓந்தை மலை" என்றான். அதனைக் கேட்டு வியப்புற்ற யாங்கள் அம்மலையின் அருகில் சென்றோம். யானையைப் போல் அமைந்திருக்கும் 'ஆனைமலை', நாகத்தைப் போன்று விளங்கும் 'நாகமலையை'ப் போலவே, அது ஆந்தையைப் போன்றே அமைந்திருந்தது. ஆந்தைமலை என்னும் பெயர் மருவி ஓந்தை மலையாயிற்று என அறிந்தோம். அம்மலையிலேயும் ஜைன தீர்த்தங்கரர் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே,

"பரங்குன்று ஒருவகம் பப்பாரம் பள்ளி
அருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம்
என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்
சென்றெட்டுமோ பிறவித் தீங்கு"


என்னும் பெருந்தொகை வெண்பாவிலுள்ள எண்பெருங்குன்றங்களையும் கண்டோமென மகிழ்ந்தோம். ஆந்தை ஓந்தையாகவும் திருஜினப்பள்ளி திருச்சினாப்பள்ளியாகவும் மாறியது போன்று பப்பாரம் என்னும் மலை வேறு பெயராகத் திரிந்திருக்கவேண்டுமென முடிவுசெய்தோம். அதன் பின்னர் யானும், கல்கத்தா, திரு. சோட்டேலால் ஜெயின் அவர்களும் சித்தர்மலை, கழுகுமலை, நாகமலை, கொங்கற்புளியங்குளம், குன்றக்குடி, உத்தமபாளையும், கீழையூர், மேட்டுப்பட்டி, கீளவளவு, கழுகுமலை முதலிய மலைகளையும் சுற்றிப்பார்த்தோம். அம்மலைகளிலும் தீர்த்தங்கரர் சிலைகளும் ஜைன முனிவர்களின் பெயர்களைக் கொண்ட கல்வெட்டுச் செய்திகளும் படுக்கைகளுமே நிறைந்திருக்கக் கண்டோம். இவைகளைக் கொண்டு திரு. தி.நா.சு.வின் எண்ணத்தையும் செயலையும் ஆராயின், நாலடியாரைத் தனது சமயத்தைச் சார்ந்ததெனச் சாதிப்பதற்கியலாமையால் இன்று நின்று நிலவும் சமண சமயத்தையும் சார்ந்ததாகக்கொள்ளக்கூடாதெனும் எண்ணத்தால் இத்தகைய செயலில் இறங்கியுள்ளாரென்பது தெற்றென விளங்கிவிட்டது. இதனால் இவர் கூறும் மற்ற மலைகளைப் பற்றிய செய்திகளும் கருத்துக்களும் வீண்வாதம் என்று விலக்குவோம்.

நாம் இதுவரை ஆராய்ந்தறிந்ததன் பயனாக நாலடியார் ஜைன அறவோர்களாலியற்றப் பெற்றதென வழிவழி வழங்கி வரும் வரலாறே உண்மை என்றும், பதுமனார் கடவுள் வாழ்த்துச் செய்யவில்லை என்றும், கடவுள் வாழ்த்தில் காணும் வானவில் உவமை மக்கள் வாழ்க்கையின் நிலையாமையைக் குறிப்பதே யன்றி, கடவுளுக்கு உவமை அல்ல என்றும், எண்ணாயிரம் மூகர் என்பவர்கள் எண்ணாயிரம் ஜைன முனிவர்களே யென்றும் அவ்வறவோர்கள் கலைவளர்த்த மலைகளே எண்பெருங்குன்றங்கள் என்றும், குன்றின் மேலிட்ட விளக்குபோல் விளங்கக் கண்டோம்.

தமிழ்ச்செல்வியின் தாய்வீடாம் ஜைன அறவோர்களின் வழி வளர்ந்த நூல்கள் யாவும் உலகுக்கே உரை செய்யும் பொது நூல்களாக, அன்பு நூல்களாக அமைந்திருப்பதை நோ˘தின் ஆய்ந்தோர் நன்கு உணர்வர். நமது கொள்கையை வலியுறுத்த,

"அறுபொருளும் ஐம்பதமும் நாற்கதியும் யார்க்கும்
உறுவதமும் வீட்ட தொளியும் - பொதுமறையான்
முன்னுரைத்தான் முக்குடைக்கீழ் மூவா முதல்வனன்றிப்
பின்னுரைத்தா ருண்டோ பிறர்"

எனத் தோத்திரத் திரட்டு வெண்பாவும் விளக்குகின்றது.
எனவே,


"பாலும் நெய்யும் உடலுக் குறுதி
வேலும் வாளும் அடலுக் குறுதி
ஆலும் வேலும் பல்லுக் குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி"

என்னும் பழம் பெரும்பாட்டைப் பாடி, தமிழ் மறையாம் திருக்குறள் போலவே நாலடியாரும் ஜைன அறவோர்களால் இயற்றப்பெற்ற அறநூலே என அறிந்து பெருமை கொள்வோம்!

வாழ்க தமிழகம்! வளர்க தமிழ்மொழி! வெல்க நல்லறம்!நாலடியாரைப் பற்றிய பண்டைய வரலாற்றுச் சிறப்புரைகள்

"வெள்ளான் மரபுக்கு வேதமெனச் சான்றோர்
எல்லாருங் கூடி எடுத்துரைத்த-சொல்வாய்ந்த
நாலடி நானூறு நன்கினி வென்மனத்தே
சீலமுட னிற்கத் தெளிந்து" (1)


"மன்னன் வழுதியர் கோன்வையைப் பேராற்றின்
எண்ணி இருநான் கோடாயிரவர் - உன்னி
எழுதியிடு யேட்டில் எதிரே நடந்த
பழுதிலா நாலடியைப் பார்" (2)


"எண்ணாயிரவர் இசைத்த வெண்பா நானூறுங்
கண்ணாமிந் நாலடியாரைக் கற்றுணரத்-தண்ணார்
திருக்குகூர் மாறனையே தேர்ந்துமறை தேர்ந்த
தருக்குருகூர் மாறனையே நேர்" (3)


"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி-மாமூலம்
இன்னிலைய காஞ்சியோடு ஏலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க்கணக்கு" (4)


"பாலு நெய்யு முடலுக்குறுதி
வேலும் வாளும் மடலுக் குறுதி
ஆலும் வேலும் பல்லுக் குறுதி
நாலு மிரண்டும் சொல்லுக் குறுதி" (5)


"பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்" (6)


"நாலடி இரண்டடி கற்றவனிடத்து
வாயடி கையடி அடிக்காதே" (7)


"நாலடி வள்ளுவ ராமேயிப் பாலை நடந்த பெருங்
காலடி மேலடி மானடி யேகட் டுரலிற்பட்ட
பாலடி சில்வெண்ணெ யுண்டோ னரங்கன் பனிவரையில்
வேலடி முள்ளுக் குபாயமிட் டேகும் விரகு நன்றே" (8)

"நானூறும் வேதமா நானூறு நானூறா
நானூறுங் கற்றற்கு நற்றுணையா-நானூறும்
பண்மொழியாள் பாகம் பகிர்ந்து சடைக்கரந்த
கண்ணுதலான் பெற்ற களிறு" (9)

அதிகார வகுப்பு

"வளங்கெழு திருவொடு வையக முழுதும்
உளங்குளி ரின்பத் தின்ப முவப்ப
வண்பெருஞ் சிறப்பின் மாதவம் புரிந்தா அங்
கெண்பெருங் குன்றத் திருந்தவ முனிவரர்
அறம்பொரு ளின்பம் வீடேனு மிவற்றின்
திறம்பிற ரறியுந் திறத்தை நாடிப்
பண்புற வெடுத்துப் பாங்குறப் பகர்ந்த
வெண்பா வியலெண் ணாயிர மிவற்றுட்
பாரெதிர் கொண்டு பரவி யேத்த
நீரெதிர் வந்து நிரையணி பெற்ற
மேனூற் றகையின் விதிமுறை பிழையாஅ
நானூ றவற்றி னயந்தொ˘ந் தோதிய
மறுமலர்த் தண்டார்ப் பதுமன் தொ˘ந்த
ஐயமில் பொருண்மை யதிகா ரந்தாம்
மெய்யா நலத்த வெண்ணைந் தவற்றுள்
அறவியல் பதிமூன் றரசர்க் குரிய
பொருளிய லிருபத் தொருநான் கின்பம்
ஆன்ற வகையை மூன்றென மொழிந்தனன்
சான்றோ ரேத்துந் தருமத் தலைவனே"
 

1  2  3  4  5


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com