முகப்பு வாயில்

 


யாத்திரைப்பகுதி:

விசய மங்கலம் கொங்குவேளிர் ஆட்சித் சிறப்பும் பெருங்கதை என்னும் பெருங் காப்பியப் பிறப்பும் தமிழ்ச் சங்கப் பெருமையும் ஐம்பெரும் புலவர்களின் உருவச் சிலைகளின் காட்சியும் ஆதிபகவன் கோயிற் சிறப்பும் கொண்டு விளங்குவதால் இப் பெரும் பகுதி புலவர் பெரு மக்களுக்கும் கவிஞர்களுக்கும் தமிழார்வம் படைத்த அறிஞர்களுக்கும் மாணவ மாணவிகளுக்கும கலைமலிந்த யாத்திரைப் பகுதியாகும். இவ்வாறு விசய மங்கலத்தை யாத்திரைப் பகுதியாகும். இவ்வாறு விசய மங்கலத்தை யாத்திரைப் பகுதியாக விளங்கச் செய்தால் தமிழ் நாட்டிற்கும் தமிழ் மொழிக்கும் புலவர் பரம்பரைக்கும் கவிஞர் பரம்பரைக்கும் பெருமையும் அழியாப் புகழையும் உண்டாக்கும். இதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிய ஒரு அரிய நிகழ்ச்சியைக் காண்போம்.

ஈரோடு செங்குத்தர் உயர்நிலைப் பள்ளி தலைமைத் தமிழாசிரியர் புலவர் பெருந்தகை வே. ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் எழுதிய ஒரு கட்டுரையில் காணும் நிகழ்ச்சி நமது கொள்கைக்கும் ஆர்வத்திற்கும் அரணாக அமைந்துள்ளது.

"நான் என் இளமைப் பருவத்தில் ஈரோட்டிற்கு வந்தேன், அப்பொழுது யாழ்ப்பாணம் உயர் திரு. சி. தாமோதரம் பிள்ளை அவர்களின் குமாரர் திரு. கிங்ஸ்பா என்பவர் இன்று நாலரை மணிக்குச் சொற்பொழிவு வாற்றுவார் இடம் லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளி ஈரோடு என்று எழுதப்பட்டிருந்த அச்சு விளம்பரம் ஒன்று எனக்குக் கிடைத்தது. திரு தாமோதரம் பிள்ளையின் குமாரர் என்பதற்காக 4-30 மணி சுமாருக்கு அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அறிஞர் கூட்டம் திரண்டிருந்தது. அவர் அவ்விடம் இல்லை. 5-30 மணி சுமாருக்கு அப் பொயார் நரைத்துப் பழுத்த முழுமைத் தோற்றத்துடன் ஆங்கில உடையில் காட்சியளித்தனர். நான் விரைவாக எழுந்து வணங்கி நின்று 'ஐயா அவர்கள் வருவதற்கு நேரமாய் விட்டது என்றேன். அவர் என்னை அமரச் செய்து என்னுடன் அமர்ந்து "நான் உங்கள் கொங்குவேளிர் பிறந்த ஊரைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தேன்." என்றார் எனக்குத் திகைப்பண்டாயிற்று என் அடுத்தகேள்விக்கு விடையாக நான் ஆங்கிலத்தில் தமிழிலக்கிய வரலாறு என்னும் நூல் எழுதுகிறேன். அதன்பொருட்டு கொங்குவேளிர் பிறந்த விசயமங்கலத்தைப் பார்க்கவே கொழும்பிலிருந்து இங்கு வந்தேன். அங்கு போய்வருவதற்கு இந்நேரமாய்விட்டது என்றார்கள். நான் அப் பொயார் தமிழ் அறிஞர்கள்பால் கொண்டுள்ள ஆர்வத்தையும் பற்றையும் கண்டு உள்ளம் பூரித்தேன் என எழுதியுள்ளார்"

இந் நிகழ்ச்சி ஆராயின் விசயமங்கலம் தமிழ்ப் புலவர்களின் உள்ளங்களை ஈர்க்கும் பெருமை வாய்ந்தென்பதை மெய்ப்பிக்கிறது.

பெருங் கதையின் நூலாசிரியர் கொங்குவேளிர் வாழ்ந்த விசய மங்கலத்தைக் கண்டு மகிழ்வதற்கு ஈழத்திலிருந்து வருகை தந்த அறிஞர் திரு. கிங்ஸ்பா அவர்களுக்குண்டாகிய தமிழ்ப் பற்றும் பண்டைய இலக்கிய வரலாற்றும் பதியைப் போற்றும் பண்பும், தமிழகத்திலுள்ள புலவர்களுக்கும், கவிஞர்களுக்கும் தமிழ்ப் பேரன்பர்களுக்கும் வரலாற்றாராய்ச்சித் துறையினருக்கும், ஏற்படும் என்பதில் ஐயமில்லை.

தமிழகத்தின் தலைசிறந்த வரலாற்றுப் பதிகளில் விசயமங்கலம் இலக்கிய வரலாற்றுத் திருப்பதியாகும். விசய மங்கலத்திற்கு விசயம் செய்யுங்கள் என அறைகூவி அழைக்கிறது வரலாற்றுச் சான்று! விசயமங்கலம் பழம்பெரும் கலைப்பகுதியைக் கண்டு களியுங்கள் என்கிறது. கொங்குவேளிரின் இலக்கியத் தொண்டு! தமிழகத்துப் புலவர் பெருமக்களே! கவிஞர்களே! தமிழகத்துப் புலவர் பெருமக்களே! கவிஞர்களே! உங்கள் முன்னோடிகளாய் விளங்கும் எங்கள் உருவச் சிலைகளைக்கான வாருங்கள் என அன்போடு அழைக்கின்றன. ஐம்பெரும் புலவர்களின் உருவச் சிலைகள்! தமிழகப் பெருமக்களே தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் பணியாற்றிய 'தமிழ் மங்கையாம்' விசய மங்கலத்திற்கு வீறுகொண்டு வாருங்கள் என்கிறது கொங்குவேளிர் தமிழ்ச்சங்கம்! மன்னர் பெருமானும் இணையற்ற தமிழ்ப் புலவருமான கொங்கு வேளிர் ஆட்சி செலுத்தியும் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் மொழியை வளர்ததும் வந்த விசயம மங்கலத்தை நமது சென்னை அரசாங்கம் பாதுகாக்கவும், புதுபிக்கவும் இலக்கிய யாத்திரைத் தலமாக விளங்கச் செய்யவும் கடமைப்பட்டுள்ளது. பழம்பெரும் புதை பொருள் ஆராய்ச்சியாளான் தலையாய கடமையுமாகும். இவ்வாறு யாத்திரைத் தலமாகவும் சுற்றுவாவினர் கண்டு களிக்கும் பகுதியாகவும் ஏற்பாடு செய்யின் நமத பாரதநாட்டு அறிஞர்கள் மட்டுமின்றி அயல்நாட்டுப் பேரறிஞர்களும் விசயமங்கலத்தைக் காண விழைவார்கள் இவ்வியலக்கிய யாத்திரையால் தமிழகத் திற்கும் தமிழ் மொழிக்கும் மேலும் மேலும் புகழும் பெருமையும் வளர்ந்து உலகெல்லாம் பரவும். ஆதலின் ஆண்டு தோறும் அறிஞர்கள் அனைவரும் அவ்விடத்தில் கூடி கொங்குவேளிர் நினைவு விழாக் கொண்டாடுவோமாக!

நமது மதிப்பிற்குரிய தமிழக முதல் அமைச்சர் உயர்திரு. M. பக்தவச்சலம் அவர்கள் விசயமங்கலத்துக் கோயிலைப் புதுப்பித்து அக் கலைப்பகுதி மறுமலர்ச்சி பெற்று யாத்திரைப் பகுதியாகவும் சுற்றுலாக் காட்சி நகராகவும் விளங்க ஆவன செய்வதாக உறுதி கூறியுள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தொவித்துக் கொள்ளுகின்றேன். இப் பெரும் பணிக்குத் தமிழக மக்கள் பலரும் பெருந்துணை புரிந்து சிறப்பிக்கக் கோருகிறேன்.

தமிழ் மங்கையாம் விசயமங்கலக் கலைப்பகுதியைக் கண்டு களிப்பதோ நமது புனித யாத்திரை நின்றுவிட வில்லை. ஜைன அறவோர்கள் தமிழ்மொழி சிறப்புற அரும் பெரும் இலக்கியங்கள், இலக்கணங்கள், இசை, நாடகம, நீதி நூல் ஆகியவற்றை வழங்கிய அரிய காட்சிகளையும் விசய மங்கலத்தைச் சுற்றி பத்து மைல்களுக்குள்ளாக விளங்கும் பல்வேறு திருப்திகளையும் காணலாம்.

நன்னூல் யாத்த திருப்பதி

புலவர் பெரு மக்கள் பலராலும் போற்றிப் புகழும் நன்னூல் என்னும் தலைசிறந்த இலக்கண நூலை இயற்றியருளிய பவணந்தி முனிவர் பிறந்து வாழ்ந்த சனகாபுரத்தை அக் கால மக்கள் ஜினபுரம் எனச் சிறப்புப் பெயரால் அழைத்துப் போற்றியது பிற்காலத்தில் சீனாபுரம் என மருவி வழங்கப்படுகிறது. அக் கிராமத்தில் பவணந்தி முனிவர் வழிபாடியற்றிய ஆதிநாதர் கோயில் இன்றும் நின்று நிலவுகிறது. இக் கோயில் பவணந்தி முனிவான் நினைவுச் சின்னமாக அமைந்துள்ளது. இவ் வரலாற்றை

'கங்கக் குரிசில் உவக்கநன் னூலைக் கனிந்துபுகல்
துங்கப் புலமைப் பவணந்தி மாமுனி தோன்றிவளர்
கொங்கிற் குறும்பு தனில் ஆதி நாத குருவிளங்கும்
மங்குற் பொழிற்சன காபுர மும்கொங்கு மண்டலமே'

எனக் கொங்கு மண்டல சதகம் போற்றுகிறது. தொல் காப்பியத்திற்குப்பின் புலவர் உள்ளங்களைக் கவர்ந்து பவணந்தி முனிவான். பழம் பதியைக் கண்டு களிக்க வேண்டாமா?


 

1   2  


 

 

முகப்பு வாயில்        www.jainworld.com